கரூர் அருகே சர்ச்சுக்குச் சென்ற பெண்ணுக்கு சூடு.. 4 பேர் மீது புகார்
கரூர்: கரூர் அருகே சர்ச்சுக்குப் போன பெண்ணை சிலர் சூடு போட்டு கொடுமைப்படுத்தியுள்ளனர். இதுதொடர்பாக 4 பேர் மீது புகார் கூறப்பட்டுள்ளது.
கரூர் மாவட்டம், வெள்ளியணை அடுத்த ஜல்லிப்பட்டி அருகே உள்ள குளத்தூர் பகுதியில் வசிப்பவர் மாணிக்க செல்வன், இவரது மனைவி வளர்மதி (வயது 29), இவர் கடந்த 4 மாதமாக கரூரில் உள்ள தேவாலயத்திற்கு சென்று வந்த நிலையில் நேற்று எங்கேயோ சென்று வந்துள்ளார்.

இந்த நிலையில் சிலர் அவரது வீட்டுக்கு வந்து, வளர்மதியின் மகன், மகளிடம் உங்கள் அம்மா சர்ச்சுக்குத் தானே சென்றுள்ளார் என்று கேள்வி கேட்டுள்ளனர்.
பின்னர் அப்பகுதியை சார்ந்த சுரேஷ், ஈஸ்வரி, தீர்த்தன், போதி ஆகிய 4 பேரும் தீக்கட்டையால் சூடு வைத்துள்ளனர். பின்னர் வளர்மதியின் முடியை சுட்டுள்ளனர். இதனையடுத்து கரூர் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் வளர்மதி அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

இந்நிலையில் அகில இந்திய கிறிஸ்துவ வாலிபர்கள் முன்னேற்ற இயக்க நிறுவனத்தலைவர் ஜோஸ்வாஸ் ஸ்டீபன் வளர்மதியின் உடல் நிலை குறித்து விசாரித்தார். பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.
அப்போது வளர்மதி கிறிஸ்துவ தேவாலயத்திற்கு சென்று பிரார்த்தனை நடத்தி வந்த நிலையில் இன்று காலை அங்குள்ள சமூக விரோதிகள் 4 பேர் பெண்ணெண்றும் பாராமல் தீ சூடு வைத்துள்ளனர்.
இதற்குக் கண்டனம் தெரிவித்த ஜோஸ்வாஸ் ஸ்டீபன், இச்சம்பவம் குறித்து காவல்துறையினரிடம் புகார் கொடுத்துள்ளோம். மேலும் இச்சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்து வரும் 23 ம் தேதி கரூரில் மாபெரும் கண்டன ஆர்பாட்டத்தை நடத்த உள்ளோம் என்றார்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications