பயிர் கருகிக் கிடக்கு.. காவிரி நீர் திறந்துவிடாத கர்நாடக அரசை கண்டித்து டெல்டா விவசாயிகள் போராட்டம்!
தஞ்சாவூர்: தமிழ்நாட்டிற்கு தண்ணீர் திறந்து விடாத கர்நாடக அரசை கண்டித்தும், காய்ந்த குறுவை பயிர்களுக்கு காப்பீட்டுக்கு இணையான நிவாரணம் தர வலியுறுத்தியும் டெல்டா மாவட்ட விவசாயிகள் போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.
உச்ச நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு காவிரியில் 24,000 கன அடி நீர் திறந்து விடக் கோரி வழக்கு தொடர்ந்தது. ஆனால் கர்நாடகாவில் வறட்சி நிலவுகிறது என்பதால் தமிழ்நாட்டுக்கு காவிரி நீரை திறக்க முடியாது எனக் கூறி, காவிரி நீரை திறந்துவிட வேண்டும் என்ற காவிரி மேலாண்மை ஆணையத்தின் உத்தரவுக்கு தடை கோரியும் கர்நாடகா மனுத் தாக்கல் செய்தது.

கர்நாடகாவின் மனுவை தள்ளுபடி செய்த உச்சநீதிமன்றம், காவிரி மேலாண்மை ஆணைய உத்தரவுப்படி தமிழ்நாட்டுக்கு வினாடிக்கு 5,000 கன அடி நீரை திறக்க உத்தரவிட்டது. எனினும், கர்நாடகாவில் உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக போராட்டங்கள் வெடித்துள்ளன. இதனால், காவிரியில் தண்ணீர் திறக்கப்படாமல் இருக்கிறது.
இதற்கிடையே, கர்நாடகாவில் இருந்து காவிரியில் தண்ணீர் கிடைக்காததால் தமிழ்நாட்டில் 3.50 லட்சம் ஏக்கரில் குறுவை கதிர் வரும் நிலையில் கருகத் தொடங்கியுள்ளது. டெல்டா மாவட்டங்களில் சுமார் 15 லட்சம் ஏக்கரில் சம்பா சாகுபடி துவங்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
எனவே உடனடியாக மத்திய அரசு தலையிட்டு கர்நாடகாவில் உரிய தண்ணீரை பெற்று தமிழக விவசாயத்தை பாதுகாக்க வேண்டும். மேகதாது அணை கட்டுமான பணியை தடுத்து நிறுத்த வேண்டும். காவிரி மேலாண்மை ஆணையத்தை முடக்க நினைக்கும் மத்திய அரசு அதனை கைவிட வேண்டும்.
தன்னாட்சி அதிகாரத்தோடு காவிரி மேலாண்மை ஆணையம் செயல்பட அனுமதிக்க வேண்டும். தமிழ்நாட்டில் காவிரி நீர் கிடைக்காததால் பாதிக்கப்பட்ட குறுவை விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ரூபாய் 35 ஆயிரம் நிவாரணம் வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி காவிரி படுகை பாதுகாப்பு கூட்டியக்கம் சார்பில் திருவாரூரில் தொடர் முழக்க ஆர்ப்பாட்டம் நடை பெற்றது.
நாகப்பட்டினம் மாவட்டத்தில், காவிரியில் தண்ணீர் திறந்து விடாத கர்நாடக அரசை கண்டித்து தமிழ்நாடு விவசாய சங்கங்களின் கூட்டியக்கம் சார்பில் காவிரி உழவன் உருவபொம்மையை பாடை கட்டி தூக்கிச் செல்லும் போராட்டத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட விவசாயிகள் ஈடுபட்டனர்.
காய்ந்து, கைவிடப்பட்ட குறுவைப் பயிர்களுக்கு தமிழ்நாடு அரசு ஏக்கருக்கு பயிர் காப்பீட்டிற்கு இணையான நிவாரணம் வழங்கிடவும், பகுதி பாதித்த உழவர்களுக்கு டீசல் மானியம் வழங்கி உதவிட கோரியும், குறுவைப் பயிருக்கான காப்பீடு வரும் காலங்களில் அரசே ஏற்று நடத்திடவும் வலியுறுத்தியும் விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மயிலாடுதுறை பழைய பேருந்து நிலையம் அருகே காவிரிப்படுகை பாதுகாப்பு கூட்டியக்கம் சார்பில் டெல்டா மாவட்டங்களில் கருகும் பயிரை காப்பாற்ற தமிழகத்திற்கான காவிரி நீரை பெற்று தரக் கோரி தொடர் முழக்கப் போராட்டம் நடைபெற்றது. இந்தப் போராட்டங்களில் ஏராளமான டெல்டா விவசாயிகள் பங்கேற்றனர்.
தமிழ்நாட்டிற்கு தண்ணீர் திறந்துவிட உச்சநீதிமன்றம் உத்தரவிட்டதை எதிர்த்து கர்நாடகா மாநிலம் முழுவதும் போராட்டம் வெடித்துள்ள நிலையில், காவிரி நீரை வழங்கக் கோரி தமிழ்நாட்டில் விவசாயிகள் போராட்டங்களில் ஈடுபட்டு வருவது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
டி.கே.சிவகுமாருக்கு செக்.. ஆட்டத்தை தொடங்கிய சித்தராமையா! ராகுல் காந்திக்கு பறந்த முக்கிய கோரிக்கை! -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கர்நாடகா முதல்வராக தேர்வானார் டிகே சிவக்குமார்.. காங்., எம்எல்ஏக்கள் ஆதரவு.. பதவியேற்பு எப்போது? -
முதியவர்கள் அதிகம் வாழும் மாநிலமாக மாறுகிறதா தமிழ்நாடு..? இதென்னப்பா புது பிரச்சனை? -
பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள்.. கிராமத்து பகுதியில் தொடரும் அவலம்.. பகீர் ரிப்போர்ட்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications