சனாதன பொங்கல் விழாவில் திமுக MLA! இந்து மக்கள் கட்சியுடன் கரம் கோர்ப்பு! உடன்பிறப்புகள் உஷ்ணம்!
தஞ்சை: தஞ்சை மாவட்டம் கும்பகோணத்தில் இந்து மக்கள் கட்சி சார்பில் நடைபெற்ற சனாதன பொங்கல் விழாவில் திமுக சட்டமன்ற உறுப்பினர் சாக்கோட்டை அன்பழகன் பங்கேற்றது கட்சியினர் மத்தியில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
சனாதன கொள்கைக்கு நேர் எதிர் கொள்கையை கொண்ட இயக்கம் திமுக என்பது ஒரு பக்கம் இருப்பினும், திமுகவை மிக மிக கடுமையான வார்த்தைகளால் விமர்சித்து வரும் அர்ஜுன் சம்பத்தின் இந்து மக்கள் கட்சி நடத்தும் விழாவுக்கு செல்வதா என திமுக எம்.எல்.ஏ. சாக்கோட்டை அன்பழகனுக்கு எதிராக சொந்தக்கட்சியினரே போர்க்கொடி உயர்த்தியுள்ளனர்.

சனாதனத்தை எதிர்த்தும், விமர்சித்தும் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், ஆ.ராசா, உள்ளிட்ட திமுக முக்கிய பிரமுகர்கள் பேசி வரும் நிலையில் சனாதனத்தை ஆதரிக்கும் வகையிலும், ஏற்றுக்கொள்ளும் வகையில் சனாதன பொங்கல் விழாவில் திமுக சட்டமன்ற உறுப்பினர் சாக்கோட்டை அன்பழகன் கலந்து கொண்டிருக்கிறார். முதலமைச்சர் ஸ்டாலினையும், திமுகவையும் மிக கடுமையாக அர்ஜுன் சம்பத் விமர்சித்து வரும் நிலையில் அவரது கட்சி விடுத்த அழைப்பை ஏற்று அறிவாலயத்துக்கு அதிர்ச்சி கொடுத்திருக்கிறார் சாக்கோட்டை அன்பழகன்.
சாக்கோட்டை அன்பழகனை பொறுத்தவரை தஞ்சை மாவட்ட திமுகவில் மிகவும் சீனியர் நிர்வாகியாக இருக்கக் கூடியவர். அவருக்கு தெரியாத அரசியல் அல்ல. ஆனால் அப்படியிருந்தும் அர்ஜுன் சம்பத்தின் இந்து மக்கள் கட்சி விடுத்த அழைப்பை ஏற்று அவர் சனாதன பொங்கல் விழாவில் கலந்து கொண்டிருக்கிறார் என்றால் அதற்கு ஏதேனும் உள் காரணங்கள் இருக்கக் கூடுமோ எனப் பேசப்படுகிறது.
கட்சியும், கட்சித் தலைமையும் ஒரு நிலைப்பாட்டில் இருக்கின்ற போது அந்த நிலைப்பாட்டுகு நேர் எதிராக கும்பகோணம் சட்டமன்ற உறுப்பினர் சாக்கோட்டை அன்பழகன் செயல்பட்டிருப்பதால் இந்த விவகாரம் அறிவாலயம் வரை அதிர்ச்சியை கொடுத்திருக்கிறது. இதனிடையே இந்து மக்கள் கட்சி நடத்திய சனாதன பொங்கல் விழாவில் தாம் பங்கேற்ற புகைப்படங்களை தனது சமூக வலைதளப் பக்கங்களில் சாக்கோட்டை அன்பழகன் பதிவேற்றம் செய்யவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications