வறட்சி சோகத்தில் விவசாயிகள்.. பொங்கலை தித்திக்க செய்ய நீங்கள் ரெடியா?
சென்னை: ஜல்லிக்கட்டுக்கு ஆதரவு தெரிவித்து சென்னை, கோவை உள்ளிட்ட நகர்ப்புறங்களிலும் இளைஞர்கள் போராட்ட களத்தில் களமிறங்கியுள்ளனர்.
அதேநேரம், மாநிலம் முழுக்க வறட்சியால் 200க்கும் மேற்பட்ட விவசாயிகள் உயிரிழந்த நிலையில், அவர்களுக்கு உதவி செய்ய வேண்டும் என்ற எண்ணமும் அவர்களுக்கு ஏற்பட்டுள்ளது.

ஜல்லிக்கட்டு தொடர்பான புரிதல் அவர்களை விவசாயிகள் மீதான பரிவுக்கு அழைத்துச் சென்றுள்ளது. லயோலா கல்லூரி மாணவர்கள் இன்று விவசாயிகளுக்கு ஆதரவாக மனித சங்கிலி நடத்தியுள்ளனர். ஜல்லிக்கட்டு ஆதரவு போராட்டங்களால் விவசாயிகள் படும் துன்பம் மறைக்கப்படுகிறது அல்லது மறக்கப்படுகிறது என்ற சில விமர்சனங்களுக்கு பதிலடி தருவதை போல இருந்தது லயோலா மாணவர்கள் போராட்டம்.
அறுவடை காலம் முடிந்துவிட்ட நிலையில் இப்போது அரசு செய்ய வேண்டியது நிதி உதவி என்றால், சமூகத்தின் பிற அங்கத்தினர் செய்ய வேண்டியது தார்மீக உதவி.
விவசாயிகளுக்கு ஆதரவு அளிக்க நாங்கள் இருக்கிறோம், உங்கள் கஷ்டம் எங்களுக்கு புரிகிறது என்ற ஆறுதல் வரிகள் அந்த அப்பாவி ஜீவன்களுக்கு தற்போதைய அவசர தேவை. ஏனெனில் தற்கொலை செய்த விவசாயியைவிட மனதால் வெம்பி இதய துடிப்பு நின்று போன உழவர்கள்தான் அதிகம். அவர்கள் மனதுக்கு தேவை ஆறுதல். அதை சக பங்காளிகளான சமூகத்தின் பிற மக்கள் தர வேண்டும்.
இதில் இளைஞர்கள் பங்களிப்பு அதிகம் இருக்க வேண்டும். சென்னை வெள்ளத்தின்போதும் இயற்கை சீற்றங்களின்போதும் காட்டிய பரந்த மனப்பான்மையை இளைஞர்கள் இப்போதும் கையில் எடுக்க வேண்டும். சோஷியல் மீடியாவில் மூழ்கி கிடக்காமல் கிராமங்களை நோக்கி ஓட வேண்டும். ஏழை விவசாயிகளுக்கு தங்களால் முடிந்த உதவிகளை செய்ய வேண்டும்.
விவசாயிகளுடன் சேர்ந்து பொங்கல் பண்டிகை கொண்டாடி அவர்களின் உள்ளத்தை தேற்றலாம். ஊட்டிக்கும், கொடைக்கானலுக்கும் பிற மாநிலங்களுக்கும் சுற்றுலா செல்லும் நண்பர் கூட்டம், தங்கள் தாய் மடியான கிராமங்களை நோக்கி ஓடலாம். திரும்பி வரும்போது மனதும், இதயமும் நிறைந்திருக்கும்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications