பெண் சாவில் திடீர் திருப்பம்.. கள்ளக்காதலனுடன் ரஞ்சிதா ஓட்டம்.. தீர்த்து கட்டிய தாயும் கணவரும்!
தேனி: உத்தமபாளையம் அருகே பெண் சாவில் திடீர் திருப்பம் ஏற்பட்டது. கள்ளத்தொடர்பை கைவிடாததால் தாயும், கணவரும் தீர்த்து கட்டியது அம்பலமானது.
தேனி மாவட்டம் உத்தமபாளையம் அருகே உள்ள ராயப்பன்பட்டி காளியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் கல்யாணகுமார். கட்டட தொழிலாளி. அவருடைய மனைவி ரஞ்சிதா (29). இந்த தம்பதிக்கு 8 வயதில் மகள் உள்ளார்.
ரஞ்சிதா, கல்யாணகுமாரின் உடன் பிறந்த சகோதரி கவிதாவின் மகள் ஆவார். இந்தநிலையில் நேற்று முன்தினம் அங்குள்ள மயானத்தில் ரஞ்சிதாவின் உடலை எரிப்பதாக, ராயப்பன்பட்டி போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் போலீசார் அங்கு விரைந்தனர்.

பாதி எரிந்த நிலையில் சடலம்
பின்னர் பாதி எரிந்த நிலையில் இருந்த ரஞ்சிதா உடலை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக தேனி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் போலீசார் நடத்திய விசாரணையில், ரஞ்சிதா தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டதாக உறவினர்கள் தெரிவித்தனர்.

4 பேர் மீது போலீஸ் வழக்கு
இதனையடுத்து போலீசாருக்கு தெரியாமல் உடலை எரித்ததாக கல்யாணகுமார் உள்பட 4 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். அதே நேரத்தில் ரஞ்சிதாவின் சாவில் மர்மம் இருப்பதாக போலீசார் கருதி விசாரணையை முடுக்கி விட்டனர். இந்தநிலையில் பிரேதப் பரிசோதனை அறிக்கையில், கழுத்தை நெரித்து ரஞ்சிதா கொலை செய்யப்பட்டது உறுதியானது.

கொலையாளிகளை பிடிக்க
இதையடுத்து கொலையாளிகளை பிடிக்க உத்தமபாளையம் போலீஸ் துணை சூப்பிரண்டு உமாதேவி மேற்பார்வையில், ராயப்பன்பட்டி சப்-இன்ஸ்பெக்டர் மாயன் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது. ரஞ்சிதாவின் கணவர் கல்யாணகுமார் (32), தாயார் கவிதா (45) ஆகியோரை பிடித்து தனிப்படை போலீசார் கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தினர்.

2 பேர் சேர்ந்து கொலை
அப்போது அவர்கள் 2 பேரும் சேர்ந்து, ரஞ்சிதாவை தீர்த்து கட்டியது தெரியவந்தது. இந்த கொலைக்கு அவர்களது உறவினர் ஆனந்தகுமார் (32) என்பவரும் உடந்தையாக இருந்தார். இதனையடுத்து கல்யாணகுமார், கவிதா, ஆனந்தகுமார் ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.

கணவரிடம் விசாரணை
கொலைக்கான காரணம் குறித்து கைதான கல்யாணகுமார் போலீஸாரிடம் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார். அதில் கூறியிருப்பதாவது: எனக்கும், ரஞ்சிதாவுக்கும் திருமணமாகி 9 ஆண்டுகள் ஆகிறது. ரஞ்சிதாவுக்கும், ராயப்பன்பட்டி அருகே உள்ள ஆனைமலையன்பட்டியை சேர்ந்த திருமணமான ஒருவருக்கும் கள்ளத்தொடர்பு ஏற்பட்டது.

குடும்பம்
அவர், சென்னையில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். அவருடனான கள்ளத்தொடர்பை கைவிடுமாறு பலமுறை ரஞ்சிதாவை கண்டித்தேன். இருப்பினும், ரஞ்சிதா கள்ளத்தொடர்பை கைவிடவில்லை.
எப்படியாவது ரஞ்சிதா திருந்தி விடுவார் என்று கருதி, அவருடன் தொடர்ந்து குடும்பம் நடத்தி வந்தேன்.

கொலை
இந்தநிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு திடீரென ரஞ்சிதா காணாமல் போய் விட்டார். இதுதொடர்பாக ராயப்பன்பட்டி போலீஸ் நிலையத்தில் புகார் செய்தேன். போலீசார் விசாரணை நடத்தி, சென்னையில் இருந்து ரஞ்சிதாவை மீட்டு என்னிடத்தில் ஒப்படைத்தனர். இதனால் நான் அவமானம் அடைந்தேன். இதற்கு மேல் ரஞ்சிதாவை உயிரோடு வைக்கக் கூடாது என்று தீர்மானித்து, அவரை கொலை செய்ய முடிவு செய்தேன்.

நானும் கவிதாவின் தாயும்
இதுதொடர்பாக என்னுடைய அக்காளும், ரஞ்சிதாவின் தாயுமான கவிதாவிடம் கூறினேன். அவரும் ரஞ்சிதாவை கொலை செய்து விடலாம் என்றார். இதனையடுத்து கவிதா, என்னுடைய வீட்டுக்கு வந்தார். ரஞ்சிதாவும் வீட்டில் இருந்தார்.
நாங்கள் திட்டமிட்டப்படி திடீரென நான், ரஞ்சிதாவின் கழுத்தை சேலையால் இறுக்கினேன். அப்போது, அவருடைய கால்களை கவிதா இறுக்கமாக பிடித்து கொண்டார். சிறிது நேரத்தில் ரஞ்சிதா துடிதுடித்து இறந்தார். பின்னர் ரஞ்சிதா தற்கொலை செய்து கொண்டதாக கூறி, அவரது உடலை மயானத்தில் எரிக்க முடிவு செய்தோம்.

கல்யாணகுமார்
இதற்கு என்னுடைய உறவினர் ஆனந்தகுமாரின் உதவியை நாடினோம். அவரது ஒத்துழைப்புடன் மயானத்துக்கு ரஞ்சிதாவின் உடலை கொண்டு சென்று எரித்தோம். ஆனால் பாதி உடல் எரிந்த நிலையில் போலீசார் வந்து, ரஞ்சிதாவின் உடலை கைப்பற்றினர். பிரேத பரிசோதனை அறிக்கையின் முடிவில் ரஞ்சிதாவை கொலை செய்தது அம்பலமானது. அதன்பிறகு விசாரணை நடத்தி, எங்கள் 3 பேரையும் போலீசார் கைது செய்து விட்டனர். இவ்வாறு கல்யாணகுமார் வாக்குமூலம் அளித்துள்ளார்.
-
சென்னையில் ஷாக்! போலீசாரின் பிடியில் சிக்கிய மனைவியின், கழுத்தை அறுத்து கணவனே கொலை செய்த கொடூரம் -
ரொம்ப அசால்ட்டா இருந்துருக்காங்க! விசாரணை அதிகாரியின் விசித்திர நடைமுறை! போலீஸை விளாசிய நீதிமன்றம் -
சென்னையில் கொடூர சம்பவம்.. கஞ்சா விற்பனையை தட்டிக்கேட்ட இளைஞர் அம்மிக்கல்லால் அடித்து கொலை! -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்!












Click it and Unblock the Notifications