கோவை: மாமியாரை கூலிப்படை வைத்து கொலை செய்த மருமகள் கைது!
கோவை: கோவையில் கள்ளத் தொடர்பை கண்டித்த மாமியாரை கூலிப்படை வைத்து கொலை செய்த மருமகளை காவல் துறையினர் கைது செய்தனர்.
கோவை, ஒண்டிப்புதூர் பகுதியை சேர்ந்தவர் பாலசுப்பிரமணியம். இவரது தாயார் ரங்கநாயகி. பாலசுப்பிரமணியம் தனது தாயாரின் வீட்டின் அருகிலேயே வசித்து வருகிறார்.
இந்நிலையில் இன்று காலை ரங்கநாயகியின் வீட்டுக்கு வந்த மர்ம நபர்கள் சிலர் ரங்கநாயகியை கழுத்தை அறுத்து கொடூரமாக கொலை செய்து விட்டு தப்பி ஓடி விட்டனர்.
அருகில் இருந்தவர்கள் கொலை சம்பவம் குறித்து சிங்காநல்லூர் காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த சிங்காநல்லூர் காவல் துறையினர் வீட்டில் பதிவாகி இருந்த கைரேகை மற்றும் தடயங்களை சேகரித்தனர்.
இது தொடர்பாக காவல் துறையினர் மேற்கொண்ட விசாரணையில், தனது கள்ளத் தொடர்பு மாமியார் ரங்கநாயகிக்கு தெரிந்ததால், மருமகள் பத்மபிரியா கூலிப்படை வைத்து மாமியாரை கொலை செய்து இருப்பது தெரியவந்தது.
இதனையடுத்து மருமகளை கைது செய்த காவல்துறையினர் அவரிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் கூலிப்படையினர் குறித்தும் காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் கோவையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ்












Click it and Unblock the Notifications