தேனி ஸ்வீட் கடையை திறந்த போது.. உள்ளே இருந்து வந்த குறட்டை சத்தம்.. எழுப்பினால் ட்விஸ்ட்
தேனி: தேனி பழைய பஸ் நிலைய வளாகத்தில் உள்ள ஒரு இனிப்பு கடையை திறக்க நேற்று அதிகாலை அங்கு வேலை பார்க்கும் தொழிலாளி வந்தார். அந்த கடைக்கு கதவு கிடையாது. தார்ப்பாய் போட்டு மூடப்பட்ட நிலையில் இருந்தது. அப்போது திரையை விலக்கி பார்த்த போது, கடைக்குள் திருடச் சென்ற இளைஞர், அசதியில் அங்கேயே தூங்கிவிட்டார். அவரை போலீசார் கைது செய்தனர்.
தேனி அல்லிநகரம் வடக்கு தெருவை சேர்ந்த 34 வயதாகும் நாகேந்திரன் என்பவர் தேனியை அடுத்த அரண்மனைப்புதூரில் சத்திரப்பட்டி செல்லும் சாலையில் இறைச்சி விற்பனை கடை வைத்திருக்கிறார். கடந்த 24-ந்தேதி இவர், தனது கடையை பூட்டி விட்டு வீட்டுக்கு சென்றிருக்கிறார். மறுநாள் காலையில் கடையை திறக்க வந்தபோது, கடையின் பூட்டு உடைக்கப்பட்டிருக்கிறது. அதிர்ச்சி அடைந்த அவர் கடைக்கு உள்ளே சென்று பார்த்தபோது, அங்கு வைத்திருந்த ரூ.1 லட்சத்து 38 ஆயிரம் திருடு போனது தெரியவந்தது.

இதுகுறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்துக்கு கைரேகை நிபுணர்களுடன் அங்கு சென்று பதிவான கைரேகைகளை சேகரித்தார்கள். திருடிய நபரை போலீசார் தீவிரமாக தேடிவந்தனர். இந்நிலையில், தேனி பழைய பேருந்து நிலைய வளாகத்தில் உள்ள ஒரு இனிப்பு கடையை திறக்க நேற்று அதிகாலை அங்கு வேலை பார்க்கும் தொழிலாளி வந்திருக்கிறார். அந்த கடைக்கு கதவு கிடையாது. தார்ப்பாய் போட்டு மூடப்பட்ட நிலையில் இருந்திருக்கிறது.
தார்ப்பாயை அவர் விலக்கி பார்த்தபோது, கடைக்குள் சுமார் 18 வயது மதிக்கத்தக்க வாலிபர் தூங்கி கொண்டு இருந்தார். சந்தேகம் அடைந்த தொழிலாளி, அக்கம் பக்கத்தில் இருந்த கடைக்காரர்கள் உதவியுடன் போலீசாருக்கு தகவல் அளித்தார்
அதன்பேரில் தேனி போலீசார் அங்கு வந்து அந்த வாலிபரை பிடித்து விசாரித்தனர்.
முதலில் அவர் குளிர் அதிகமாக இருந்ததால் கடைக்குள் வந்து தூங்கினேன் என்று கூறியதாக தெரிகிறது. பின்னர் அவரிடம் தொடர்ந்து விசாரித்த போது அவர் கடைக்குள் திருட வந்ததாகவும், திருட வந்த போது அசதியில் தூங்கி விட்டதாக சர்வ சாதாரணமாக கூறியிருக்கிறார்.
இந்த நிலையில் இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்ததும் பழனிசெட்டிபட்டி போலீசாரும் அங்கு வந்தனர். அவர்கள் தங்கள் பகுதியில் இறைச்சிக் கடையில் திருடிய சம்பவத்தில் அந்த வாலிபருக்கு தொடர்பு இருக்குமா? என்ற கோணத்தில் விசாரித்து பார்த்தனர். அதன் பின்னர் பழனிசெட்டிப்பட்டி போலீஸ் நிலையத்துக்கு அழைத்து சென்று கைரேகைகளை பதிவு செய்து, இறைச்சி கடையில் பதிவான கைரேகையுடன் ஒப்பிட்டு பார்த்தனர். அவை ஒத்துப்போயிருக்கிறது. இதையடுத்து அந்த வாலிபரிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். திருட வந்த இடத்தில் திருடன் தூங்கியதால் மாட்டிக் கொண்ட சம்பவம் தேனியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications