ஒருதலைக்காதல்... சென்னையில் காதலிக்க மறுத்த பெண்ணிற்கு கத்திக்குத்து..!
காதலை ஏற்க மறுத்த இளம்பெண்ணை சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்தில் கத்தியால் குத்தி காயப்படுத்தியுள்ளார் இளைஞர் ஒருவர்.
சென்னை: சென்னையில் காதலிக்க மறுத்த இளம்பெண்ணை கத்தியால் குத்திய இளைஞரை காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். காரைக்கால் வினோதினி தொடங்கி காதலிக்க மறுக்கும் பெண்கள் மீதான தாக்குதல் தற்போது அதிகரித்து வருகிறது.
சென்னை கிண்டியிலுள்ள தனியார் நிறுவனம் ஒன்றில் அரவிந்தன் என்பவர் பணியாற்றி வருகிறார்.அவர் சென்னையில் தங்கி பணியாற்றி வரும் இளம்பெண் ஒருவரை பல மாதங்களாக ஒரு தலையாக காதலித்து வந்துள்ளார்.பல முறை தனது காதலை அந்த பெண்ணிடம் அரவிந்தன் தெரிவித்துள்ளார். ஆனால் தொடர்ந்து அந்த பெண் அரவிந்தனின் காதலுக்கு மறுப்பு தெரிவித்துள்ளார். எனினும் அரவிந்தனின் தொந்தரவு நீடித்தது.

தீபாவளி விடுமுறையை முன்னிட்டு பண்டிகையைக் கொண்டாட தனது சொந்த ஊருக்கு அந்த இளம்பெண் நேற்றிரவு கிளம்பினார். கோயம்பேடு பேருந்து நிலையத்திற்கு வந்த போது அவரை பின் தொடர்ந்து வந்த அரவிந்தன், அந்த பெண்ணிடன் மீண்டும் தனது காதலை தெரிவித்துள்ளார். அப்போதும் அந்த பெண் காதலை ஏற்க மறுக்கவே,கோபமடைந்த அரவிந்தன் தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் அந்த பெண்ணை தாக்கியுள்ளார்.
கத்தியால் தாக்கப்பட்டதில் காயமடைந்த அந்த பெண் கூச்சலிட்டார். இதனை கேட்ட அருகிலிருந்தவர்கள் அரவிந்தனை பிடித்து காவல்துறையினரிடம் ஒப்படைத்துள்ளனர். அதிர்ஷ்டவசமாக அந்த பெண்ணுக்கு முகத்தில் சிறிய அளவில் மட்டுமே காயம் ஏற்பட்டதால்,முதலுதவிக்கு பின்னர் தனது பெற்றோர்களுடன் ஊருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார். அரவிந்தனை கைது செய்த போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications