தேமுதிக அலுவலகத்தில் ‘கேப்டன்’ யோகா!
சென்னை: சென்னையில் தேமுதிக கட்சி அலுவலத்தில் நடைபெற்ற சர்வதேச யோகா தினக் கொண்டாட்டத்தில் அக்கட்சித் தலைவர் விஜயகாந்த் கலந்து கொண்டு யோகா பயிற்சி மேற்கொண்டார்.
முதல் சர்வதேச யோகா தினம் இன்று உலகம் முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. டெல்லி ராஜ்பாத்தில் நடைபெற்ற யோகா தின நிகழ்ச்சியில் பிரதமர் மோடி தலைமையில் 37 ஆயிரம் பேர் கலந்து கொண்டு கின்னஸ் சாதனை படைத்துள்ளனர்.
இது தவிர இந்தியாவின் 650 மாவட்டங்களில் யோகா தின நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன.
அந்தவகையில், சென்னை கோயம்பேட்டில் உள்ள தேமுதிக அலுவலகத்தில் இன்று யோகா தின நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் அக்கட்சித் தலைவர் விஜயகாந்த் கலந்து கொண்டு யோகா பயிற்சி மேற்கொண்டார்.

விஜயகாந்த்...
இந்த நிகழ்ச்சியில் விஜயகாந்துடன் பிரேமலதா, சுதீஷ், தே.மு.தி.க., கட்சி நிர்வாகிகள் மற்றும் அக்கட்சித் தொண்டர்களும் கலந்து கொண்டு யோகா பயிற்சி செய்தனர்.

சற்று சீரியஸான முகத்துடன்
விஜயகாந்த் யோகா செய்யும்போது சற்று சீரியஸான முகத்துடன் காணப்பட்டார். சில யோகா முத்திரைகளை அவருக்கு பிரேமலதா சொல்லிக் கொடுத்ததைக் காண முடிந்தது.

யோகா தான் காரணம்...
எனது உடல்நிலை சீராக இருப்பதற்கு யோகாசனம் முக்கிய காரணமாகும். இன்று யோகா தினம் கடைபிடிக்கின்றோம். இந்த நாள் முக்கியமான நாளாகும்.

பெருமை...
ஐ.நா. மன்றம் யோகாவை அங்கீகரித்தது பெரிய விஷயமாகும். கட்சிக்காரர்களும் நலமுடன் வாழ யோகா கற்றுக்கொள்ள வேண்டும். ஒவ்வொரு ஆண்டும் தவறாமல் யோகா நிகழ்ச்சி நடத்தப்படும்' என்றார்.

வெள்ளை உடை...
இந்த யோகா தின நிகழ்ச்சியில் விஜயகாந்த் உட்பட கலந்து கொண்டவர்கள் அனைவரும் வெள்ளை நிற உடை அணிந்து வந்திருந்தனர்.












Click it and Unblock the Notifications