மீண்டும் அதிகரிக்கும் குழந்தை திருட்டு-நாகப்பட்டினத்தில் பரபரப்பு
நாகப்பட்டினம்: நாகப்பட்டினத்தில் ஒரு பெண், பச்சிளம் குழந்தையை திருடிச் சென்ற சம்பவம் அனைவரையும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது.
நாகை மாவட்டம் திருமருகலை அடுத்த திருகண்ணபுரம் பெரிய நாட்டார் தோப்பு பகுதியைச் சேர்ந்தவர் பாலகிருஷ்ணன். இவர் திருப்பூரில் தனியார் கம்பெனியில் டிரைவராக வேலைபார்த்து வருகிறார். இவர் கோயமுத்தூரைச் சேர்ந்த கிருத்திகா என்ற பெண்ணை காதல் திருமணம் செய்துகொண்டார்.
இவர்களுக்கு 2 வயதில் ஒரு பெண் குழந்தை உள்ளது. இந்நிலையில் கிருத்திகா மீண்டும் கர்ப்பமடைந்து பிரசவத்திற்காக திருகண்ணபுரம் ஆரம்ப சுகாதார நிலையத்தில் சேர்க்கப்பட்டார். அங்கு கடந்த வாரம் கிருத்திகா 2 வது பெண் குழந்தையை பெற்றெடுத்தார்.
இதையடுத்து குடும்ப கட்டுப்பாடு அறுவை சிகிச்சை செய்வதற்காக கிருத்திகா நாகை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு குடும்பக் கட்டுப்பாடு அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.
கிருத்திகாவுக்கு உதவியாக கணவர் பாலகிருஷ்ணன் மருத்துவமனையில் தங்கி இருந்தார். இந்நிலையில் பாலகிருஷ்ணன் வெளியே சென்ற நேரத்தில் தனியாக இருந்த கிருத்திகாவிடம் அங்கு வந்த 30 வயது மதிக்கதக்க கர்ப்பிணி பெண் ஒருவர் குழந்தைக்கு தடுப்பூசி போட வேண்டும் என்று கூறி குழந்தையை தூக்கி சென்றார்.
நீண்ட நேரமாகியும் அந்த பெண் திரும்பி வராததால் அதிர்ச்சியடைந்த கிருத்திகா தனது கணவருக்கும், அருகில் இருந்தவர்களிடமும் தகவல் தெரிவித்தார். இதையடுத்து அங்கு இருந்தவர்கள் மருத்துவமனை முழுவதும் தேடியும், அந்த பெண்ணும், குழந்தையும் கிடைக்கவில்லை. பின்னர் இதுகுறித்து பாலகிருஷ்ணன் மருத்துவமனையில் உள்ள புறக்காவல் நிலையத்தில் புகார் செய்தார்.
புகாரின்பேரில் மாவட்ட போலீசார் மருத்துவமனைக்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். மேலும் மருத்துவமனையில் பொருத்தப்பட்டுள்ள சி.சி.டி.வி கேமிராவை சோதனை செய்தனர். இதில் குழந்தையை திருடிச்சென்ற பெண்ணின் உருவம் பதிவாகி இருந்தது.
கேமிராவில் பதிவாகி இருந்த உருவத்தை வைத்து குழந்தையை திருடிச் சென்ற பெண்ணை போலீசார் தேடி வருகின்றனர்.
கிருத்திகா முதலில் திருக்கண்ணபுரம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் அனுமதிக்கப்பட்டு இருந்ததால் அங்குள்ள ஊழியர்கள் மீதும் போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது. இது தொடர்பாக அங்குள்ள ஊழியர்களை திட்டச்சேரி போலீசார் அழைத்து சென்று விசாரணை நடத்தி வருகிறார்கள்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications