காரைக்கால் பீச்சில் பட்டப்பகலில் பெண் பாலியல் பலாத்காரம்
காரைக்கால்: காரைக்கால் கடற்கரையில் பட்டப்பகலில் பெண் ஒருவர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
காரைக்கால் கல்லூரி ஒன்றில் வேலை பார்க்கிற இளம் பெண் ஒருவர் அதே கல்லூரியில் படிக்கும் ஒரு மாணவனுடன்(காதலன்) கடற்கரைக்கு சென்றுள்ளார்.
அப்போது திடீரென அங்கு பைக்கில் வந்த மூன்று இளைஞர்கள் தங்களை போலீஸ் என்று அறிமுகப்படுத்திக் கொண்டு அப்பெண்ணை தாங்கள் வந்த பைக்கில் ஏற்றி கொண்டு செல்ல முயற்சி செய்துள்ளனர். உடனே அந்த பெண்ணை அவரது காதலன் தனது பைக்கில் ஏற்றி சென்றுள்ளார்.
இந்த நிலையில் அவர்களை பைபாஸ் ரோடு வரை துரத்திக் கொண்டு போய் அவர்கள் போன பைக்கை மடக்கி காதலனை தாக்கி, அந்த பெண்ணை தங்களின் பைக்கில் வலுக்கட்டாயமாக அந்த 3 பேர் ஏற்றிச் சென்றுள்னனர்.
கடற்கரையில் உள்ள பாலத்திற்கு அடியில் உள்ள பெரிய ராட்சத்திர தண்ணீர் குழாய்க்குள் இழுத்துச் சென்று மூவரும் அப்பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர்.
இதனையடுத்து இது குறித்து காரைக்கால் காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனே போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வருவதற்குள் மூன்று குற்றவாளிகளில் ஒருவன் தப்பி ஓடிவிட்டான்.
சிக்கிய இரு குற்றவாளிகள், பாதிக்கப்பட்ட பெண், அவரது காதலனை நகர காவல் நிலையத்துக்கு போலீசார் அழைத்து சென்று விசாரணை மேற்கொண்டனர். பாதிக்கப்பட்ட பெண் காரைக்கால் அரசு பொது மருத்துவமனையில் சிகிச்சை மற்றும் மருத்துவ பரிசோதனைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
விசாரணையில் பாதிக்கப்பட்ட பெண்னும், அவரது காதலனும் உள்ளூரைச் சேர்ந்தவர்கள் என்றும், குற்றவாளிகள் மூவரும் நாகப்பட்டினம் மாவட்டம் அக்கரைப்பேட்டை மீனவ கிராமத்தைச் சேர்ந்தவர்கள் என்பதும் தெரிய வந்துள்ளது.
கடந்த சில மாதங்களுக்கு முன்பு காரைக்காலில் நன்னிலத்தைச் சேர்ந்த ஒரு பெண்ணை கடத்தி பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் தொடர்பாக 15 பேரை போலீசார் கைது செய்ததும், இச்சம்பவம் நடந்த ஒரே வாரத்தில் தேசிய நெடுஞ்சாலையில் நிரவி என்ற இடத்தில் குல்பி விற்பவரின் இளம் மனைவியை சிலர் காரில் கடத்த முயன்ற சம்பவமும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது என்பது குறிப்பிடதக்கது.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications