தஞ்சை அருகே பயங்கரம்.. பக்தர்கள் கூட்டத்தில் புகுந்த கார்.. 4 பெண்கள் உடல் நசுங்கி சாவு
தஞ்சை: தஞ்சையை அடுத்த திருமலைசமுத்திரம் பகுதியில் ஜெபக் கூட்டம் முடிந்து திரும்பியவர்களின் மீது கார் மோதிய விபத்தில் 4 பெண்கள் உயிரிழந்தனர். 7 பேர் படுகாயம் அடைந்தனர்.
தஞ்சை- திருச்சி தேசிய நெடுஞ்சாலை வல்லம் அருகே திருமலைசமுத்திரம் பகுதியில் ஜெபகூடம் உள்ளது. இங்கு நாள்தோறும் நூற்றுக்கணக்கானோர் ஜெபகூட்டத்தில் பங்கேற்பது வழக்கமாகும். அந்த வகையில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சிறப்பு ஜெபக் கூட்டம் நேற்று நடைபெற்றது.
இதில் பங்கேற்க தஞ்சை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகள் மற்றும் பெங்களூர், கேரளா உள்ளிட்ட வெளி மாநிலங்களில் இருந்தும் ஆயிரக்கணக்கானோர் வந்திருந்தார்கள்.

50 பேர் நடந்தனர்
இந்த நிலையில் பெங்களூரை சேர்ந்த பக்தர்களான செல்வி (வயது 48) அவரது மகள் கீர்த்தி (22), கவிதா(25), கன்னியம்மாள் உள்ளிட்ட 50 பேர் வல்லம்புதூரில் உள்ள குளத்தில் குளித்துவிட்டு திரும்பி ஜெபக்கூடத்துக்கு செல்வதற்காக திருச்சி சர்வீஸ் சாலையில் நேற்று இரவு நடந்து வந்து கொண்டிருந்தார்கள்.

கார் வந்து கொண்டிருந்தது
அப்போது எதிர்பாராதவிதமாக கார் கூட்டத்தில் நடந்து சென்று கொண்டிருந்தவர்கள் மீது புகுந்தது. இதில் அலறியடித்து கொண்டு பக்தர்கள் ஓடினர். இதில் பெங்களூரை சேர்ந்த செல்வி, கவிதா, கீர்த்தி, கன்னியம்மாள் ஆகியோர் மீது கார் மோதி ஏறி இறங்கியது. மற்ற பக்தர்கள் மீதும் அடுத்தடுத்து மோதியது.

4 பேர் மீது ஏறியது
அப்போது எதிர்பாராதவிதமாக கார் கூட்டத்தின் நடந்து சென்று கொண்டிருந்தவர்கள் மீது புகுந்தது. இதில் அலறியடித்து கொண்டு பக்தர்கள் ஓடினர். இதில் பெங்களூரை சேர்ந்த செல்வி, கவிதா, கீர்த்தி, கன்னியம்மாள் ஆகியோர் மீது கார் மோதி ஏறி இறங்கியது. மற்ற பக்தர்கள் மீதும் அடுத்தடுத்து மோதியது.

7 பேர் படுகாயம்
இந்த கோர விபத்தில் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே செல்வி, கவிதா பரிதாபமாக பலியானார்கள். கீர்த்தி, ஜோதி, கன்னியம்மாள், திருக்காட்டுப்பள்ளியை சேர்ந்த வியாபாரி பாலகிருஷ்ணன் மற்றும் காரை ஓட்டி வந்த சத்திய நாராயணா, அவரது பெற்றோர் உள்ளிட்ட 7-க்கும் மேற்பட்டோர் பலத்த காயம் அடைந்தனர்.

மற்றவர்களுக்கு சிகிச்சை
இது குறித்து தகவல் அறிந்த வல்லம் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து, காயமடைந்தவர்களை உடனடியாக மீட்டு சிகிச்சைக்காக தஞ்சை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி கீர்த்தி, கன்னியம்மாள் ஆகியோர் உயிரிழந்தனர். மற்றவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

அந்த பகுதியில் சோகம்
இந்த விபத்து குறித்து வல்லம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். ஜெபக்கூட்டத்திற்கு வந்த 4 பெண்கள் கார் மோதி உயிரிழந்த சம்பவம் வல்லம் பகுதியை பெரும் சோகத்தில் ஆழ்த்தி உள்ளது.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்!












Click it and Unblock the Notifications