ஆண்களுக்குப் போட்டியாக பெண்களும் போதையில் உலாவும் கொடுமை.. கரூரில்!
கரூர்: கரூரில் சமீப காலமாக ஆண்களுக்கு இணையாக பெண்களும் போதையில் ஆங்காங்கே ரகளையில் ஈடுபடுவதும், விழுந்து கிடப்பதும் அதிகரித்து வருவதால் மக்களிடையே கவலை ஏற்பட்டுள்ளது.
தமிழகத்தில் எது விற்கிறதோ இல்லையே மது மட்டும் நன்றாக விற்கிறது. மது விற்பனையில் தமிழகம் ஆண்டுக்கு ஆண்டு சாதனை படைத்தும் வருகிறது.

மது ஒழிப்புக்காகவும், மது விலக்குக்காகவும் சில மாதங்களுக்கு முன்பு தமிழகத்தில் மிகப் பெரிய அளவில் போராட்டங்கள் எல்லாம் நடந்தன. ஆனால் எல்லாம் பழங்கதையாகி விட்டது. மீண்டும் மது வாடை தமிழகத்தை படு வேகமாக மயக்கி வருகிறது.
இந்த நிலையில் கரூரில் ஆண்களுக்கு இணையாக பெண்களும் மது போதையில் பொது இடங்களில் நடமாடுவதும், விழுந்து கிடப்பதும் அதிகரித்து வருகிறது.
கரூர் மினி பேருந்து நிலையம் ஓரத்தில் ஒரு பெண்மணி நேற்று இரவு வரை போதையில் மற்றொரு வாலிபருடன் கிடந்துள்ளார். இதே பகுதியில் கரூர் லைட் ஹவுஸ் கார்னர் பகுதியில் கடந்த சில வாரங்களுக்கு முன்னர் குடும்ப பெண் ஒருவர் மதுவை அருந்தி விட்டு, பேருந்துகளையும், இரு சக்கர வாகனங்களையும் மறித்து கெட்ட வார்த்தைகளினால் அனைவரையும் அபிஷேகம் செய்யும் நிகழ்ச்சி அரங்கேறியது. அதை தட்டிக் கேட்ட தன் புருஷனையே செருப்பால் அடித்த சம்பவமும் அரங்கேறியது.
ஆண்கள்தான் பொறுப்பில்லாமல் குடிகாரர்களாக திரிகிறார்கள் என்றால் பெண்களும் அதேபோல மது வாடையுடன் உலா வருவது சமூகத்தில் கவலைகளை ஏற்படுத்தியுள்ளது.
-
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
1 சவரன் தங்க நகை வாங்க போறீங்களா? கடைக்காரர் போடும் கணக்கில் அதிக மாற்றமா? ஏமாறாமல் இருக்க பில் தேவை -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
48 அவுட் ஆஃப் 234! திமுக கூட்டணியில் இதுவரை எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை சீட் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000!












Click it and Unblock the Notifications