விவசாயிகளுக்கு ஒரே ஹேப்பி.. குஷியில் டெல்டா.. சீறிப்பாயுது மேட்டூர் நீர்.. கோட்டைக்கு புது கோரிக்கை

Subscribe to Oneindia Tamil

தஞ்சாவூர்: மேட்டூர் அணையில் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளதையடுத்து, ஒட்டுமொத்த டெல்டா மாவட்டமும் மகிழ்ச்சியில் துள்ளுகிறது.. அதேசமயம், சம்பா சாகுபடிக்கான ஆயத்த பணிகளை தமிழக அரசு இப்போதே ஆரம்பிக்க வேண்டும் என்று டெல்டா விவசாயிகள் கோரிக்கையை விடுக்க துவங்கியிருக்கிறார்கள்.

மேட்டூர் அணையில் நீர் இருப்பு 77 டிஎம்சியாக உள்ள நிலையில், குடிநீருக்காக மட்டும் வினாடிக்கு 1,000 கன அடிநீர் திறந்துவிடப்பட்டது. ஆனால், மேட்டூர் அணையிலிருந்து காவிரி டெல்டா பாசனத்துக்காகவும் நீரை திறக்க வேண்டும் என்று விவசாயிகள் தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர்.

Farmers Mettur Dam Tamil Nadu Government

முதல்வர் உத்தரவு: விவசாயிகளின் இந்த கோரிக்கையை ஏற்று, மேட்டூர் அணை நீரை திறக்க முதல்வர் ஸ்டாலின் நேற்றைய தினம் உத்தரவிட்டார்.. இதையடுத்து காவிரி டெல்டாவின் குறுவை சாகுபடி மற்றும் ஆடிப்பெருக்கு விழாவை முன்னிட்டு இந்த மேட்டூர் அணை நீர் திறந்துவிடப்பட்டுள்ளது.

அணையிலிருந்து வினாடிக்கு 12,000 கன அடி நீர் திறந்துவிடப்பட்டுள்ள நிலையில், தண்ணீர் சீறிப்பாய்ந்து வருகிறது. அத்துடன், மேட்டூர் அணையில் இருந்து கூடுதலாக நீர் திறக்கப்பட இருப்பதால் கரையோர பகுதி மக்களுக்கு முன்னெச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.

விவசாயிகள்: ஏற்கனவே, காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர் மழை காரணமாக, மேட்டூர் அணைக்கு நீர்வரத்து நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனால், அணையின் நீர்மட்டம் 100 அடியை தாண்டிவிட்ட நிலையில், தற்போது மேலும் 12 ஆயிரம் கனஅடி தண்ணீர் காவிரியில் திறக்கப்பட்டுள்ளது. இதனால், தஞ்சாவூர், கும்பகோணம், திருவாரூர், நாகப்பட்டினம் போன்ற டெல்டா மாவட்ட விவசாயிகள் பெருத்த மகிழ்ச்சியில் உள்ளனர்..

தண்ணீர் திறக்கப்பட்டதையடுத்து, நாகையில் தனபாலன் தலைமையில் விவசாயிகள் பட்டாசு வெடித்து, பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கி, கொண்டாட்டத்தில் ஈடுபட்டார்கள்.. அதேபோல, டெல்டா மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் விவசாயிகள் பொதுமக்களுக்கு இனிப்புகளை வழங்கி, தங்கள் மகிழ்ச்சியை பகிர்ந்து கெண்டனர்.

அணை திறப்பு: அணை திறக்கப்பட்டதற்கு, ஏராளமான விவசாய சங்கங்களும் வரவேற்று, தமிழக அரசுக்கு நன்றி தெரிவித்து வருகிறார்கள்.. அத்துடன் சில கோரிக்கைகளையும் அரசுக்கு விடுத்துள்ளனர்..

குறிப்பாக, தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்க மாநில கொள்கை பரப்புச் செயலாளர் நாகை எஸ்.ஆர்.தமிழ்ச்செல்வன் கூறும்போது, டெல்டாவில் 15 லட்சம் ஏக்கர் பரப்பளவில் சம்பா சாகுபடி பணிகளை விவசாயிகள் தற்போது ஒரே நேரத்தில் மேற்கொள்ள உள்ளதால், சம்பா சாகுபடிக்கு தேவையான விதைநெல், உரங்கள், பூச்சிக்கொல்லி மருந்துகளை தட்டுப்பாடின்றி கிடைக்கச் செய்ய வேண்டும்" என்று கேட்டுக் கொண்டுள்ளார்.

கொள்ளிடம்: தமிழ்நாடு விவசாயிகள் சங்க தஞ்சாவூர் மாவட்டச் செயலாளர் என்.வி.கண்ணன் கூறும்போது, "கொள்ளிடத்தில் அதிகளவு தண்ணீரை திறந்துவிடாமல் காவிரி, வெண்ணாறு, கல்லணைக் கால்வாய் ஆறுகளிலும் திறந்துவிட வேண்டும்.. ஆறுகளிலிருந்து அந்தந்த பகுதிகளில் உள்ள ஏரி, குளங்களில் தண்ணீரை சேமிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று கேட்டுக் கொண்டுள்ளார்.

தமிழ்நாடு காவிரி விவசாயிகள் பாதுகாப்பு சங்க செயலாளர் சுவாமிமலை சுந்தர.விமல்நாதன் கூறும்போது, கர்நாடகாவில் இருந்து தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்தால், மேட்டூரில் தண்ணீர் திறப்பதை நீடிக்கலாம்.. தமிழக அரசு முதலில் காவிரி டெல்டா மாவட்டங்களில் உள்ள அனைத்து ஏரி, குளம், குட்டைகள் மற்றும் நீராதாரங்களில் தண்ணீரை நிரப்ப வேண்டும். கடலில் வீணாக கலக்கும் தண்ணீரை காவிரி, வெண்ணாறு, கல்லணைக் கால்வாய் உள்ளிட்ட ஆறுகளில் சாதாரண விநியோக மட்டம் அளவுக்கு திறந்துவிடலாம் என கோரியுள்ளார்

விதை நெல்கள்: தமிழ்நாடு காவிரி விவசாயிகள் சங்க பொதுச் செயலாளர் பி.ஆர்.பாண்டியன் கூறும்போது, காவல் துறை, நீர்ப்பாசனத் துறை, வருவாய்த் துறை கொண்ட குழுக்களை அமைத்து, கண்காணிப்பு பணி மேற்கொண்டு, மேட்டூர் அணை தண்ணீரை ஏரி, குளங்களில் நிரப்ப வேண்டும். சம்பாசாகுபடிக்கு தேவையான விதைநெல் தட்டுப்பாடின்றி கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+