ராஜஸ்தான் டூ தேனி.. வீடியோவில் அந்த மாதிரி..பக்கா பிளான் போட்டு.. அதிர வைத்த பெரியகுளம் எம்எல்ஏ!
தேனி: திடீரென வாட்ஸ் அப்பில் வந்த வீடியோ காலை மார்பிங்' செய்து மோசமான வீடியோ அனுப்பி பெரியகுளம் திமுக எம்எல்ஏ சரவணக்குமாரிடம் பணம் பறித்த ராஜஸ்தானை சேர்ந்த 3 பேர் பிடிப்பட்டது எப்படி என்பதை பார்ப்போம். பக்கா பிளான் போட்டு குற்றவாளிகளை பிடிக்க பெரியகுளம் உதவியது குறித்தும் விளக்கம் அளித்துள்ளார்.
தேனி மாவட்டம், பெரியகுளம் சட்டமன்ற தொகுதி எம்.எல்.ஏவாக திமுகவைச் சேர்ந்த சரவணக்குமார் (வயது 48) இருக்கிறார்.இவரது செல்போனுக்கு கடந்த ஜூலை 1ம் தேதி 'வாட்ஸ்-அப்' வீடியோ கால் வந்திருக்கிறது. தொகுதியில் உள்ள மக்கள் யாரோ அழைக்கிறார்களோ, புதிய எண்ணாக இருக்கிறதே என்று நினைத்து அழைப்பை ஏற்றுள்ளார் எம்எல்ஏ சரவணக்குமார். ஆனால் வீடியோ காலில் எதிர்முனையில் யாரும் பேசாததால் அந்த அழைப்பை அவர் துண்டித்தார்.

சிறிது நேரத்தில், அவருடைய செல்போன் எண்ணுக்கு, எம்.எல்.ஏ. வீடியோ காலில் ஒரு பெண்ணுடன் பேசுவது போன்றும், எதிர்முனையில் அந்த பெண் நிர்வாணமாக இருப்பது போன்றும் மார்பிங் செய்யப்பட்ட ஒரு வீடியோ வந்திருக்கிறது. அதைப் பார்த்து பெரியகுளம் எம்எல்ஏ சரவணக்குமார் அதிர்ச்சி அடைந்தார்.
இதனிடையே சரவணக்குமார் எம்எல்ஏவை தொடர்பு கொண்டு சிலர் பணம் கேட்டு மிரட்டினார்கள். இதையடுத்து கடந்த 3-ந்தேதி ரூ.5 ஆயிரம், 8-ந்தேதி ரூ.5 ஆயிரம் என ரூ.10 ஆயிரம் அனுப்பிய உள்ளார். மீண்டும் அவர்கள் பணம் கேட்டு மிரட்டினர். இதையடுத்து தேனி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பிரவீன் உமேஷ் டோங்கரேவிடம், சரவணக்குமார் நடந்த விவரங்களை முழுமையாக கூறி புகார் அளித்தார்.
இந்த புகார் குறித்து நடவடிக்கை எடுக்க தேனி சைபர் கிரைம் போலீஸ் இன்ஸ்பெக்டர் அரங்கநாயகிக்கு போலீஸ் சூப்பிரண்டு உத்தரவு பிறப்பித்தார். அதன்பேரில், சைபர் கிரைம் போலீசார் கடந்த 10-ந்தேதி வழக்குப்பதிவு குற்றவாளிகள் எங்கிருந்து அழைத்தார்கள் என்பதை வாட்ஸ் அப் அழைப்பை வைத்து விசாரித்தனர். மேலும் கூகுள் பே கணக்கு மூலம் பணம் அனுப்பிய கணக்கையும் கண்டுபிடித்தார்கள்.
அதன்படி அந்த செல்போன் எண் மேகாலயா மாநிலத்தில் வாங்கப்பட்டதும், வங்கிக்கணக்கு மகாராஷ்டிரா மாநிலத்தில் தொடங்கப்பட்டதும் கண்டுபிடிக்கப்பட்டது. இந்த மார்பிங் சதிதிட்டத்தை நடத்துபவர்கள், இந்த வேலையை ராஜஸ்தான் மாநிலத்தில் இருந்து செய்து வருவதும் கண்டுபிடிக்கப்பட்டது.
இதையடுத்து தேனி சைபர்கிரைம் இன்ஸ்பெக்டர் அரங்கநாயகி தலைமையில் அமைக்கப்பட்ட தனிப்படையினர் ராஜஸ்தான் விரைந்தனர். அங்கு உள்ளூர் போலீசார் உதவியுடன் மோசடி கும்பலை சுற்றி வளைத்தனர். ராஜஸ்தான் மாநிலம் அல்வார் பகுதியை அடுத்த கோவிந்த்கர்க் என்ற ஊரில் பதுங்கி இருந்த குற்றவாளிகளை கைது செய்தனர். அங்கிருந்த அர்ஷத்கான் (38) உள்பட 3 பேரை பிடித்தனர். இதில் 2 பேர் சிறுவர்கள். இவர்கள் 3 பேர் உள்பட சிலர் கூட்டுச் சேர்ந்து எம்.எல்.ஏ.வுக்கு வீடியோ கால் செய்து அதை வீடியோவாக பதிவு செய்து, பின்னர் மார்பிங் செய்து பணம் பறித்தது உறுதியானது.
இதையடுத்து அர்ஷத்கான், 2 சிறுவர்களையும் போலீசார் நேற்று கைது செய்து தேனிக்கு அழைத்து வந்தனர். கைதான அர்ஷத்கானுக்கு ஏற்கனவே போலி ஏ.டி.எம். கார்டு தயாரித்து மோசடி செய்தது உள்ளிட்ட சில சைபர் குற்ற வழக்குகளில் தொடர்பு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அதிக பணம் சம்பாதிக்க வேண்டும் என்ற நோக்கத்தில் இவர்கள் செய்து வந்த இந்த மோசடியில் , எத்தனை பேர் ஏமாந்தனர் என்பது குறித்து போலீசார் விசாரித்து வருகிறார்கள்,
இதனிடையே எம்எல்ஏவான சரவணக்குமார் ஏன் குற்றவாளிகளுக்கு பணம் அனுப்பினார் என்றும் அவர் நினைத்தால் அன்றே குற்றவாளிகள் குறித்து போலீசில் தெரிவித்திருக்கலாமே என்று கேள்விகள் எழுந்தது. இதற்கு விளக்கம் அளித்த பெரியகுளம் எம்எல்ஏ சரவணக்குமார், கடந்த ஜூலை 1-ம் தேதி இரவில் எனக்கு 'வாட்ஸ்-அப்' வீடியோ கால் வந்தது.

தொகுதியில் பலரிடமும் எனது எண் இருக்கும் என்பதால் அந்த வீடியோ அழைப்பை ஏற்று பேச முயன்றேன். எதிர்முனையில் யாரும் பேசாததால் அழைப்பை துண்டித்துவிட்டேன். பின்னர் மார்பிங் செய்த வீடியோ வந்ததால், மறுநாள் (2-ந்தேதி) தேனி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் புகார் செய்தேன். குற்றவாளி போலியான முகவரியில் செல்போன் எண்ணை வாங்கி பயன்படுத்தி இருந்தால் அவரை கண்டுபிடிப்பதில் சிரமம் ஏற்படலாம் என்று சைபர் கிரைம் போலீசார் கூறினார்கள். அந்த எண்ணும் அணைத்து வைக்கப்பட்டு இருந்தது.
இதையடுத்து குற்றவாளியை பிடிக்க வேண்டும் என்பதற்காக சைபர் கிரைம் போலீசாரின் வழிகாட்டுதலின் பேரில் 3-ந்தேதியும், 8-ந்தேதியும் பணம் அனுப்பினேன். அந்த பணத்தை எடுத்து பயன்படுத்திய மோசடி நபர்களை, திறம்பட செயல்பட்டு தனிப்படை போலீசார் கைது செய்துவிட்டார்கள் என்று எம்எல்ஏ சரவணக்குமார் தெரிவித்தார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications