சோகமே உருவான வடிவில் ஓபிஎஸ்.. நேரில் சந்தித்து ஆறுதல் சொன்ன எச்.ராஜா!
ஓபிஎஸ் தாயார் பழனியம்மாள் மறைவையடுத்து ஓபிஎஸ் வீட்டுக்குச் சென்று ஆறுதல் தெரிவித்தார் எச்.ராஜா.
தேனி : பாஜக மூத்த தலைவர் எச்.ராஜா தேனி மாவட்டம் பெரியகுளத்திற்குச் சென்று ஓ.பன்னீர்செல்வத்தின் தாயார் பழனியம்மாள் உருவப் படத்திற்கு மலர்தூவி அஞ்சலி செலுத்தினார்.
தாயாரின் மறைவால் சோகத்தில் வாடும் ஓ.பன்னீர்செல்வத்திற்கு ஆறுதல் தெரிவித்தார் எச்.ராஜா.
பின்னர் அங்கிருந்து வத்தலகுண்டு வந்த அவர், செய்தியாளர்களைச் சந்தித்தபோது, ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் பணநாயகம் வென்றது என விமர்சித்தார்.

ஓபிஎஸ் தாயார் மறைவுக்கு அஞ்சலி
தேனி மாவட்டம் பெரியகுளத்தில், முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்தின் தாயார் பழனியம்மாள் வயது முதிர்வால் கடந்த பிப்ரவரி 24ஆம் தேதி காலமானார். ஓபிஎஸ் தாயார் மறைவையடுத்து, பல்வேறு அரசியல் கட்சிகளின் தலைவர்கள் மற்றும் முக்கிய நிர்வாகிகள் இரங்கல் தெரிவித்தனர். மேலும், சீமான் உள்ளிட்ட பலர் ஓபிஎஸ் வீட்டிற்கு நேரில் சென்று ஓ.பன்னீர்செல்வத்திற்கு ஆறுதல் தெரிவித்தனர்.

ஓபிஎஸ்ஸுக்கு ஆறுதல்
இந்நிலையில் இன்று பாஜக தேசிய செயற்குழு உறுப்பினர் எச்.ராஜா மற்றும் தேனி மாவட்ட பாஜக நிர்வாகிகள் முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்தின் இல்லத்திற்கு நேரில் சென்று அங்கு வைக்கப்பட்டிருந்த ஓபிஎஸ்ஸின் தாயார் பழனியம்மாள் உருவப் படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தினர். அதனைத் தொடர்ந்து ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்களுக்கு ஆறுதல் தெரிவித்தனர்.

பாஜக வெற்றி
அதன்பின்னர் அங்கிருந்து புறப்பட்ட பாஜக மூத்த தலைவர் எச்.ராஜா, திண்டுக்கல் மாவட்டம் வத்தலகுண்டு பேருந்து நிலையம் முன்பாக பாஜகவினர், திரிபுரா, நாகாலந்து மாநில தேர்தல்களில் பாஜக வெற்றி பெற்றதைக் கொண்டாடும் விதமாக இனிப்புகள் வழங்கிய நிகழ்வில் கலந்துகொண்டார்.

ஈரோடு பணநாயகம்
பின்னர் செய்தியாளர்களின் பேசிய எச்.ராஜா, "இந்தியாவின் வட கிழக்கு மாநிலங்களில் பாஐக ஆட்சியை கைப்பற்றியுள்ளது. ஈரோடு இடைத்தேர்தல் என்பது ஒரு கேலிக்கூத்து. ஆடு, மாடுகளைப் போல மக்களை பட்டியில் அடைத்து வைத்து பணம் கொடுத்து தேர்தல் நடைபெற்றதாக சமூக வலைதளங்களில் செய்தி வந்தது. இந்த இடைத்தேர்தல் நிறுத்தப்பட்டு இருக்க வேண்டும். ஈரோட்டில் வெற்றி பெற்றது பணநாயகம், ஜனநாயகத்திற்கு அவமானம்" எனத் தெரிவித்தார்.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications