தஞ்சாவூர் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

என்னாது.. திமுக பிரமுகர் ரூ.100 கோடி சொத்து ஆக்கிரமிப்பா?.. ஆக்‌ஷனில் இறங்கிய தஞ்சை மாநகராட்சி

திமுக பிரமுகரின் ஆக்கிரமிப்பு கட்டிடம் இன்று இடித்து தள்ளப்பட்டது

Google Oneindia Tamil News

தஞ்சை: தஞ்சையில் திமுக பிரமுகர் ஆக்கிரமிப்பில் இருந்து மீட்கப்பட்ட மாநகராட்சிக்கு சொந்தமான சுதர்சன சபா வளாகத்திலிருந்த விதிமீறல் கட்டிடங்கள் இடித்து அப்புறப்படுத்தப்பட்டன.

தஞ்சை பழைய பஸ் ஸ்டாண்டு அருகே மாநகராட்சிக்கு சொந்தமான பழமையான சுதர்சன சபா உள்ளது... இது வாடகை அடிப்படையில் 99 ஆண்டுகளாக குத்தகைக்கு மாநகராட்சி நிர்வாகத்தால் வழங்கப்பட்டது...

பிற்பகல் 3 மணி நிலவரம்.. உத்தரகாண்ட் சட்டசபை தேர்தலில் 49.24 சதவீதம் வாக்குகள் பதிவு! பிற்பகல் 3 மணி நிலவரம்.. உத்தரகாண்ட் சட்டசபை தேர்தலில் 49.24 சதவீதம் வாக்குகள் பதிவு!

திமுக பிரமுகர் ஒருவர்தான், இந்த சபாவை குத்தகைக்கு எடுத்திருந்தார்.. ஆனால், சபா வளாகத்தில் பார், பேக்கரி, செல்போன் கடை, ரெஸ்ட்டாரண்டுகள் போன்றவை கட்டப்பட்டு, உள்வாடகைக்கு விடப்பட்டிருந்தது...

 திமுக பிரமுகர்

திமுக பிரமுகர்

இது விதிமீறல் ஆகும்.. இதன் மூலம் மாநகராட்சிக்கு பல கோடி ரூபாயும் வருவாய் இழப்பும் ஏற்பட்டது... எனவே, நகர ஊரமைப்பு சட்டம் 1971 விதிகளின்படி, உரிய அனுமதி பெறாமல் கட்டப்பட்டு உள்வாடகைக்கு விடப்பட்டிருந்த அனைத்து கடைகளையும் மாநகராட்சி அதிகாரிகள் கடந்த சில மாதங்களுக்கு முன்பு பூட்டி சீல் வைத்தனர்.. மேலும், சம்பந்தப்பட்ட திமுக பிரமுகரிடம் இருந்த சுதர்சன சபாவை ஆக்கிரமிப்பாளர்களை வெளியேற்றுதல் சட்டம் 1975-ன்படி, மாநகராட்சி அதிகாரிகள் அதிரடியாக கையகப்படுத்தினர்.

 தண்டோரா

தண்டோரா

இதையடுத்து அந்த இடத்தில் நோட்டீஸ் ஒட்டப்பட்டது.. கையகப்படுத்துவதற்கான தண்டோராவும் ஊர் முழுக்க போடப்பட்டது.. கையகப்படுத்திய இடத்தில் உள்ள பொருட்களை வெளியே எடுத்துக் கொள்ள ஒரு வார காலம் அவகாசமும் அளிக்கப்பட்டிருந்தது. அந்த இடத்தின் மதிப்பு இப்போதைக்கு மதிப்பு ரூ.100 கோடி இருக்கும் என்கிறார்கள்..

மாநகராட்சி

மாநகராட்சி

ஒப்பந்த தொகையான ரூ.20 கோடியும் மாநகராட்சிக்கு செலுத்தவில்லை. இப்படிப்பட்ட சூழலில்தான், மாவட்ட கலெக்டர் தலைமையில் மாநகராட்சி அதிகாரிகள், இன்று சுதர்சன சபாவில் இருந்த அனைத்து கடைகளையும் மிஷின் வைத்து இடித்து தள்ளினார்கள்.. இந்த பணி துவங்குவதற்கு முன்னதாக, 200-க்கும் மேற்பட்ட போலீஸார் பாதுகாப்புக்காக அங்கே குவிக்கப்பட்டனர்..

 நடவடிக்கை

நடவடிக்கை

அதாவது இந்த இடம், 100 வருடங்கள் குத்தகை அடிப்படையில் செயல்பட்டு வந்த நிலையில், ஒப்பந்த காலம் முடிந்து, அதனை மாநகராட்சியிடம் ஒப்படைக்காமல், உள்ளூர் திமுக பிரமுகர்கள் இடத்தை ஆக்கிரமித்து, அங்கு மதுபான கடை, பார் உள்ளிட்டவைகள் விதிகளை மீறி நடத்தி வந்ததாலேயே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

English summary
Thanjavur Corporation owned land worth Rs 100 crore recovered from DMK executive and aggressive removal
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X