கள்ளக்காதலை தட்டிக் கேட்ட மனைவி.. கழுத்தை நெரித்து கொன்று தூக்கில் மாட்டிய கணவன் வீட்டார்!
திருப்பத்தூர்: நாட்றம்பள்ளி அருகே கள்ளக்காதலை தட்டி கேட்ட மனைவியை கணவன் உட்பட மாமனார், மாமியார் கழுத்தை நெரித்து கொலை செய்து விட்டு தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக நாடகமாடியது அம்பலமானது.
Recommended Video
திருப்பத்தூர் மாவட்டம், நாட்றம்பள்ளி அடுத்த கருணாநிதி தெரு பகுதியைச் சேர்ந்தவர் பிரியங்கா (23). அவரது கணவர் சிலம்பரசன். தாதனவலசை ,ஜெ.ஜெ.நகர், பொம்மிகுப்பம் திருப்பத்தூர் பகுதியை சேர்ந்த இவர்களுக்கு கடந்த 2018-ம் ஆண்டு திருமணம் நடைபெற்றது.
இவர்கள் நாட்றம்பள்ளி பகுதியிலேயே வாடகை வீடு எடுத்து வசித்து வருகின்றனர். இவர்களுக்கு இரண்டு ஆண் குழந்தைகள் தர்ஷன் (3), ஆரியா (2) என்ற குழந்தைகள் உள்ளனர்.

சூப்பர்வைசர்
கணவர் சிலம்பரசன் தனியார் ஊதுவத்தி கம்பெனியில் சூப்பர்வைசராக பணியாற்றி வருகிறார். அதே கம்பெனியில் புதுப்பேட்டை பகுதியைச் சேர்ந்த அனிசியா உடன் கள்ளத்தொடர்பு ஏற்பட்டு 5 மாத கர்ப்பிணியாக்கியுள்ளார். இதனை அறிந்த பிரியங்கா கணவரின் கள்ளக்காதலை தட்டி கேட்டதால் இருவருக்கும் சில மாதங்களாக வாய்த் தகராறு இருந்து வந்துள்ளதாக தெரிகிறது.

பிரியங்காவிடம் தகராறு
சிலம்பரசனின் தந்தையான ரவிச்சந்திரன் மற்றும் தாயார் கலா ஆகியோரும் பிரியங்காவிடம் அடிக்கடி தகராறில் ஈடுபட்டு வந்ததாக தெரிகிறது. அதன் காரணமாக வாய்த்தகராறு அதிகரித்த நிலையில் பிரியங்காவின் கழுத்தை கயிற்றால் இறுக்கிவிட்டனர். பின்னர் அவரது உடலை மின்விசிறியில் தூக்கிட்டு இறந்தது போல உடலை தொங்க விட்டுள்ளனர்.

காவல் துறை
அதன் பின்னர் சிலம்பரசனின் குடும்பத்தாரே நாட்றம்பள்ளி காவல்துறையினருக்கு பிரியங்கா தூக்கிட்டு இறந்து விட்டதாக தகவல் தெரிவித்துள்ளனர். அதேபோல் பிரியங்காவின் குடும்பத்திற்கும் தகவல் தெரிவித்துள்ளனர். இதனால் பதறிப்போய் வீட்டிற்கு வந்த பிரியங்காவின் தந்தை ராஜா (50) பெண்ணின் உடலில் இருந்த காயங்களைப் பார்த்து தனது மகள் தூக்கிட்டு இறக்கவில்லை.

அடித்து உதைத்த மருமகன் குடும்பத்தினர்
மருமகன் குடும்பத்தினரே அடித்து உதைத்துள்ளனர். தனது மகளின் சாவில் சந்தேகம் இருப்பதாக கூறி நாட்றம்பள்ளி போலீசாரிடம் புகார் அளித்தார். அதன்பேரில் நாட்றம்பள்ளி உதவி காவல் ஆய்வாளர் முனிரத்தினம் வழக்குப்பதிவு செய்து மூன்று பேரையும் விசாரிக்கையில் தாங்கள் கொலை செய்து மின்விசிறியில் தூக்கு மாட்டிக் கொண்டது போல் நாடகம் ஆடியதை ஒப்புக் கொண்டனர்.

சிறையில் அடைப்பு
அதன்பேரில் சிலம்பரசன் மற்றும் தாய் தந்தை ஆன ரவிசந்திரன், கலா மீது வழக்கு பதிவு செய்து சிறையில் அடைத்தனர். கள்ளக்காதல் காரணமாக பொய் நாடகம் ஆடி கணவன் உட்பட மாமனார் மாமியாரே அடித்துக் கொலை செய்த சம்பவம் நாட்றம்பள்ளி பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இது போன்று கள்ளக்காதல்களால் நிறைய கொலைகள், தற்கொலைகள், குடும்பத் தகராறுகள் ஏற்படுகின்றன. பல குழந்தைகள் ஆதரவற்று கிடக்கின்றனர். அண்மைக்காலமாக வரதட்சிணைக் கொடுமை, கள்ளக்காதல் போன்றவற்றால் கொலைகள், கொலை வெறி தாக்குதல்கள் அதிகரித்து வருகின்றன. சுயக்கட்டுப்பாடு, சுய ஒழுக்கம் ஆகியவை இருந்தால் மட்டுமே இது போன்ற கொலைகள் தடுத்து நிறுத்தப்படும் என்பது உளவியல் நிபுணர்களின் கருத்தாக உள்ளது. இது போல் கள்ளக்காதலுக்காக கணவன் மனைவியை கொலை செய்வது, மனைவி கணவனை கொலை செய்வது உள்ளிட்டவற்றால் ஒருவர் மரணித்தும் இன்னொருவர் சிறைக்கும் செல்ல நேரிடுகிறது. இவர்களின் சபல புத்தியால் சின்னஞ்சிறு குழந்தைகள் ஆதரவை இழந்து தவித்து வருகிறார்கள்.












Click it and Unblock the Notifications