வேலூரில் பயங்கரம்... 75 வயதான மூதாட்டி பலாத்கார முயற்சியில் கொலை- குடிகாரன் கைது
வேலூர்: வேலூர் மாவட்டம் பனமாடங்கி அருகே 75 வயதான மூதாட்டியை பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கி கொன்ற குடி போதை காமுகனை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.
கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்னதாக கணவரை இழந்த அந்த மூதாட்டி பனமாடங்கி பேருந்து நிலையம் அருகே வசித்து வந்துள்ளார். நள்ளிரவு 12 மணியளவில் ராமமூர்த்தி என்ற இளைஞர் குடி போதையில் தள்ளாடிய நிலையில் அங்கு வந்துள்ளார். தனது இரு சக்கர வாகனத்தை நிறுத்திவிட்டு மூதாட்டியை பாலியல் ரீதியாக துன்புறுத்தியுள்ளார்.

மூதாட்டி சத்தம் போடாமல் இருக்க அவரது வாயை அழுத்தமாக மூடி, பாலியல் பலாத்காரம் செய்ய முயற்சி செய்தான். முனகல் சத்தம் கேட்டு அதிர்ச்சியடைந்த மற்றொரு பெண் அருகில் இருந்தவர்களை அழைத்து அவர்களின் உதவியுடன் மூதாட்டியை காப்பற்றினார்.
எனினும் மூதாட்டியின் வாயை அந்த குடிகாரன் அழுத்தி மூடியதில் மூச்சுத் திணறி முதாட்டி இறந்து விட்டார். இதனையடுத்து அருகில் இருந்த பொதுமக்கள் ராமமூர்த்தியை கையும் களவுமாக பிடித்து பனமாடங்கி போலீசாரிடம ஒப்படைந்தனர். போலீசார், மூதாட்டியின் உடலைக் கைப்பற்றி வேலூர் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
மூதாட்டியை பாலியல் துன்புறுத்தல் செய்து கொன்றது தொடர்பாக ராமமூர்த்தி மீது வழக்குப் பதிவு செய்த காட்பாடி போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்!












Click it and Unblock the Notifications