வா தண்ணி அடிக்க செல்லலாம்னு அழைத்த நண்பர்கள்.. ரவுண்ட் கட்டிய மர்ம கும்பல்.. இளைஞர் வெட்டி கொலை
செங்கல்பட்டு: செங்கல்பட்டு மாவட்டம் வண்டலூர் அருகே இளைஞர் ஒருவர் வெட்டி படுகொலை செய்யப்பட்டார்.
செங்கல்பட்டு மாவட்டம் வண்டலூர் அருகே ஓட்டேரி பகுதியை சேர்ந்தவர் ரவி. கூலி வேலை செய்து வருகிறார். இவரது மகன் வீரா (21). இவர் சுமைத் தூக்கும் தொழிலாளி. வீராவை மது அருந்துவதற்காக அவரது நண்பர்கள் அழைத்து சென்றுள்ளனர்.
வண்டலூர் கிளாம்பாக்கம் பகுதியில் போன் பேசிக் கொண்டு இருந்த போது இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம கும்பல் வீராவை சுற்றி வளைத்துள்ளனர். தப்ப முயற்சித்த வீராவை விடாமல் கை,கால் தலை போன்ற பகுதியில் சரமாரியாக மாறி மாறி வெட்டினர்.

அரசு மருத்துவமனை
ரத்த வெள்ளத்தில் துடித்து கொண்டிருந்ததை கண்ட அப்பகுதி வழியாக வந்தவர்கள் கூடுவாஞ்சேரி காவல்நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர். அதன் அடிப்படையில் விரைந்து வந்த போலீசார் சடலத்தை மீட்டு செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

காதலித்த பெண்ணின் உறவினர்கள்
பின்னர் சம்பவம் குறித்து போலீசார் விசாரித்ததில் வீரா அதே பகுதியை சேர்ந்த ஒரு பெண்ணை காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. வீரா காதலித்த பெண் வீட்டார் கொலை செய்தனரா அல்லது வீரா காதலித்த பெண்ணை வேறு ஒரு இளைஞர் காதலித்து அதனால் அவர் சம்மந்தப்பட்ட கும்பல் கொலை செய்தனரா என போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

வலைவீசி தேடும் போலீஸ்
அதே பகுதியில் ஏற்கெனவே விக்கி என்ற இளைஞர் செய்யப்பட்டுள்ளது. குறிப்பிடத்தக்கது. கொலை செய்த கும்பலை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

பேருந்து நிலையம்
குறிப்பாக நேற்று காட்டாங்கொளத்தூர் பேருந்து நிறுத்தத்தில் 60 வயது மதிக்கத்தக்க அடையாளம் தெரியாத முதியவர் ஒருவர் கொலை செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது. சில நாட்களாக மறைமலைநகர் கூடுவாஞ்சேரி காவல்நிலையத்திற்கு உட்பட்ட பகுதிகளில் கொலை சம்பவங்கள் நடைபெறாமல் இருந்தது. தற்போது மீண்டும் ஒரேநாளில் அடுத்தடுத்து கொலை சம்பவங்கள் நடைபெற்றதால் அப்பகுதி மக்களிடையே பெரும் பீதியை எற்படுத்தியுள்ளது.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications