பாரதிராஜாவின் கடைசி நிமிடங்கள்.. தேனி தோட்டத்தில் கலங்கிய பிரபலங்கள்! காற்றில் கலந்த இயக்குனர் இமயம்
தேனி: பாரதிராஜாவின் உடல், அவரது விருப்பப்படியே, சொந்த மண்ணில் அடக்கம் செய்யப்பட்டது.. திரையுலகினரும், அரசியல் பிரமுகர்களும், ஆயிரக்கணக்கான பொதுமக்களும் இறுதி அஞ்சலி நிகழ்ச்சியில் பங்கேற்று, இயக்குனர் இமயத்துக்கு தங்களது கண்ணீர் அஞ்சலியை செலுத்தினார்கள்.
நேற்று அதிகாலை உயிரிழந்த பாரதிராஜாவின் உடல், நேற்றிரவு சென்னையில் இருந்து தேனிக்கு பாரதிராஜா எடுத்து செல்லப்பட்டது.. இதையடுத்து, தங்கள் மண்ணின் மைந்தனை கடைசி முறையாகக் காண்பதற்காக தேனி மற்றும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து ரசிகர்கள் மற்றும் பொதுமக்கள் விடிகாலையிலேயே அங்கு திரள துவங்கினார்கள்..

பாரதிராஜாவின் உடலைக் கண்டு அங்குள்ள மக்கள் துக்கம் தாளாமல் வெடித்துக் கதறி அழுதது பார்ப்போரைக் கண் கலங்க செய்தது. பொதுமக்கள் மற்றும் முக்கிய பிரமுகர்களின் வருகையை முன்னிட்டு, பாதுகாப்புப் பணிக்காக 700-க்கும் மேற்பட்ட போலீசார் நேற்றிரவு முதலே ஈடுபடுத்தப்பட்டிருந்தனர். இதனால் வத்தலகுண்டு மற்றும் தேனியின் முக்கியப் பகுதிகளில் காவலர்கள் பெருமளவில் குவிந்திருந்தனர்.
மாவட்ட மக்கள் தவிர, திரையுலகினரும், அரசியல் பிரமுகர்களும், தேனியில் திரண்டனர்.. குறிப்பாக நடிகை ராதிகா சரத்குமார் மற்றும் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் உள்ளிட்டோர் இறுதி நிகழ்வில் கலந்து கொண்டனர்..
மேலும், நிகழ்விடத்திற்கு வந்த சீமான், பாரதிராஜாவின் மகளை அரவணைத்தபடி அழைத்து வந்தார். பாரதிராஜாவின் சகோதரர் ஜெயராஜைக் கண்டதுமே சீமான் அவரைக் கட்டியணைத்துத் துக்கம் தாங்காமல் கதறி அழுத காட்சி அங்கிருந்தவர்களைப் பெரும் சோகத்தில் ஆழ்த்தியது.
அதேபோல, திமுக கூட்டணியில் இருக்கும் எம்எல்ஏ-வும், தேனி மாவட்டத்தின் மூத்த அரசியல் தலைவருமான ஓ.பன்னீர்செல்வம் தன்னுடைய ஆதரவாளர்களுடன் இந்த இறுதி நிகழ்வில் நேரில் பங்கேற்று. பாரதிராஜாவின் உடலுக்கு அவர் மாலை அணிவித்துத் தனது மரியாதையைச் செலுத்தினார்.
பாரதிராஜாவின் மறைவு திரையுலகினரை உலுக்கியுள்ள நிலையில், முன்னணி நடிகர் வடிவேலு இறுதி அஞ்சலி செலுத்தும் இடத்தில் சோகம் தாளாமல் அழுதபடியே அமர்ந்திருந்தார்.. கண்ணாடிப் பெட்டியில் வைக்கப்பட்டிருந்த பாரதிராஜாவின் உடலைப் பார்த்து உடலெங்கும் குலுங்கி அழுத வடிவேலு, பெட்டியின் மீது போடப்பட்டிருந்த மாலைகளை விலக்கி, பாரதிராஜாவின் முகத்தை உற்றுப் பார்த்தபடி அழுதுகொண்டே நின்றது நெஞ்சை உலுக்கிவிட்டு சென்றது.
பாரதிராஜாவின் நெருங்கிய நண்பரும், தமிழ் சினிமாவின் முன்னணி கவிஞருமான வைரமுத்துவும் இந்த இறுதி நிகழ்வில் பங்கேற்றிருந்தார்.. அவரது முகம் முழுவதும் சோகம் அப்பியபடி, நண்பனின் பிரிவைத் தாங்க முடியாமல் அமைதியாக கடைசிவரை அமர்ந்திருந்தார்,..
நடிகை நிரோஷா, இயக்குனர்கள் பார்த்திபன், வெற்றிமாறன், பாக்யராஜ், சித்ரா லட்சுமணன் உள்ளிட்ட பலரும் பாரதிராஜாவுக்கு இறுதி அஞ்சலி செலுத்தினார்கள்,
தமிழ் சினிமாவின் கிராமியக் கதைகளுக்கும், எதார்த்தப் படைப்புகளுக்கும் புதிய இலக்கணம் வகுத்துக் கொடுத்த மாபெரும் இயக்குனரின் இறுதிப் பயணத்தில், ஒட்டுமொத்தத் தேனி மாவட்டமும் கண்ணீர் கடலில் மிதந்தது..
பிற்பகலில் 2 மணி நேரம் பண்ணை வீட்டில் குடும்ப உறுப்பினர்கள் இறுதிச்சடங்கினை நடத்தினார்கள்.. பிறகு பண்ணை வீட்டில் இருந்து பாரதிராஜா உடல் ஊர்வலமாக கொண்டுவரப்பட்டது. தேவதானப்பட்டி கூட்ரோடு பகுதியில் உள்ள அவரது பண்ணை தோட்டத்தில் உடல் வைக்கப்பட்டு முழு அரசு மரியாதை செய்யப்பட்டது.. இறுதியில் 72 குண்டுகள் முழங்க. பாரதிராஜாவின் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது.
-
"பாரதிராஜா இல்லையென்றால் நாங்களே இல்லை!" குடும்பத்திற்குள் பிரச்சனை.. கங்கை அமரன் வருத்தம் -
Bharathiraja: பாரதிராஜா உடலை பார்த்து சிவகுமார் பேசிய வார்த்தை.. கண்கலங்க வைத்த காட்சி -
"எங்கே பாரதிராஜா? இனி நான் என்ன பதில் சொல்வேன்?” கதறிய வைரமுத்து... கண்கலங்க வைத்த இறுதி மரியாதை! -
Bharathiraja: "கூட இருப்பவர்களையே நம்ப முடியாது..." ரசிகர்களை கலங்க வைக்கும் பாரதிராஜாவின் கடைசி பேட்டி -
"என் குருநாதர்.. என்னால வர முடியாம போச்சு.." பாரதிராஜா மறைவு.. கண் கலங்கிய நெப்போலியன்.. அஞ்சலி! -
பாரதிராஜா உடலுக்கு சொந்த ஊரில் இறுதி சடங்கு.. அரசு மரியாதையுடன் நல்லடக்கம்! அமைச்சர் ராஜ்மோகன் தகவல் -
அரசியலுக்கு வாய்யா.. கலைஞர் அழைத்தும் போகாத பாரதிராஜா! ஜெயலலிதாவுக்கும் நோ! கடைசி வரை கலைஞர் தான்! -
பாரதிராஜா உடலுக்கு முழு அரசு மரியாதை வழங்கப்படும்.. முதல்வர் விஜய் அறிவிப்பு! -
Bharathiraja: இறப்பதற்கு முன் பாரதிராஜா கூறிய கடைசி ஆசை? ரசிகர்களை கலங்க வைக்கும் நினைவுகள்! -
பாரதிராஜா, இளையராஜா வாழ்க்கையில் நடந்த "ஒரே” துயரம்.. நம்பிக்கை நாயகனுக்கு இப்படியா நடக்கணும்! -
உடைந்த பாரதிராஜா.. மகன் மனோஜ்ஜை மறக்க முடியாமல் தேம்பி தேம்பி அழுது, புத்திர சோகத்தாலேயே போன உயிர் -
இயக்குனர் பாரதிராஜா காலமானார்.. இமயம் சரிந்தது.. திரையுலகம் கண்ணீர்!












Click it and Unblock the Notifications