அப்பா சொன்னாங்க.. நாங்க ராஜராஜசோழன் பரம்பரை.. தஞ்சை பெரியக்கோவிலில் பூரித்தபடி கூறிய வனிதா
தஞ்சாவூர்: ‛‛எங்களின் குடும்ப பாரம்பரியம் பட்டுக்கோட்டை நாட்டுச்சாலை. நாட்டுச்சாலை கிராமத்தில் தான் எங்கள் அப்பாவின் வாழ்க்கை ஆரம்பித்தது. எங்கள் அப்பா நிறைய கதைகளை சொல்லுவார். ராஜராஜசோழன் பரம்பரை என்று சொல்வார்'' என்று நடிகை வனிதா தெரிவித்துள்ளார்.
நடிகர் விஜயக்குமாரின் மகள் வனிதா. இவர் நடிகையில் இருந்து தற்போது இயக்குநர் அவதாரம் எடுத்துள்ளார். ‛மிசஸ் & மிஸ்டர் ' எனும் திரைப்படத்தை அவர் இயக்கி நடித்துள்ளார். இந்த திரைப்படத்தில் வனிதா மற்றும் ராபர்ட் மாஸ்டர் இணைந்து நடித்துள்ளனர்.

இந்த திரைப்படத்தின் படப்பிடிப்புகள் முடிவடைந்துள்ளது. போஸ்ட் புரோடெக்ஷன் பணிகள் நடந்து வருகிறது. மிசஸ் & மிஸ்டர் திரைப்படம் டிசம்பர் மாதம் திரைக்கு கொண்டு வரும் வகையில் பணிகள் நடந்துவருகிறது.
இந்நிலையில் தான் நடிகை வனிதா தஞ்சாவூர் பெரியக்கோவிலில் இன்று சுவாமி தரிசனம் செய்தார். அதன்பிறகு அவர் பத்திரிகையாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது: தஞ்சாவூர் கோவிலுக்கு வந்ததை பெரிய ஆசீர்வாதமாக பார்க்கிறேன். எங்கள் அப்பா தஞ்சாவூர்காரர். எங்களின் குடும்ப பாரம்பரியம் பட்டுக்கோட்டை நாட்டுச்சாலை. நாட்டுச்சாலை கிராமத்தில் தான் எங்கள் அப்பாவின் வாழ்க்கை ஆரம்பித்தது. எங்களின் வேர்கள் தஞ்சாவூர் தான்.

ஆனால் நான் தஞ்சாவூர் பெரியக்கோவிலுக்கு வந்தது இல்லை. எங்கள் அப்பா நிறைய கதைகளை சொல்லுவார். ராஜராஜசோழன் பரம்பரை என்று சொல்வார். அதுபற்றி படங்களில் பார்த்துள்ளோம்.கதைகளில் படித்துள்ளோம். ஆனால் இந்த கோவில் மூலம் நேரில் பார்த்துள்ளோம். நான் இங்கு ஒரு கல்யாணத்துக்கு வந்தோம். தஞ்சாவூர் டவுனுக்கு வந்தேன். இதனால் பெரியக்கோவிலை பார்க்க வேண்டும் என்று ஆசை வந்து வந்தேன்.

இன்று சதயவிழா என்று எனக்கு தெரியாது. அதனை ஆசீர்வாதமாக பார்க்கிறேன். ஜோவிகா தயாரிப்பில் நான் இயக்கும் முதல் படம் ‛மிசஸ் & மிஸ்டர்'. கூடிய விரைவில் திரைக்கு வருகிறது. டைரக்டர் என்ற பெரிய பரிணாமம் எடுக்கிறதுக்கு முன்னாடி இங்கு வந்து ஆசீ வாங்கியது எனது முன்னோர்கள் கொடுக்கிற ஆசீர்வாதமாக தான் பார்க்கிறேன்'' என கூறியுள்ளார்.
அருசியலில் விஜய் புதிதாக வந்துள்ளார். அவர் எந்த அளவுக்கு சோபிப்பார் என்ற கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு, ‛‛நான் விஜய்க்கு அனைத்து வகையிலும் வாழ்த்துகிறேன். அரசியல் என்பது மிகப்பெரிய பரிமாணம் எடுத்துள்ளார். நான் எனது ஆழ்மனதில் இருந்து விஜய்க்கு வாழ்த்து சொல்கிறேன். கண்டிப்பாக அவர் பெரிய வெற்றி அடைய வேண்டும்'' என்றார்.

அதன்பிறகு பத்திரிகையாளர், ‛‛நீங்கள் சினிமா துறையில் உள்ளீர்கள். உதயநிதியும், விஜயும் சினிமாத்துறையில் இருந்து வந்தவர்கள் தான். ஆனால் 2 பேரும் அரசியல் எதிரி என்று பேசுகிறார்களே?'' என்ற கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு வனிதா, ‛‛அரசியல் என்ற வகையில் எல்லாமே சரி. 2 பேரும் நண்பர்கள் தான்'' என்றார். இதையடுத்து இருவரில் யாருக்கு சப்போர்ட்? என்ற கேள்வி முன்வைக்கப்பட்டது. அதற்கு வனிதா, ‛‛நல்ல தமிழகம் அமைய யார் வந்தால் நான் சப்போர்ட் செய்வேன்'' என்று கூறி சென்றார்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன?












Click it and Unblock the Notifications