ஈரோடு தங்கும் விடுதியில் பெண் கழுத்தை நெரித்து கொலை - காதலர் ஓட்டம்

Posted By:
Subscribe to Oneindia Tamil

ஈரோடு: ஈரோடு நகரில் தனியார் தங்கும் விடுதியில் பெண் ஒருவரின் சடலம் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. பெண்ணின் சடலத்தை மீட்ட போலீசார் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளார்.

ஈரோடு நகரில் உள்ள காமதேனு விடுதிக்கு பெங்களூருவில் இருந்த வந்த தேவா என்ற நபர் அறை எடுத்து தங்கினார். காலையில் ரயில் டிக்கெட் எடுக்கச் செல்வதாக கூறி விட்டு சென்றார்.

Woman found dead in lodge, boyfriend on the run

வெகுநேரமாகியும் அந்த நபர் வராததால் சந்தேகமடைந்த ஹோட்டல் நிர்வாகிகள் அறைக்கு சென்று பார்த்த போது பெண் மர்மமான முறையில் இறந்து கிடந்தார்.

சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் சடலத்தைக் கைப்பற்றி விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
A woman was on Tuesday found dead under mysterious circumstances in a lodge in Erode. Police suspect she may have been raped and murdered by her boyfriend.
Please Wait while comments are loading...