For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ப்ரே பண்ணுங்கப்பா.. எல்லோரும் ப்ரே பண்ணுங்க.. கவர்னர் தரும் அறிவுரை!

தியாகி லட்சுமணன் சிலையை ஆளுநர் திறந்து வைத்தார்.

Google Oneindia Tamil News

Recommended Video

    கடவுளை கும்பிட்டால் குற்றங்கள் குறையும் - ஆளுநர் பணவாரிலால்

    கோபி: "எல்லோரும் சாமி கும்பிட வேண்டும். அப்படி கும்பிட்டால் குற்றங்கள் குறையும்" என்று தெரிவித்துள்ளார் நமது ஆளுநர் பன்வாரிலால்.

    கோபியில் தியாகி லட்சுமணனின் உருவ சிலையை ஆளுநர் திறந்து வைத்தார். தியாகி லட்சுமணனின் புகழ் குறித்து ஆளுநர் பேச தொடங்கும்போது ஆளுநர் 'வணக்கம்' என்று தமிழில் சொல்லிவிட்டு பேசினார். அப்போது, மனித கழிவுகளை மனிதனே அள்ள வேண்டும் என்ற முறையை அகற்ற பாடுபட்டவர் தியாகி லட்சுமணன் என்றார்.

    Worshiping God will reduce crime and violence: Governor Banwarilal

    காந்தியால் ஆரம்பிக்கப்பட்ட 'அரிசன் சேவா சங்கம்' கோபி என்ற இந்த கிராமத்தில்தான் ஆரம்பிக்கப்பட்டது என்றும் அதற்கு தியாகி லட்சுமணன் உழைத்து அதை வளர்த்துள்ளார் என்றும் ஆளுநர் புகழாரம் தெரிவித்தார்.

    தொடந்து பேசிய ஆளுநர், கடவுள் வழிபாடு குறித்து பேச ஆரம்பித்தார், எல்லாரும் கடவுளை வழிபடுவதை கடைபிடிக்க வேண்டும். அப்படி நாம் கடவுளை வணங்கி வழிபட்டால் குற்றங்களும், வன்முறைகளும் குறையும் என்றார்.

    இரவு தூங்குவதற்கு முன் எல்லோரும் சாமி கும்பிட வேண்டும்... இந்து, முஸ்லீம், கிறிஸ்தவர்கள் என எந்த மதத்தினராக இருந்தாலும் கடவுளுக்கு பயப்பட வேண்டும்" என்றும் ஆளுநர் அறிவுரை கூறினார்.

    English summary
    Worshiping God will reduce crime and violence: Governor Banwarilal
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X