மகளிர் தினம் - அவ்வையார் சிலைக்கு அமைச்சர்கள் மரியாதை
சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு அவ்வையார் சிலைக்கு அரசு சார்பில் அமைச்சர்கள் மலர்தூவி மரியாதை செலுத்தினர்.
சென்னை: சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு சென்னை மெரீனா கடற்கரையில் உள்ள அவ்வையார் சிலைக்கு அமைச்சர்கள் ஜெயக்குமார், சரோஜா, நிலோபர் கபில், ஸ்ரீரங்கம் வளர்மதி ஆகியோர் இன்று மலர் தூவி மரியாதை செலுத்தினர்.
சர்வதேச மகளிர் தினம் இன்று உலகம் முழுவதும் கொண்டாடப்படுகிறது. இதனை முன்னிட்டு சென்னை கடற்கரை சாலையில் உள்ள அவ்வையார் சிலைக்கு அமைச்சர்கள் மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினர். அவ்வையாரின் அமுத மொழிகள் இன்றைக்கும் பலருக்கு எடுத்துக்காட்டாக விளங்கிறது. இதனை முன்னிட்டே ஆண்டுதோறும் மகளிர் தினத்தன்று அவ்வையாருக்கு மரியாதை செலுத்தப்படுகிறது.

அவ்வையார் சிலைக்கு அமைச்சர்கள் ஜெயக்குமார், சரோஜா, நிலோபர் கபில், ஸ்ரீரங்கம் வளர்மதி ஆகியோர் இன்று மலர் தூவி மரியாதை செலுத்தினர். இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் சரோஜா, மகளிருக்காக பல திட்டங்களை கொடுத்தவர் ஜெயலலிதா என்றார்.
தாலிக்கு தங்கம், கர்ப்பிணி பெண்களுக்கு நலத்திட்டம், பேருகால உதவிகள் என பல திட்டங்களை ஜெயலலிதா அறிவித்துள்ளார் என்றும் கூறினார். மகளிர் நலனுக்காக 33 சதவிகித இட ஒதுக்கீட்டை நாடாளுமன்றத்தில் நிறைவேற்ற வேண்டும் என்றும் சரோஜா கேட்டுக்கொண்டார்.
முன்னதாக பேசிய அமைச்சர் ஜெயக்குமார், மீனவர் பிரச்சினையை தீர்க்க பல்வேறு நடவடிக்கைகளை எடுத்தவர் ஜெயலலிதா என்றார். கச்சதீவை மீட்க வாக்கு தொடுத்தவர் என்றும் கூறினார்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications