பிரபல யூடியூபர் சுதர்சன் மீது வரதட்சணை கொடுமை வழக்கு பதிவு.. காதல் மனைவி அளித்த புகாரால் பரபரப்பு!
மதுரை: மருத்துவரை காதலித்து திருமணம் செய்த யூடியூபர் 'டெக் சூப்பர் ஸ்டார்' சுதர்சன் மீது அவரது மனைவி வரதட்சணை புகார் அளித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
திருப்பூரில் இளம்பெண் ரிதன்யா, கணவன் வீட்டாரின் கொடுமையால் தற்கொலை சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், யூடியூபர் மீதான இந்த வரதட்சணை கொடுமை புகார் தற்போது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

யூடியூபர் சுதர்சன்
மொபைல், டிவி, லேப்டாப் உள்ளிட்ட டெக்னாலஜி கேட்ஜெட்கள் பற்றி ரிவ்யூ செய்து வீடியோ வெளியிட்டு வருபவர் சுதர்சன். முன்பு டெக் பாஸ் என்ற யூடியூப் சேனலில் இயங்கி வந்த சுதர்சன், தற்போது 'டெக் சூப்பர் ஸ்டார்' என்ற சேனலில் வீடியோக்களை வெளியிட்டு வருகிறார்.
சுதர்சன் வெளியிடும் டெக் ரிவ்யூ வீடியோக்களுக்கு ஃபாலோயர்கள் அதிகம். யூடியூபில் பதிவு செய்யும் வீடியோக்கள் சில மணி நேரங்களில் பல லட்சம் பார்வைகளைத் தாண்டும். யூடியூபில் பிரபலமாக இருந்து வரும் சுதர்சன் மற்றும் அவர் பெற்றோர் மீது தேனி மகளிர் காவல் நிலையத்தில், சுதர்சனின் மனைவி விமலா தேவி வரதட்சணை புகார் அளித்துள்ளார்.
மனைவி வரதட்சணை புகார்
விமலாதேவி, மருத்துவருக்குப் படித்து மதுரை மீனாட்சி மிஷன் மருத்துவமனையில் டாக்டராக கடந்த 4 வருடங்களுக்கு முன்பு வேலை பார்த்து வந்தபோது சுதர்சன் அவருக்கு அறிமுகமாகி உள்ளார். இருவரும் காதலித்து பெற்றொர் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டுள்ளனர். கடந்த ஆண்டு மார்ச் மாதம் மதுரை வளையாபதி திருமண மண்டபத்தில் இவர்களது திருமணம் நடைபெற்றுள்ளது.
வரதட்சணை கொடுமை
திருமணத்தின் போது விமலா தேவியின் பெற்றோர் 30 பவுன் தங்க நகையும், ரூபாய் 5 லட்சம் ரொக்கம் மற்றும் ரூ. 2 லட்சம் மதிப்பான சீர்வரிசை பொருட்களும் கொடுத்துள்ளனர். சுதர்சன் சொந்தமாக வீடு கட்டும் போது விமலா தேவியிடம் 30 பவுன் நகையை பெற்றுக்கொண்டதாக கூறப்படுகிறது.
வீடு கட்டி புது வீட்டிற்கு குடிபோன நிலையில், வீட்டுக்கடனை அடைக்க முடியவில்லை என்றும் கூறப்படுகிறது. இதையடுத்து, சுதர்சனின் பெற்றோர், மருமகளிடம் வரதட்சணை கூடுதலாக கேட்டு கொடுமைப்படுத்தியதாக கூறப்படுகிறது.
சுதர்சனின் பெற்றோர் கொடுமை
"டாக்டருக்கு படிச்சு என்ன சம்பாதிச்சு கொடுக்குற? வீட்டுக்கே பத்தல.. இன்னும் 20 பவுன் நகை கொண்டு வந்தா தான் வீட்டில் வைத்திருப்போம்" என்று கூறி விமலாதேவியை சுதர்சனின் பெற்றோர் மிரட்டியதாக விமலாதேவி கொடுத்துள்ள புகார் மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சுதர்சன் மற்றும் அவரது குடும்பத்தினர் ரூ.10 லட்சம் பணத்தையும் பெற்றுக்கொண்டு 30 பவுன் நகையை விற்று மேலும் 20 பவுன் நகை கொண்டு வந்தால் தான் இங்கு வாழ முடியும் என்று அசிங்கமாக பேசி கொலை மிரட்டல் விடுத்ததாக அந்த புகார் மனுவில் தெரிவித்துளார்.
இதனையடுத்து சுதர்சன், அவரது தாயார் மாலதி, தந்தை சுந்தர்ராஜன் உள்ளிட்ட 5 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். சுதர்சன் மற்றும் அவரது குடும்பத்தினரை கைது செய்ய போலீசார் தேடி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
திருப்பூரில் இளம்பெண் ரிதன்யா அண்மையில் தற்கொலை சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. திருமணமான 78 நாட்களில் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட ரிதன்யா, தற்கொலைக்கு முக்கிய காரணமாக வரதட்சணை கொடுமை மற்றும் கணவர் கவின் குமார், மாமனார் ஈஸ்வரமூர்த்தி, மாமியார் சித்ராதேவி ஆகியோரால் மன ரீதியாகவும் உடல் ரீதியாகவும் துன்புறுத்தப்பட்டதாக பேசிய வாட்ஸ் அப் ஆடியோ மெசேஜ் அனைவரையும் அதிர வைத்தது குறிப்பிடத்தக்கது.
-
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
1 சவரன் தங்க நகை வாங்க போறீங்களா? கடைக்காரர் போடும் கணக்கில் அதிக மாற்றமா? ஏமாறாமல் இருக்க பில் தேவை -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
48 அவுட் ஆஃப் 234! திமுக கூட்டணியில் இதுவரை எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை சீட் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி












Click it and Unblock the Notifications