நொறுங்கிடுச்சே.. பெண்ணை காவு வாங்கிய "பழுத்த மரம்".. மூக்கு, வாயில் கொட்டிய ரத்தம்.. சுருளி கொடுமை
தேனி: ஆசைஆசையாக அருவியில் குளித்துவிட்டு ஊர் திரும்பி கொண்டிருந்த குடும்பம், திடீரென நடந்த கொடூரத்தை கண்டு கதறினர்.. 15 வயது மகள் தங்கள் கண்ணெதிரே சுருண்டு விழுந்து உயிரிழந்ததை பார்த்து அலறி துடித்தனர்.
சென்னை நீலாங்கரை ஈஸ்வரி நகரை சேர்ந்தவர் நிக்ஸன்.. 47 வயதாகிறது.. இவர் ஒரு கார் டிரைவர் ஆவார்.. மனைவி பெயர் கிருஷ்ணமாலா.. இந்த தம்பதிக்கு பெமினா என்ற 15 வயதில் மகளும், டெலான் ஆண்டர்சன் என்ற மகனும் இருக்கிறார்கள்.

பெமினா சென்னையில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வந்தார்.. 10ம்வகுப்பு தேர்வு முடிந்து இப்போது, தமிழகத்தில் அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை விடப்பட்டுள்ளது..
அந்தவகையில், நிக்ஸன் குடும்பத்தினரும் கோடை விடுமுறையை முன்னிட்டு சுற்றுலா கிளம்பினார்கள்.. தேனி மாவட்டம் கம்பம் அருகே உள்ள சுருளி அருவிக்கு காரில் சென்றிருக்கிறார்கள்.. இவர்களுடன் சொந்தக்காரர்கள் 2 பேரும் சேர்த்து மொத்தம் 6 பேர் சுற்றுலாவுக்கு சென்றிருக்கிறார்கள்..
சுருளி அருவி: அனைவரும் சேர்ந்து அருவியையும், அதை சுற்றியுள்ள இடங்களையும் கண்டுகளித்தனர்.. அருவியிலும் ஆனந்த குளியல் போட்டனர்.. பிறகு, பெமினா உட்பட அனைவரும் குளித்து முடித்துவிட்டு, அருவியில் இருந்து, கார் நின்ற இடத்தை நோக்கி நடந்து சென்று கொண்டிருந்தனர்.. வென்னியாறு பாலம் அருகே வந்தபோது, அங்கு நின்று கொண்டிருந்த மரத்தில் இருந்த பெரிய கிளை ஒன்று, திடீரென முறிந்து பெமினாவின் தலையில் விழுந்தது.. இதில் பெமினாவின் மண்டை உடைந்து, தலையில் இருந்து ரத்தம் கொட்டியது.
அத்துடன் சம்பவ இடத்திலேயே பெமினா சுருண்டு விழுந்து பரிதாபமாக இறந்தார்.. எல்லாமே கண்ணிமைக்கும் நேரத்தில் நடந்து முடிந்துவிட்டது.. தங்கள் கண்ணெதிரே மகளின் மண்டை உடைந்து உயிரிழந்ததை பார்த்து பெற்றோரும், உறவினர்களும் கதறி துடித்தனர்.. இததொடர்பாக ராயப்பன்பட்டி போலீசார் விரைந்து வந்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்..

அகதிகள் முகாம்: இவர்கள் இலங்கை அகதிகளாக, கடந்த 40 வருடங்களுக்கு முன்பு, தமிழ்நாட்டிற்கு வந்திருககிறார்கள்.. கும்மிடிபூண்டியில் உள்ள அகதிகள் முகாமில் குடியிருந்து வந்துள்ளனர்.. இப்போது பிள்ளைகளின் படிப்பு மற்றும் வேலையின் காரணமாக சென்னை நீலாங்கரையில் வசித்து வந்திருக்கிறார்கள்.. சுற்றுலா சென்ற இடத்தில் மரக்கிளை முறிந்து விழுந்து மாணவி பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி வருகிறது.
வென்னியாறு பாலத்தின் அருகே இருந்த அந்த மரமானது, பழம்பெரும் மரம் என்கிறார்கள்.. அதனாலேயே கிளை முறிந்து விழுந்து, பெமினாவின் தலைப்பகுதியில் விழுந்திருக்கிறது. தலையில் இருந்து ரத்தம் கொட்டி, பெமினா உயிருக்கு போராடியிருக்கிறார்.. இதை பார்த்து குடும்பத்தினர் என்ன செய்வதென்றே தெரியாமல் கதறிய நிலையில், அங்கிருந்த சுற்றுலாப் பயணிகளே, வனத்துறையினருக்கு தகவல் தந்துள்ளனர்..
தலையில் படுகாயம் அடைந்த பெமினாவிற்கு மூக்கு மற்றும் வாய் பகுதியில் இருந்தும் ரத்தம் வெளியேற துவங்கிவிட்டது. இதுவே அவரது உயிரிழப்புக்கு காரணமாகவும் ஆகிவிட்டது என்கிறார்கள்.
இதுகுறித்து தகவல் அறிந்த ரேஞ்சர் பிச்சைமணி தலைமையிலான வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். பின்னர் பெமினாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கம்பம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் தொடர்பாக ராயப்பன்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்
காலதாமதம்: உத்தமபாளையம் ஏடிஎஸ்பி மதுக்குமாரி தலைமையில் ராயப்பன்பட்டி போலீசார் விசாரணையை நடத்தி வருகின்றனர்... ஆனாலும், சம்பவ இடத்திற்கு வனத்துறையினர் வருவதற்கு காலதாமதம் ஆகிவிட்டதால்தான், தங்கள் மகள் பெமினா இறந்துவிட்டார் என்று பெற்றோர்கள் குற்றஞ்சாட்டி வருகிறார்கள்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications