ரூ.1000 கோடி செலவு.. 10 ரயில் கூட போகல! அதிராம்பட்டினத்தில் ரயிலை நிறுத்த மத்திய அமைச்சருக்கு மனு
தஞ்சாவூர்: ரூ.1000 கோடி செலவில் அமைக்கப்பட்டு உள்ள திருவாரூர் - பட்டுக்கோட்டை - காரைக்குடி ரயில் பாதையில் அதிக ரயில்களை இயக்க வேண்டும் என பொதுமக்கள் மற்றும் ரயில் பயணிகள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.
தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை பகுதியில் உள்ள பொதுமக்கள், ரயில் பயணிகள், வியாபாரிகள் சார்பில் பட்டுக்கோட்டை என்கான்ஸ் சுற்றுச்சூழல் பாதுகாப்பு சங்கத்தின் ஆலோசகர் வ.விவேகானந்தம் திருவாரூர் - பட்டுக்கோட்டை - காரைக்குடி ரயில் பாதையில் தேவையான ரயில்களை இயக்க வேண்டுமென மத்திய ரயில்வே அமைச்சர், ரயில்வே வாரிய தலைவர், தெற்கு இரயில்வே பொது மேலாளர், திருச்சி கோட்ட இரயில்வே மேலாளர் ஆகியோருக்கு கோரிக்கை மனு அனுப்பி உள்ளார்.

அந்த கோரிக்கை மனுவில், "மயிலாடுதுறை காரைக்குடி மீட்டர் கேஜ் ரயில் பாதை ஆங்கிலேயர் காலத்தில் 1902 ஆண்டில் போடப்பட்டது. இந்த மீட்டர் கேஜ் பாதையில் தமிழ்நாட்டின் தலைநகரான சென்னைக்கு செல்லும் வகையில் காரைக்குடியில் இருந்து சென்னை எழும்பூருக்கு இரவு நேர கம்பன் விரைவு ரயில் இயங்கி வந்தது. மயிலாடுதுறையில் இருந்து காரைக்குடி வரை பயணிகள் ரயில்கள் இயங்கி வந்தது. 2006 ஆம் ஆண்டுமுதல் அகல ரயில் பாதை அமைக்கும் பணிகளுக்காக சென்னை எழும்பூர் - காரைக்குடி விரைவு இரயில் (கம்பன் விரைவு ரயில்)சேவை நிறுத்தப்பட்டது.
2012 ஆம் ஆண்டு முதல் திருவாரூர் - பட்டுக்கோட்டை - காரைக்குடி பயணிகள் ரயில் சேவையும் இப்பாதையில் நிறுத்தப்பட்டன. 2012 ல் அகல இரயில் பாதை அமைக்கும் பணிகள் துவக்கப்பட்டு 2018 -19ல் ரூபாய் ஆயிரம் கோடி செலவில் முடிக்கப்பட்டது. மக்கள் பிரதிநிதிகள், அரசியல் தலைவர்கள், ரயில் பயணிகள் சங்கங்கள், வர்த்தகர்கள், தன்னார்வ அமைப்புகள் வைத்த தொடர் கோரிக்கையினை ஏற்று தற்போது மயிலாடுதுறை திருவாரூர் காரைக்குடி பயணிகள் ரயில் திங்கள் முதல் சனிக்கிழமை வரையிலும், தாம்பரம் செங்கோட்டை தாம்பரம் வாரம் மும்முறை விரைவு ரயில், செகந்திராபாத் - ராமநாதபுரம் - செகந்திராபாத் வாரந்திர சிறப்பு விரைவு ரயில் வாரம் ஒருமுறையும் , எர்ணாகுளம் - வேளாங்கண்ணி - எர்ணாகுளம் விரைவு ரயில் வாரம் இருமுறைகளும் இயங்கி வருகின்றன.
தாம்பரம் - செங்கோட்டை - தாம்பரம் அதிவிரைவு ரயில் இப்பகுதியில் இருந்து தாம்பரம் மற்றும் தமிழகத்தின் தென் மாவட்டங்களுக்கு செல்லவும், எர்ணாகுளம் - வேளாங்கண்ணி விரைவு ரயில் தென் மாவட்டங்கள் மற்றும் கேரளா மாநிலத்திற்கு செல்லவும், செகந்திராபாத் - இராமநாதபுரம் விரைவு ரயில் சென்னை மற்றும் தெலுங்கான பகுதிகளுக்கு சென்று வரவும் மிகவும் பயனுள்ளதாக இருந்து வருகின்றன. ஆனால் இப்பகுதி மக்கள் சென்னை எழும்பூருக்கு செல்ல மீட்டர் கேஜ் காலத்தில் அதிகம் பயன்படுத்திய சென்னை எழும்பூர்- காரைக்குடி கம்பன் விரைவு ரயில் இன்னும் இயக்க படவில்லை
இந்த ரயில் மூலம் இப்பகுதியில் உள்ள பொதுமக்கள், அரசு அலுவலர்கள், மாணவர்கள், வியாபாரிகள், மீனவர்கள், விவசாயிகள், மாணவர்கள், மேல் சிகிச்சைக்கு செல்வோர் சென்னை வழியாக வெளிநாடுகளுக்கு செல்வோர் அதிக அளவில் பயணம் செய்து வந்தனர். தற்சமயம் அகல ரயில் பாதை அமைக்கப்பட்ட பிறகு தாம்பரம் - செங்கோட்டை அதிவிரைவு ரயில் தாம்பரம் வரை மட்டும் சென்றடைகிறது. இதனால் இப்பகுதியில் இருந்து சென்னை எழும்பூருக்கு செல்ல தாம்பரத்தில் இறங்கி புற நகர் ரயிலில் மாற வேண்டி உள்ளது .
இதனால் கர்ப்பிணி பெண்கள், முதியோர், மாற்றுத்திறனாளிகள், அதிக சுமையுடன் செல்வோர் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர். தாம்பரத்தில் இருந்து எழும்பூருக்கு புறநகர் இரயிலில் செல்ல தாம்பரத்தில் மாடிப்படிகளில் ஏறி இறங்கி பயண சீட்டு எடுக்க வேண்டியுள்ளது தாம்பரம் - செங்கோட்டை - தாம்பரம் விரைவு ரயில் வாரத்தில் மூன்று நாட்கள் மட்டுமே இயங்கி வருகிறது. மற்ற நாட்களில் இப்பகுதியில் உள்ள ரயில் பயணிகள் ரயிலில் சென்னைக்கு செல்ல தஞ்சாவூர் மற்றும் மன்னார்குடிக்கு பேருந்துகள் மற்றும் சொந்த வாகனங்களில் சென்று பயணிக்க வேண்டியுள்ளது.
எனவே காரைக்குடி - பட்டுக்கோட்டை திருவாரூர் ரயில் பாதை வழியாக சென்னை எழும்பூருக்கு கம்பன் விரைவு ரயில் போன்று ஒரு விரைவு ரயில் இயக்கப்பட வேண்டும். இந்த விரைவு ரயில் முன்பு கம்பன் விரைவு ரயில் நின்று சென்ற அனைத்து ரயில் நிலையங்களிலும் நின்று செல்ல வேண்டும். மேலும் சென்னையில் இருந்து மதுரைக்கு பகல் நேர விரைவு இரயில், திருச்சி - சென்னை - திருச்சி சோழன் பகல் நேர அதிவிரைவு ரயில்களுக்கு இணைப்பு இரயிலாகவும் காரைக்குடியில் இருந்து மயிலாடுதுறைக்கு எதிர்திசையில் இயங்கும் ரயிலாகவும் காரைக்குடியில் இருந்து மயிலாடுதுறைக்கு பயணிகள் ரயில்களை இயக்க வேண்டும்.
வாரத்தில் திங்கள் முதல் சனிக்கிழமை வரை இயங்கும் காரைக்குடி - மயிலாடுதுறை பயணிகள் ரயிலை ஞாயிற்றுக்கிழமையும் இயக்க வேண்டும். பட்டுக்கோட்டை - பேராவூரணி - அறந்தாங்கி பகுதியில் உள்ள ரயில் பயணிகள் திருச்சிக்கு செல்லவும் மேலும் திருச்சியில் இருந்து அரியலூர் வழியாக சென்னை எழும்பூருக்கு பகல் நேரத்தில் செல்லும் வைகை விரைவு ரயில் மூலம் பயணம் செய்யும் வகையில், திருச்சியில் இருந்து மாலையில் காரைக்குடி வரை வரும் டெமு ரயிலை இரவு நேரத்தில் பட்டுக்கோட்டை வரை நீட்டித்து, அதிகாலையில் பட்டுக்கோட்டையில் இருந்து திருச்சிக்கு இயக்க வேண்டும்
இப்பகுதியில் தொழில் மற்றும் வேலையின் காரணமாக வசித்து வரும் வடமாநில ரயில் பயணிகள் உத்திரபிரதேசம், பீகார், ராஜஸ்தான், குஜராத், போன்ற சொந்த ஊர் பகுதிகளுக்கு சென்று வரவும் மேற்படி பகுதிகளில் வசிக்கும் தமிழக மக்கள் சொந்த ஊருக்கு வந்து செல்லவும் அதிக போக்குவரத்து நெரிசல் இல்லாத இத்தடத்தில் வட மாநிலங்களுக்கான விரைவு ரயில்களை இயக்க வேண்டும்.
சுற்றுச்சூழலை பாதுகாக்கவும், புதை படிவ எரிபொருளை சேமிக்கும் வகையிலும் திருவாரூரில் ரயில் இன்ஜின் மாற்றத்தை தவிர்க்கவும், பயண நேரத்தைக் குறைக்கவும் அதன் மூலம் அதிராம்பட்டினம் பேராவூரணி போன்ற ரயில் நிலையங்களில் விரைவு ரயில்கள் நின்று செல்லவும் திருவாரூர் பட்டுக்கோட்டை காரைக்குடி ரயில் பாதை மற்றும் திருத்துறைப்பூண்டி அகஸ்தியம்பள்ளி ரயில் பாதைகளை விரைவில் மின்மயமாக்க வேண்டும்." என்று கோரிக்கை மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
-
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
1 சவரன் தங்க நகை வாங்க போறீங்களா? கடைக்காரர் போடும் கணக்கில் அதிக மாற்றமா? ஏமாறாமல் இருக்க பில் தேவை -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
48 அவுட் ஆஃப் 234! திமுக கூட்டணியில் இதுவரை எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை சீட் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம்












Click it and Unblock the Notifications