தேனியில் விநாயகர் சதுர்த்தி ஊர்வலம் 2024: டிராக்டர் கவிழ்ந்து 3 சிறுவர்கள் பலி! கதறும் பெற்றோர்
தேனி: தேனியில் விநாயகர் சதுர்த்தி சிலை ஊர்வலத்தின் போது டிராக்டர் கவிழ்ந்து 3 சிறுவர்கள் பலியான சோகம் ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
விநாயகர் சதுர்த்தி விழா நேற்றுமுன் தினம் நாடு முழுவதும் கொண்டாடப்பட்டது. இந்த விழாவையொட்டி ஆங்காங்கே பெரிய அளவிலான விநாயகர் சிலைகள் செய்யப்பட்டன.

இவற்றை ஊர்வலமாக விழா குழுவினர் அழைத்து சென்றனர். அந்த வகையில் தேனியில் நடந்த விநாயகர் சதுர்த்தி விழாவின் போது டிராக்டரில் வைத்து விநாயகரை ஊர்வலமாக கொண்டு சென்றனர்.
அப்போது அந்த டிராக்டருடன் பக்தர்கள் சென்றுக் கொண்டிருந்தனர். விழாவின் போது விநாயகர் சிலையை டிராக்டரில் வைத்து ஊர்வலமாக கொண்டு சென்றனர். அப்போது எதிர்பாராதவிதமாக டிராக்டர் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில் 3 சிறுவர்கள் உயிரிழந்தனர். மேலும் இருவர் படுகாயமடைந்தனர். தகவலறிந்து விரைந்து வந்த போலீஸார் காயமடைந்த 2 பேரை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.
உயிருக்கு ஆபத்தான நிலையில் அனுமதிக்கப்பட்ட 2 பேருக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் குறித்து போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்!












Click it and Unblock the Notifications