குடித்துவிட்டு வண்டி ஓட்டியதை விசாரித்த ஏட்டு மீது பாய்ந்து கடித்த வாலிபர் கைது
நாகை: நாகை, ஆயப்பாடியில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த காவல்துறை ஏட்டு ஒருவரை பாய்ந்து கடித்த இளைஞர் போலீசாரால் கைது செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது.
நாகை மாவட்டம், சீர்காழி அடுத்த வைத்தீஸ்வரன்கோவில் போலீஸ் ஸ்டேஷனில் ஏட்டாக பணியாற்றி வருபவர் சோழன். இவர் நேற்று முன்தினம் இரவு ஆயப்பாடி சோதனைச் சாவடியில் வாகன தணிக்கையில் ஈடுபட்டு இருந்தார்.

அப்போது காரைக்காலில் இருந்து வந்த பைக்கை நிறுத்தி அதில் வந்த நபரிடம் விசாரணை நடத்தினார். அதில் அந்த இளைஞர் குடிபோதையில் இருந்ததும் தெரிய வந்தது.
தொடர்ந்து விசாரணை நடத்தியதால் ஆத்திரமடைந்த அவர் ஏட்டு சோழனை அடித்ததுடன் நெஞ்சில் பாய்ந்து கடித்துள்ளார். மேலும் சோதனைச்சாவடியில் இருந்த நாற்காலிகளையும் அடித்து உடைத்துள்ளார்.
காயமடைந்த ஏட்டு சோழன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இச்சம்பவம் குறித்து பொறையார் போலீசார் வழக்குப் பதிவு செய்து அந்த இளைஞரை கைது செய்தனர். இச்சம்பவம் அங்கு பெரும் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது.
-
தமிழ்நாட்டின் புதிய டிஜிபியாக மகேஷ்குமார் அகர்வால் நியமனம்! முடிவுக்கு வரும் சட்டம் ஒழுங்கு பிரச்சனை -
தென்காசியில் ஷாக்.. கண்ணில் தென்பட்டவர்கள் அனைவருக்கும் அரிவாள் வெட்டு.. மர்ம கும்பல் வெறிச்செயல்! -
சென்னையில் சிறுவனுக்கு பாலியல் தொல்லை.. காவலரை டிஸ்மிஸ் செய்து அதிரடி உத்தரவிட்ட ஆணையர்! -
தெலுங்கு நடிகை தற்கொலை வழக்கில் ட்விஸ்ட்.. மாமியாரை தூக்கிய சிபிஐ.. விசாரணையில் திருப்பம் -
மாஸ் லுக்கில் சிங்கப்பெண் அதிரடிப்படையினர்! முற்றிலும் வேறான சீருடை.. காரணம் இதுதான்! -
காஞ்சிபுரம் படப்பையில்.. முதியவருக்கு பட்டை நாமம் போட்ட தவெக பெண் நிர்வாகி! 9 லட்சம் அபேஸ்! -
டெல்லி ரிட்டர்ன்.. விஜய் செய்யும் முதல் வேலை.. சென்னையில் நாளை சம்பவம்.. சிங்கப் பெண் அதிரடிப்படை! -
நெல்லை கவின் ஆணவக்கொலை வழக்கில் திடீர் திருப்பம்.. கைதானார் சுர்ஜித்தின் தாய் எஸ்.ஐ கிருஷ்ணகுமாரி -
பெங்களூர், ஹைதராபாத்-யிடம் தோற்றுப்போகும் சென்னை.. தலையெழுத்தை மாற்றுவாரா விஜய்! -
1700 ஏக்கர் சிப்காட் பூங்கா ஒரு சர்வதேச விமான நிலையத்திற்கு இணையான வளர்ச்சியை கொடுக்குமா?- ஒரு அலசல் -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா?












Click it and Unblock the Notifications