அண்ணே விடுங்க...கதறியும் விடாமல் அடித்த மிருக குணம் படைத்த இளைஞர்கள் - ரத்தக்கண்ணீர் வரும் வீடியோ
அண்ணே விடுங்க என்று கதறியும் விடாமல் பின் பக்கத்திலும் உள்ளங்காலிலும் தடியை கொண்டு தாக்கியுள்ளனர் மிருக குணம் படைத்த இளைஞர்கள். இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
தஞ்சாவூர்: ஒரு இளைஞரின் கண்களை கட்டி தர தரவென இழுத்துச்சென்று மரத்தில் முட்டவைத்து பின் பக்கத்தில் பிரம்மால் அடி வெளுக்கிறார்கள் மிருக குணம் படைத்த சிலர். அண்ணே விடுங்கண்ணே என்று கதறும் அந்த இளைஞரின் கதறல் கல் நெஞ்சத்தையும் கதற வைத்து விடும் ஆனால் அந்த இளைஞர்கள் கொஞ்சம் கூட மனமிறங்காமல் அடித்துக்கொண்டே இருக்கிறார்கள். இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
Recommended Video

தஞ்சை மாவட்டம் பாபநாசம் தாலுக்கா பூண்டி மேலத் தெருவில் வசித்து வரும் குணசேகரன் மகன் ராகுல் வயது 22 கூலித் தொழிலாளியான இவர் பணம் திருடி விட்டதாக கூறி அப்பகுதியை சேர்ந்த சிலர் பச்சை துண்டால் ராகுலின் கண்களை கட்டி இழுத்துச் சென்று மரத்தில் கட்டிவைத்து ராகுலின் பின்புறம் பிரம்பால் சரமாரியாக தாக்கினார்கள்.
இந்த தாக்குதல் சம்பவத்தை வீடியோ எடுத்து அதனை சமூக வலைத்தளங்களில் வெளியிட்டுள்ளனர். இந்த வீடியோவை பார்க்கும் பலருக்கும் ரத்தக்கண்ணீரை வரவழைக்கிறது.

இளைஞரின் கதறல்
ஒவ்வொருமுறை அடி வாங்கும் போதும் அண்ணே வேண்டாம்னே விட்டுருங்கண்ணே என்று கதறுகிறார் ராகுல். விடாமல் விரட்டி விரட்டி அடிக்கிறார்கள். அதில் அடிப்பவன் பெயர் ஐயப்பா என்று தெரிகிறது.

பின்பக்கத்தில் அடி
கறுப்பு சட்டையும் காவி வேட்டியும் கட்டிக்கொண்டு அடிக்கும் அந்த நபரை ஐயப்பா விட்ரு என்று ஒருவர் சொல்கிறார். ஆனாலும் விடாமல் அடிக்கிறார் அந்த நபர். இருவர் பிடித்துக்கொள்ள மீண்டும் பின் பக்கத்திலேயே அடிக்கிறார் அந்த நபர்.

விடாமல் அடித்த இளைஞர்கள்
ஒரு கட்டத்தில் வலி தாங்க முடியாமல் துடிதுடித்த ராகுல் மயக்கம் அடைந்து அந்த இடத்திலேயே சரிந்து விழுகிறார்.
ஆத்திரம் தீராத அந்த கும்பல் மயக்கநிலையில் இருந்த ராகுலின் கால்களில் அடித்து துன்புறுத்தினர். இந்த காட்சியை அந்த கும்பலில் ஒருவர் வீடியோவாக பதிவு செய்து சமூக வலைத்தளங்களில் வெளியிட்டுள்ளார்

பணம் திருடினாரா?
பணம் திருடினார் என்பதுதான் அவர் மீதான குற்றச்சாட்டு. காவல்நிலையத்தில் புகார் கொடுக்காமல் அந்த இளைஞரை கொலைவெறியோடு தாக்கிய கும்பல் இதனை வீடியோவாக பதிவு செய்து சமூக வலைத்தளங்களில் வெளியிட்டுள்ளனர்.

மருத்துவமனையில் சிகிச்சை
இவர்கள் அடித்த அடியில் துடிதுடித்து மயக்கம் அடைந்து சரிந்த கூலி தொழிலாளி வலி பொறுக்க முடியாமல் எலிமருந்தை சாப்பிட்டு தற்கொலைக்கு முயற்றி செய்துள்ளார். உயிருக்கு ஆபத்தான நிலையில் தஞ்சை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அவர் சிகிச்சை பெற்று வருகிறார்.












Click it and Unblock the Notifications