ஹாசினி கொலை வழக்கு குற்றவாளி தஷ்வந்த் தாயை கொலை செய்து விட்டு தப்பியோட்டம்
ஹாசினி கொலை வழக்கில் ஜாமீனில் வெளியே வந்துள்ள தஷ்வந்த் பணம் தராததால் தனது தாயையும் கொன்று விட்டு தலைமறைவாகியுள்ளார்.
சென்னை: ஹாசினி கொலை வழக்கில் ஜாமீனில் வெளியே வந்துள்ள இளைஞர் தஷ்வந்த் தனது தாயை பணத்துக்காக கொலை செய்துவிட்டு தப்பியோடிவிட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
போரூர் அருகே அடுக்குமாடி குடியிருப்பில் வசிக்கும் பாபு- ஸ்ரீதேவி தம்பதியின் மகள் ஹாசினி (7). கடந்த பிப்ரவரி மாதம் 6-ஆம் தேதி வீட்டின் முன்பு விளையாடிக்கொண்டிருந்த ஹாசினியை அதே குடியிருப்பில் வசித்துவரும் மென்பொருள் பொறியாளர் தஷ்விந்த் பாலியல் பலாத்காரம் செய்ததுடன் பெட்ரோல் ஊற்றி படுகொலை செய்துள்ளார்.
இதையடுத்து அவரை கைது செய்த காவல்துறையினர் கொலை, பலாத்காரம் உள்ளிட்ட 4 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்தனர். இந்த சம்பவத்தில் குற்றவாளி தஷ்வந்த் கைது செய்து புழல் சிறையில் அடைக்கப்பட்டார்.

தஷ்வந்த் தந்தை வழக்கு
தொடர்ந்து கடந்த மார்ச் மாதம் தஷ்வந்த் மீது சென்னை காவல் ஆணையர் குண்டர் சட்டம் பாய்வதாக அறிவித்தார். இந்நிலையில் தஷ்வந்த் மீதான குண்டர் சட்டத்தை ரத்து செய்ய வலியுறுத்தி அவருடைய தந்தை சேகர் (50) சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

குண்டர் சட்டம் ரத்து
இந்த வழக்கு விசாரணையின் போது போலீஸார் குற்றத்தை நிரூபிப்பதற்கான முறையான ஆவணங்களைத் தாக்கல் செய்யாததால் தஷ்வந்த் மீதான குண்டர் சட்டம் ரத்து செய்யப்படுவதாக ஹைகோர்ட் அறிவித்தது. குண்டர் சட்டம் ரத்து செய்யப்பட்டதால் தஷ்வந்திற்கு கடந்த செப்டம்பர் மாதம் ஜாமீன் கிடைத்தது.

ஜாமீனுக்கு எதிர்ப்பு
இதற்கு பல்வேறு கண்டனங்கள் எழுந்தன. 7 வயது சிறுமியை கொலை செய்த தஷ்வந்த்துக்கு ஜாமீன் வழங்கப்பட்டதால் ஹாசினியின் பெற்றோர் வேதனை அடைந்தனர். பல்வேறு அரசியல் அமைப்புகள் கண்டனம் தெரிவித்தன. இந்நிலையில் குன்றத்தூரில் பெற்றோருடன் வசித்து வந்த தஷ்வந்த் போதைக்கு அடிமையானதாக கூறப்படுகிறது.

தாய் கொலை
இந்நிலையில் நேற்று தனது தாய் சரளாவிடம் (42) பணம் கேட்டு தகராறு செய்துள்ளார். சரளா பணம் தர மறுத்ததால் ஆத்திரமடைந்த தஷ்வந்த் அங்கிருந்த இரும்புக் கம்பியை எடுத்து சரளாவின் தலையில் ஓங்கி அடித்துள்ளார். இதில் ரத்த வெள்ளத்தில் அவர் உயிரிழந்துவிட்டார். இதையடுத்து தஷ்வந்த், சரளா அணிந்திருந்த 25 பவுன் நகைகளை கொள்ளையடித்து கொண்டு தப்பிவிட்டார்.

தனிப்படை அமைப்பு
இதுகுறித்து போலீஸார் வழக்கு பதிவு செய்து தலைமறைவாக உள்ள தஷ்வந்த்தை தேடி வருகின்றனர். இதற்காக இரு தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications