ஈஷா மைய பள்ளியில் குழந்தைகளை பைத்தியமாக்குகிறார்கள்: போலீஸ் ஏட்டு பரபர புகார்
மதுரை: கோவையில் உள்ள ஈஷா மைய பள்ளியில் சிறுவர்களை பைத்தியமாக்குவதாக மதுரையை சேர்ந்த போலீஸ் ஏட்டு புகார் தெரிவித்துள்ளார்.
மதுரையில் போலீஸ் ஏட்டாக இருப்பவர் மகேந்திரன். அவருக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு மகேந்திரன் தனது இரண்டு மகன்களையும் கோவையில் உள்ள ஈஷா மைய பள்ளியில் சேர்த்தார்.

அந்த பள்ளியில் சிறுவர்களை பைத்தியமாக்குவதை அறிந்த மகேந்திரன் தனது மகன்களை அழைத்து வந்துவிட்டார். இது குறித்து அவர் கூறுகையில்,
பள்ளி குழந்தைகளுக்கு படிப்பை கற்றுத் தருவதை விட பிரம்மசரியத்தையே அதிகம் கற்றுக் கொடுத்துள்ளனர். இதனால் குழந்தைகளுக்கு உணவுக் கட்டுப்பாட்டுடன் வேலை பளுவும் உள்ளது. இதனால் அவர்கள் பைத்தியம் பிடித்தது போன்று உள்ளனர்.
தினமும் காலை, மாலை என இரண்டு வேளையும் 500 தோப்புக்கரணம் போட வேண்டும். உடல் ரீதியாக குழந்தைகளை துன்புறுத்தியதால் அவர்களின் மனநலம் பாதிக்கப்பட்டுள்ளது. மேலும் குழந்தைகளுக்கு ஷாக் ட்ரீட்மென்ட் அளித்துள்ளனர் என்றார்.
தனது மகன்களுடன் கோவை மாவட்ட ஆட்சியரிடம் ஈஷா மைய கொடுமைகள் குறித்து புகார் தெரிவிக்க உள்ளார் மகேந்திரன்.
-
சென்னை நீலாங்கரை காவல் நிலையத்தில் விசாரணை கைதி தப்பி ஓட்டம் -
23 நாளில்.. 20 பாலியல் வன்கொடுமைகள்.. சட்டம் ஒழுங்கு மோசம்! விஜய் கோட்டை விட்ட இடம் இதுதான்! -
சேலத்தில் விசிக பிரமுகருக்கு 20 பவுன் தங்க மாலை.. மனைவியான பெண் போலீஸ் ஏட்டு சர்ப்ரைஸ் -
திண்டுக்கல்லில் ஒரே நாளில் சிறப்பு எஸ்ஐ, பெண் ஏட்டு சஸ்பெண்ட்.. காவலர் அதிரடியாக பணி நீக்கம் -
Kerala: உடலில் 91 காயங்கள்.. கண்ணை மறைத்த கள்ளக்காதல்.. 1½வயது குழந்தையை துடிக்க துடிக்க கொன்ற கொடூரம்! அதிர்ந்த கேரளா -
Thirupparankundram Files: திருப்பரங்குன்றம் பைல்ஸ் ஆவணப்பட திரையிடலுக்கு அனுமதி மறுப்பு.. "மேலிட உத்தரவு" என்ற போலீஸ் -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக!












Click it and Unblock the Notifications