தேனியில் அரசு வேலை.. 50 லட்சம் ரூபாய் மோசடி. . முன்னாள் பிஆர்ஓ மீது பாய்ந்த வழக்கு
தேனி: அரசு வேலை வாங்கித் தருவதாக கூறி 50 லட்சம் ரூபாய் பெற்று பண மோசடியில் ஈடுபட்டதாக தேனி மாவட்டத்தின் முன்னாள் பிஆர்ஓ மீது மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே தாமரைக்குளம் பகுதியில் வசித்து வருபவர் சாந்தி, இவரது மகன் சூரிய நாராயணன் படித்து முடித்துவிட்டு அரசு வேலைக்கு முயற்சி செய்து வந்துள்ளார்.

இந்த நிலையில் தேனி மாவட்டத்தில் கடந்த 2021 ஆம் ஆண்டு மாவட்ட மக்கள் செய்தி தொடர்பு துறை அலுவலராகப் (PRO) பணிபுரிந்து வந்த மதுரை மாவட்டத்தை சேர்ந்த சண்முகசுந்தரம் என்பவர் சாந்திக்கு அறிமுகம் ஆகியுள்ளார்
அப்போது செய்தி மக்கள் தொடர்பு துறை அலுவலராக பணி புரிந்து வருவதால் தனக்கு அரசு அதிகாரிகள், அரசியல் கட்சியினர் என பலருடன் தொடர்பு இருப்பதாகவும் பலருக்கு அரசு வேலை வாங்கி கொடுத்திருப்பதாகவும் 50 லட்சம் ரூபாய் பணம் கொடுத்தால் உதவி மக்கள் செய்தி தொடர்பு அலுவலர் (APRO) பணி வாங்கி தருவதாக கூறியுள்ளார்
இதனை நம்பிய சாந்தி தனது மகனுக்கு அரசு வேலை கிடைக்கும் என்ற நம்பி தவணை முறையில் கடந்த 2021 ஆம் ஆண்டு சண்முகசுந்தரம் மற்றும் அவரது மனைவி செண்பகவள்ளி ஆகியோரிடம் 50 லட்சம் ரூபாய் பணம் கொடுத்ததாக கூறப்படுகிறது.
பின்னர் தன் மகனுக்கு எப்போது அரசு வேலை கிடைக்கும் என கேட்டபோது சண்முகசுந்தரம் தொடர்ந்து காலம் தாழ்த்தி வந்ததாக கூறப்படுகிறது
இந்த நிலையில் சண்முகசுந்தரம் அரசு வேலை வாங்கி தருவதாக 4 நபர்களிடமிருந்து 74 லட்சம் ரூபாய் பெற்று மோசடி செய்துள்ளதாகவும் இதனை அறிந்த சாந்தி தான் ஏமாற்றப்பட்டதாக உணர்ந்து தேனி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் அளித்தார்
இதனைத் தொடர்ந்து தேனி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சிநேக பிரியா உத்தரவின் படி மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் தேனி மாவட்ட முன்னாள் மக்கள் செய்தி தொடர்பு அலுவலர் சண்முகசுந்தரம் மற்றும் அவரது மனைவி செண்பகவள்ளி ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்
சண்முகசுந்தரம் தற்போது சேலம் போக்குவரத்து கழக மக்கள் செய்தி தொடர்பு அலுவலராக (PRO) பணிபுரிந்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
அரசு வேலை வாங்கித் தருவதாக மோசடி நடைபெறுவது அண்மைக்காலங்களில் அதிகரித்துள்ளது. யாராவது அரசு வேலையில் அவரை தெரியும்.. இவரைத் தெரியும்.. என்று மோசடி செய்ய முயன்றால் உடனடியாக காவல்துறையில் புகார் அளிப்பது நல்லது.. அரசு ஊழியராகவே இருந்தாலும் அரசு வேலை வாங்கித் தர முடியாது.. அரசு வேலைக்கு போட்டி தேர்வுகள் மூலமே தேர்வு செய்யப்படுகிறது . எனவே உங்களிடம் யாராவது பணம் கொடுத்தால் அரசு வேலை கிடைக்க வேண்டும் என்று நம்பிக்கை வார்த்தைகளாக பேசினால் உடனே காவல்துறைக்கு புகார் அளிக்க வேண்டும்.
-
திமுகவை விட 2% வாக்கு அதிகம்.. 3ம் இடத்திற்கு செல்கிறது அதிமுக.. புதிய டேட்டாவுடன் வந்த ஆதவ் அர்ஜுனா -
சிறகடிக்க ஆசை: முத்து மீனா வாழ்க்கையில் நடந்த நல்ல விஷயம்.. சந்தோஷத்தில் விஜயா! ரோகிணி செய்த செயல் -
தங்கம்.. 15 ஆண்டுகளில் இல்லாத மிகப்பெரிய சரிவு! 2011 செப்டம்பர் 'கிளைமாக்ஸ்' மீண்டும் நடக்கிறதா? -
"தயவு செய்து தண்ணீரை கொடுங்க.." இந்தியாவிடம் கெஞ்சும் பாகிஸ்தான்.. பஞ்சம் மோசமாக தாக்கும் போல! -
"பாகிஸ்தானுக்கு தண்ணீர் கொடுக்க முடியாது.." சர்வதேச அரங்கில் லெப்ட் அண்ட் ரைட் வாங்கிய இந்தியா! -
தேனியில் 25 சவரன் அடமான தங்க நகையை மீட்க போன பால் வியாபாரி.. கொத்தனார் வேற.. மக்களுக்கு பெரிய பாடம் -
மோடியின் பணமதிப்பிழப்பால் மாடியிலிருந்து விழுந்து செத்தாரா பாகிஸ்தானின் ஜாவேத் கானானி? துரந்தர் 2! -
ரேஷன் அட்டைதாரர்களுக்கு மெகா ஆஃபர்: ஒரே மாதத்தில் 3 மாத ரேஷன்! மத்திய அரசின் சர்ப்ரைஸ் பின்னணி என்ன -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
விசிக + காங்கிரஸ்.. திமுகவையும் விட்டு வைக்காத இ.கம்யூனிஸ்ட்.. எந்தெந்த தொகுதிகளை கேட்குது பாருங்க! -
மத்தி மீனின் "கோடி" ரூபாய் ரகசியம்.. விலை மலிவான இந்த மீனுக்குள் ஒளிந்திருக்கும் நன்மை! வரப்பிரசாதம்












Click it and Unblock the Notifications