தஞ்சாவூர் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

ம. நடராஜன் நினைவு தினம்.. இன்று முக்கிய முடிவை அறிவிக்கிறாரா சசிகலா?.. கலக்கத்தில் அதிமுக தலைமை?

Google Oneindia Tamil News

தஞ்சை: தஞ்சையில் உள்ள நடராஜன் நினைவிடத்தில் அவரது நினைவு தினத்தையொட்டி சசிகலா மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். உடன் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ் சகோதரர் ஓ ராஜாவும், நடராஜன் சமாதியில் அஞ்சலி செலுத்தினார்.

Recommended Video

    தொண்டர்களின் எதிர்பார்ப்புகள் நிறைவேறும் - சசிகலா அதிரடி! கலக்கத்தில் இ.பி.எஸ்,ஓ.பி.எஸ்!

    எம்ஜிஆர் மறைவுக்கு பின்னர் ஜா அணி, ஜெ அணி என அதிமுக இரு அணிகளாக உடைந்தது. அத்துடன் ஜெயலலிதாவை முக்கியத்துவம் வாய்ந்த ஆளுமையாக முன்னிறுத்தும் பணிகளையும் மறைமுகமாக செய்தவர் சசிகலா கணவர் ம நடராஜன் என்கிறார்கள்.

    ஜெ அணியை மூத்த தலைவர்கள் ஆதரிக்க காரணமும் ம நடராஜன்தான். அரசியல் முடிவுகளை எப்படி எடுக்க வேண்டும். எதிரிகளை எப்படி எதிர்கொள்ள வேண்டும் உள்ளிட்ட அரசியல் சாணக்கியத்தனங்களை ஜெயலிதாவுக்கு கற்றுக் கொடுத்தவரும் நடராஜன் என சொல்லப்படுகிறது. எம்ஜிஆர் மறைவுக்கு பின்னர் அரசியலிலிருந்து ஒதுங்கி இருக்க இருந்த ஜெயலலிதாவை சமாதானப்படுத்தி தைரியத்தை கொடுத்தவரே நடராஜன் தானாம்.

    நான்தான் ஜெயலலிதாவின் மகள்.. நடராஜன் மாமாவுக்கு நல்லா தெரியும்.. மதுரை மீனாட்சி பகீர் தகவல்! நான்தான் ஜெயலலிதாவின் மகள்.. நடராஜன் மாமாவுக்கு நல்லா தெரியும்.. மதுரை மீனாட்சி பகீர் தகவல்!

     ஜெயலலிதா மறைவு

    ஜெயலலிதா மறைவு

    ஜெயலலிதா மறைவுக்கு பின்னர் சசிகலா சிறைக்கு சென்ற போது ம நடராஜன் உடல்நலக் குறைவால் 2018 ஆம் ஆண்டு உயிரிழந்தார். முன்னதாக உடல்நலக் குறைவால் பெரும்பாக்கத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நடராஜனை சந்திக்க அவருக்கு பரோல் வழங்கப்பட்டது.

    நடராஜன் இறப்பு

    நடராஜன் இறப்பு

    நடராஜன் இறந்தவுடன் அவரது இறுதிச் சடங்குகளிலும் அவர் பங்கேற்றார். நடராஜனுக்கு தஞ்சாவூரில் விளார் கிராமத்தில் முள்ளிவாய்க்கால் முற்றம் எதிரே உள்ள இடத்தில் நினைவிடம் அமைக்கப்பட்டுள்ளது. சிறையிலிருந்து கடந்த ஆண்டு விடுதலையான சசிகலா கணவர் இறப்புக்கு பிறகு முதல் முறையாக நினைவிடம் சென்று கண்ணீர் அஞ்சலி செலுத்தினார்.

    அதிமுக

    அதிமுக

    சிறையிலிருந்து வந்து அதிமுகவை மீட்கும் நடவடிக்கைகளில் ஈடுபடாத சசிகலா சற்று பொறுமை காத்தார். தற்போது அதிமுக தொடர் தோல்வியை சந்தித்துள்ள நிலையில் தொண்டர்களை தக்க வைத்துக் கொள்வதற்காக தற்போது ஆன்மிக பயணம் என்ற பெயரில் தொண்டர்களை சந்தித்து வருகிறார்.

    தென் மாவட்டங்கள்

    தென் மாவட்டங்கள்

    அந்த வகையில் கடந்த 4 ஆம் தேதி தென் மாவட்டங்களுக்கு சென்ற சசிகலா இந்த முறை தஞ்சாவூர் சென்றுள்ளார். அங்கு கணவர் நடராஜனின் 4ஆவது ஆண்டு நினைவு தினத்தையொட்டி அவரது நினைவிடத்தில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

    என்ன அறிவிப்பு?

    என்ன அறிவிப்பு?

    அவருடன் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ்ஸின் சகோதரர் ஓ ராஜா சென்றுள்ளார். அவரும் நடராஜனின் சமாதியில் மரியாதை செய்தார். அதிமுகவை கைப்பற்றுவது குறித்து இதுவரை வெளிப்படையாக சசிகலா எதையும் பேசவில்லை. எனவே அவரது அரசியல் நிலைப்பாடு குறித்து இன்று ஏதேனும் பேசுவார் என தெரிகிறது. மேலும் அதிமுகவை தன்னிடம் ஒப்படைத்துவிடுமாறும் இரட்டைத் தலைமையை கேட்கவும் வாய்ப்பிருப்பதாகவே சொல்லப்படுகிறது.

    English summary
    Sasikala pays tribute in her husband M Natarajan memorial in Tanjore.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X