மாவட்ட செயலாளரை கட்சியை விட்டே தூக்கிய பிரேமலதா.. வேட்பாளர் அறிவித்த அடுத்த நாளே அதிரடி! என்னாச்சு?
தஞ்சாவூர்: லோக்சபா தேர்தல் நெருங்கி வரும் சூழலில், தேமுதிக தஞ்சை மாநகர் மாவட்ட செயலாளர் இராமநாதன் தேமுதிகவில் இருந்து அதிரடியாக நீக்கப்பட்டுள்ளார். மாவட்ட செயலாளர் நீக்கப்பட்டதற்கான காரணம் தெரியவந்துள்ளது.
தமிழ்நாட்டில் வரும் ஏப்ரல் 19ம் தேதி ஒரே கட்டமாக லோக்சபா தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் அதிமுக உடன் கூட்டணி அமைத்து தேமுதிக போட்டியிடுகிறது. அதிமுக கூட்டணியில் தேமுதிகவிற்கு திருவள்ளூர் (தனி), மத்திய சென்னை, கடலூர், தஞ்சாவூர், விருதுநகர் என 5 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன.

தேமுதிகவுக்கு ஒதுக்கப்பட்டுள்ள 5 தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்களை பெயர்களை பிரேமலதா விஜயகாந்த் நேற்று வெளியிட்டார். அதில், திருவள்ளூர் (தனி) - கு.நல்லதம்பி, மத்திய சென்னை - ப.பார்த்தசாரதி, கடலூர் - சிவக்கொழுந்து, தஞ்சாவூர் - சிவநேசன், விருதுநகர் - விஜய பிரபாகரன் ஆகியோர் போட்டியிடுவார்கள் என்று அறிவிக்கப்பட்டது.
மா.செ ராமநாதன் அதிருப்தி: தஞ்சாவூர் தொகுதியில் தனக்கு சீட் கிடைக்கும் என எதிர்பார்த்து வந்தார் தஞ்சை மாநகர் மாவட்ட செயலாளர் டாக்டர் ராமநாதன். ஆனால், தஞ்சாவூர் மாநகர தேமுதிக அவைத் தலைவராக இருந்த சிவநேசன் என்பவருக்கு சீட் வழங்கப்பட்டதால் ராமநாதன் அதிருப்தி அடைந்தார். இதையடுத்து, ராமநாதன் தேமுதிகவில் இருந்து விலகி கூண்டோடு பாஜகவில் இணைய உள்ளதாக தகவல்கள் கசிந்தன.
தஞ்சாவூர் லோக்சபா தொகுதி வேட்பாளராக பாஜக சார்பில் நிறுத்தப்பட்டுள்ள கருப்பு முருகானந்தம் மற்றும் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை முன்னிலையில் தஞ்சாவூர் மாநகர் மாவட்ட செயலாளர் ராமநாதன் உள்ளிட்ட தேமுதிக நிர்வாகிகள், பாஜகவில் இணைய உள்ளதாக தகவல்கள் பரபரத்தன.
தேமுதிகவில் இருந்து நீக்கம்: தேமுதிக vs பாஜக vs திமுக நேருக்கு நேர் மோதும் தஞ்சாவூர் தொகுதியில் தேமுதிக மாவட்ட செயலாளரே பாஜக பக்கம் தாவப் போவதாக தகவல் வந்த நிலையில் உடனடியாக ஆக்ஷன் எடுத்துள்ளார் தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த். கட்சியின் கட்டுப்பாட்டை மீறி செயல்பட்டதாக கூறி தேமுதிக தஞ்சை மாநகர் மாவட்ட செயலாளர் இராமநாதன், தேமுதிகவில் இருந்து அதிரடியாக நீக்கப்பட்டுள்ளார்.

இதுதொடர்பாக தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் வெளியிட்டுள்ள அறிவிப்பில்: "தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் தஞ்சாவூர் மாநகர் மாவட்ட கழக செயலாளராக செயல்பட்டு வந்த டாக்டர். ப.இராமநாதன் கழகத்தின் கட்டுப்பாட்டை மீறியும், கழகத்தின் நற்பெயருக்கும் புகழுக்கும் களங்கம் விளைவிக்கும் வகையிலும் செயல்பட்டதால், இவர் மாவட்ட கழக பதவி மற்றும் கழகத்தின் அடிப்படை உறுப்பினரிலிருந்து இன்று (23.03.2024) முதல் நீக்கப்படுகிறார். இவர்களுடன் கழக நிர்வாகிகள், மற்றும் கழக தொண்டர்கள் என யாரும் எந்தவிதமான தொடர்பும் வைத்துக்கொள்ளக் கூடாது என்று கேட்டுக்கொள்கிறேன்.
புதிய மாவட்ட செயலாளர்: தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின், தஞ்சாவூர் மாநகர் மாவட்ட கழக பொறுப்பாளராக T.V.T.செங்குட்டுவன் இவர் இன்று (23.03.2024) முதல் நியமனம் செய்யப்படுகிறார். இவருக்கு மாவட்டம், பகுதி, ஒன்றியம், நகரம், வார்டு, ஊராட்சி, கிளை கழகம், கழக சார்பு அணி நிர்வாகிகள் மற்றும் கழக தொண்டர்கள் அனைவரும் முழு ஒத்துழைப்பு கொடுத்து தேசிய முற்போக்கு திராவிட கழகம் வளர்ச்சி பெற பாடுபட வேண்டுமென கேட்டுக்கொள்கிறேன்" எனத் தெரிவித்துள்ளார்.
-
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்!












Click it and Unblock the Notifications