16 வயதினிலே.. வேறு வேறு சாதி.. ஆட்டோ டிரைவரை குத்தி கொன்ற வெல்டர்.. ஆணவ கொலையில் நடந்தது என்ன?
ஆட்டோ டிரைவரை குத்தி கொன்ற நபரை போலீசார் கைது செய்துள்ளனர்
தஞ்சாவூர்: மகளை ஆட்டோ டிரைவர் தொடர்ந்து காதலித்து வந்துள்ளார்.. இதனால், பெண்ணின் தந்தை ஆத்திரம் அடைந்து டிரைவரை கத்தியால் குத்தி கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது.. இந்த ஆணவ கொலை தொடர்பாக பெண்ணின் தந்தை உட்பட 2 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
தஞ்சாவூர் மாவட்டம் பந்தநல்லூர் பகுதியை சேர்ந்தவர் பிரபாகரன்.. 24 வயதாகிறது.. அதே பகுதியில் ஆட்டோ ஓட்டி வருபவர்.
இந்த ஊருக்கு பக்கத்தில் உள்ளது காமாட்சிபுரம்.. அங்கு வசித்து வந்த 16 வயது சிறுமியை பிரபாகரன் காதலித்து வந்துள்ளார்.. ஆனால், காதலர்கள் 2 பேரும் வேறு வேறு சமூகத்தை சேர்ந்தவர்கள். சிறுமியின் தந்தை மணிகண்டன் வெல்டராக வேலை பார்த்து வருகிறார்.

சாதி
இவர்களின் காதல் விவகாரம் வீட்டில் தெரிந்துவிடவும், சிறுமியின் பெற்றோர்கள் அதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்... மேலும் படிக்கிற வயதில் இப்படியெல்லாம் இருக்க கூடாது என்றும் அறிவுரை தந்துள்ளனர். அதேபோல, ஆட்டோ டிரைவர் பிரபாகரனிடமும், சிறுமியின் தந்தை மணிகண்டன் பலமுறை பலமுறை சந்தித்து இது தொடர்பாக எச்சரித்துள்ளார்.

கொலை
படிக்கிற பெண்ணை தொந்தரவு செய்ய வேண்டாம் என்றும், தன் மகளை விட்டுவிடுமாறும் கேட்டுக் கொண்டுள்ளார்.. ஆனால், இதை பிரபாகரன் காதிலேயே போட்டுக் கொள்ளவில்லை.. சிறுமியுடன் ஊர் சுற்றுவதை தொடர்ந்து வாடிக்கையாக வைத்திருந்துள்ளார்.. இதனால் ஒருகட்டத்தில் பொறுமையிழந்த மணிகண்டன், பிரபாகரனிடம் தகராறில் ஈடுபட்டுள்ளார்... அப்போது தகராறு முற்றிவிடவும், ஆத்திரத்தில், பிரபாகரனை தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் குத்திவிட்டார்.

கத்திகுத்து
இதில் நிலைகுலைந்து ரத்த வெள்ளத்தில் பிரபாகரன் சுருண்டு விழுந்தார்.. இந்த தகராறை தடுக்க வந்த பிரபாகரனின் சகோதரர் விக்னேஷ் என்பவருக்கும் கத்தி குத்து விழுந்தது.. இதையடுத்து உடனடியாக 2 பேரையுமே மீட்டு கும்பகோணம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்... ஆனால் ஏற்கனவே பிரபாகரன் இறந்துவிட்டதாக டாக்டர்கள் தெரிவித்துவிட்டனர். இதனால் பிரபாகரனின் உறவினர்கள் கொந்தளித்து திடீர் சாலை மறியல் போராட்டத்தில் இறங்கினர்.

சமாதானம்
பிரபாகரனின் உறவினர்கள், விடுதலை சிறுத்தை கட்சியினர் உள்ளிட்ட 200 பேர் அரசு மருத்துவமனை முன் சாலை மறியலில் இறங்கி கோஷங்களை எழுப்பினார்கள்.. தகவலறிந்து வந்த போலீசார், உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று அளித்த உறுதியின்பேரில் அவர்கள் கலைந்து சென்றனர்.. இதனிடையே, பிரபாகரனின் சகோதரி பிரியங்கா, பந்தநல்லூர் போலீசில் இதுகுறித்து புகார் தந்தார்..

2 பேர் கைது
அந்த புகாரில், "பிரபாகரன் கார் டிரைவராக கார்த்தி என்பவரிடம் வேலை செய்கிறார்... தினமும் 2 பேரும் மாலை உட்கார்ந்து மது அருந்துவார்கள்.. கார்த்தியும், பெண்ணின் தந்தை மணிகண்டனும் நண்பர்கள்... இதனால் பிரபாகரன் இருக்கும் இடத்தை கார்த்தி மூலம் அறிந்து வந்து கொலை செய்துள்ளார். எனவே 2 பேரையுமே இந்த வழக்கில் கைது செய்ய வேண்டும்" என்று கேட்டுக் கொண்டார். அதன்படி, பந்தலூர் போலீசார் வழக்கு பதிவு செய்து, மணிகண்டனையும், கார்த்தியையும் கைது செய்து, அவரிடம் தீவிரமான விசாரணையை நடத்தி வருகிறார்கள். இந்த ஆணவ கொலையானது தஞ்சையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.
-
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
1 சவரன் தங்க நகை வாங்க போறீங்களா? கடைக்காரர் போடும் கணக்கில் அதிக மாற்றமா? ஏமாறாமல் இருக்க பில் தேவை -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
48 அவுட் ஆஃப் 234! திமுக கூட்டணியில் இதுவரை எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை சீட் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம்












Click it and Unblock the Notifications