ஜாமீன் கிடைக்கலையே: சிறையில் பெண் கைதி தூக்கு போட்டு தற்கொலை!
புதுச்சேரி: புதுச்சேரி சிறையில் அடைக்கப்பட்டிருந்த பெண் கைதி ஒருவர் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஜாமீன் கிடைக்காத விரக்தியில் அவர் இந்த முடிவை மேற்கொண்டதாக போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது.
காரைக்காலை சேர்ந்த அம்பிகா என்ற பெண் கடந்த அக்டோபர் மாதம் தனது மகளுக்கு திருமணம் செய்து வைத்தார். அப்போது, அந்த மணப்பெண்ணுக்கு வயது குறைவு என்று காவல்துறைக்கு புகார் வந்துள்ளது.

இதுகுறித்து காவல்துறையினர் நடத்திய விசாரணையில், அம்பிகா தனது 16 வயது மகளுக்கு திருமணம் செய்து வைத்திருப்பது தெரிய வந்தது. இதையடுத்து, அம்பிகா மீது குழந்தை திருமணம் செய்து வைத்ததாக வழக்கு பதிவு செய்த காவல்துறையினர், அவரை கைது செய்து புதுச்சேரி சிறையில் அடைத்தனர்.
சிறையில் இருந்தபடி அம்பிகா ஜாமீன் கோரி இருந்தார். ஆனால், அவருக்கு ஜாமீன் கிடைக்கவில்லை. இந்நிலையில், தான் சிறையில் அடைக்கப்பட்டு 3 மாதங்கள் ஆகியும் ஜாமீன் கிடைக்கவில்லையே என்ற விரக்தியில் அம்பிகா தனது அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
பலத்த பாதுகாப்புக்கிடையே பெண் கைதி அம்பிகா தனது அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது குறித்து சிறைத்துறை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications