8 நாட்களாக போக்கு காட்டிய அரி கொம்பன்.. யானை வனத்துறையிடம் பிடிபட்டது எப்படி? 144 தடை உத்தரவு
தேனி: தேனி மாவட்டம் கம்பம் பகுதியில் மக்களை அச்சுறுத்தி வந்த அரி கொம்பன் யானை வனத்துறையிடம் சிக்கியது. இந்த யானை தற்போது லாரியில் ஏற்றப்பட்டு கொண்டு செல்லப்படுகிறது. யானை கொண்டு செல்லப்படும் இடங்களில் மின் வினியோகம் நிறுத்தப்பட்டுள்ளது.
கேரள மாநிலம் இடுக்கி மாவட்டத்தில் உள்ள சின்னைக்கானல் மற்றும் சாந்தம்பாறை உள்ளிட்ட பகுதிகளில் "அரி கொம்பன்" என்று அழைக்கப்படும் காட்டு யானை வலம் வந்தது. அரி கொம்பன் காட்டு யானை ஊருக்குள் புகுந்து அங்குள்ள கிராம மக்கள் 8 பேரை கொன்றது. விளை நிலங்களையும் சேதப்படுத்தியது.
இதைத்தொடர்ந்து கேரள வனத்துறையினர் அந்த காட்டு யானையை மயக்க ஊசிகள் செலுத்தி பிடித்து, தமிழக-கேரள எல்லையில் உள்ள பெரியாறு புலிகள் காப்பகத்துக்கு உட்பட்ட மேதக்கானம் என்ற வனப்பகுதியில் விட்டனர். அந்த யானையின் நடமாட்டத்தை கண்டறிய கழுத்தில் ரேடியோ காலர் எனப்படும் ஜிபிஎஸ் கருவியை பொருத்தி தொடர்ந்து கண்காணித்தனர்.

அரிகொம்பன் யானை கடந்த சில வாரங்களுக்கு முன்பாக மங்கல தேவி கண்ணகி கோவில் வழியாக தமிழக வனப்பகுதிக்குள் புகுந்தது. அப்போது தேனி மாவட்டம் மேகமலை, ஹைவேவிஸ் மலைப்பகுதியில் யானை தஞ்சம் அடைந்தது. அங்கு அடிக்கடி தோட்ட தொழிலாளர்கள் குடியிருப்பு பகுதிக்குள் புகுந்து பொதுமக்களை அச்சுறுத்தி வந்தது.
இந்த சூழலில் கடந்த மாதம் 27-ந்தேதி 'அரி கொம்பன்' காட்டு யானை கம்பம் நகருக்குள் வந்தது. நகருக்குள் யானை வீதி, வீதியாக ஓடியது. திடீரென யானை ஊருக்குள் புகுந்ததால் மக்கள் பீதி அடைந்தனர். கம்பம் நகர மக்களை கதிகலங்க வைத்த இந்த யானையை பிடிக்க வனத்துறையினர் தீவிர முயற்சி மேற்கொண்டனர்.
இதற்கிடையே, ராயன்பட்டி அருகே மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் உள்ள சண்முகா நதி அணை பகுதியில் கடந்த சில தினங்களாக யானை முகாமிட்டு இருந்தது. அரிசி கொம்பன் யானையை பிடிக்க வனத்துறையினர் தொடர்ந்து முயற்சி மேற்கொண்டு வந்ததில் , அரி கொம்பன் யானையை வனத்துறையினர் பிடித்தனர்.
வனப்பகுதியில் இருந்து வந்து தனியார் ஒருவரின் தோட்டத்திற்குள் யானை நின்று கொண்டிருந்த போது வனத்துறையினர் யானையை பிடித்தனர். 3 கும்கி யானைகள் கொண்டு வரப்பட்டுள்ள நிலையில், அவற்றை லாரி மூலம் வேறு இடத்திற்கு கொண்டு செல்ல வனத்துறையினர் முடிவு செய்துள்ளனர். எனினும் யானை எங்கு கொண்டு செல்லப்படுகிறது என்ற தகவல் தெளிவாக தெரியவில்லை.
தேனி சின்ன ஓவலாபுரம் பகுதியில் பிடிபட்ட அரி கொம்பன் யானை களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பகத்திற்கு கொண்டு செல்லப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது. அரி கொம்பன் யானை பிடிபட்ட நிலையில் பாதுகாப்புக்காக ஒவலாபுரம், ஆணைப்பட்டி, ஆனைமலையான்பட்டி பகுதியில் 144 தடை உத்தரவு போடப்பட்டுள்ளது. இதேபோல் அரி கொம்பன் யானை லாரி மூலம் கொண்டு செல்லப்படும் வழியில் மின்வினியோகம் நிறுத்தப்பட்டுள்ளது.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications