புதிய டாஸ்மாக் கடைக்கு எதிர்ப்பு.. மரங்களை வெட்டி சாலையில் போட்டு பெண்கள் மறியல்.. மேலூரில் பரபரப்பு
புதிய டாஸ்மாக் கடையை திறக்க எதிர்ப்பு தெரிவித்து மதுரை மேலூர் அருகில் சாலை மறியலில் பெண்கள் ஈடுபட்டுள்ளனர்.
மதுரை: தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைக்கு எதிராக போராட்டம் நடைபெற்று வருகிறது. அதே போன்று இன்று மதுரை மேலூர் அருகில் புதிய டாஸ்மாக் கடைக்கு எதிராக போராட்டம் நடத்தி வருகின்றனர்.
மதுரை மேலூர் அருகில் புதிய டாஸ்மாக் கடை திறக்க திட்டமிடப்பட்டு அதற்கான பணிகள் அனைத்தும் முடிந்தன. இதற்கு அப்பகுதி மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில், மதுக்கடைக்கு எதிராக நெண்டிக்கோயில்பட்டி சாலையில், மக்கள் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். மரங்களை வெட்டி சாலையின் குறுக்கில் போட்டு மறியலில் ஈடுபட்டுள்ளதால் அந்தப் பகுதியில் கடும் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
சாலையில் அமர்ந்து மதுவிற்கு எதிராக கோஷங்களை எழுப்பி போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மக்கள், புதிய டாஸ்மாக் கடையை இங்கே திறக்கக் கூடாது. இதனால் பெண்களும், பள்ளி செல்லும் மாணவ மாணவர்களும் கடுமையாக பாதிக்கப்படுகின்றனர் என்று கூறினர். இதனால் இந்தப் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
-
புதிய டிஜிபி-யுடன் விஜய் தலைமைச் செயலக சேம்பரில் 'ஒரு மணிநேர' க்ளோஸ் டோர் மீட்டிங்.. 3 முக்கிய அசைன்மென்ட்! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம்












Click it and Unblock the Notifications