ஓபிஎஸ்க்கு நெருக்கமானவர் வீட்டில் நடந்த வருமான வரி சோதனை.. போடியில் பரபரப்பு
தேனி: ஓபிஎஸ்க்கு நெருக்கமானவர் என்று கருதப்படும் தமிழ் மாநில காங்கிரஸின் போடி நகர தலைவர் அங்கு வேலுவின் வீட்டில் 2 மணி நேரத்திற்கு மேலாக வருமான வரித்துறை சோதனை நடத்தியது. இந்த சோதனையை தூண்டிவிட்டது திமுகவினர் தான் என அங்குவேலு குற்றம்சாட்டி உள்ளார்.
தான் தமிழக துணை முதல்வர் பன்னீர் செல்வத்தின் கூட்டணி கட்சியினர் என்பதால் தன் மீது வேண்டுமென்றே அவப்பெயரை ஏற்படுத்தும் நோக்கில் திமுகவினர் தனது வீட்டில் வருமான வரித்துறையினரை ஏவிவிட்டு சோதனை செய்ய வைத்துள்ளனர் என அங்கு வேலு தெரிவித்துள்ளார்.
தேனி மாவட்டத்தில் தற்போது போடிநாயக்கனூர் சட்டமன்றத் தொகுதி தமிழகத்தில் மிகவும் உற்றுநோக்கி பார்க்கக்கூடிய நட்சத்திர தொகுதியாக அமைந்துள்ளது

தமாகா பிரமுகர்
இருவரும் அனல் பறக்கும் வகையில் பிரச்சாரம் செய்து வருகின்றனர் .. அரசியல் களத்தில் சூட்டை கிளப்பும் வகையில் இன்று திடீரென அதிமுகவுடன் கூட்டணி கட்சியாக திகழக்கூடிய தமிழ் மாநில காங்கிரசின் உடைய போடி நகர தலைவர் அங்கு வேலு என்பவருடைய வீட்டில் இன்று வருமான வரித்துறையினர் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.

திமுக சதி
இன்று மதியம் ஒன்றரை மணி அளவில் தொடங்கிய இந்த சோதனை சுமார் 2 மணி நேரம் நடைபெற்றது இரண்டு மணி நேர சோதனைக்கு பின்பாக உரிய ஆவணங்கள் எதுவும் கிடைக்காததால் வருமானவரித்துறையினர் திரும்பிச் சென்றனர் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த தமிழ் மாநில காங்கிரஸ் உடைய போடி நகர தலைவர் அங்கு வேல் இது வேண்டுமென்றே திமுகவினர் திட்டமிட்டு செய்த சதி என்றார்.

வேண்டுமென்றே ஏவல்
தமிழக துணை முதல்வர் பன்னீர்செல்வம் அதனுடைய கூட்டணி கட்சியாக திகழ்ந்து அவருக்கு தேர்தல் பணியில் உதவி புரிந்து வருகிறேன் இந்த சூழ்நிலையில் திமுகவினர் வேண்டுமென்றே எனது வீட்டில் வருமான வரித்துறையை ஏவிவிட்டு என் வீட்டை சோதனை செய்ய வைத்துள்ளனர். ஆனால் வருமான வரித் துறையினர் கிட்டத்தட்ட இரண்டரை மணி நேரம் சோதனை நடத்தினர் இதில் அவர்கள் எந்த ஒரு உரிய ஆவணமும் கிடைக்காததால் தற்போது திரும்பிச் சென்றுள்ளனர்.

தேர்தல் பணி
இதனை தமிழ் மாநில காங்கிரஸ் சார்பாக வன்மையாக கண்டிக்கிறேன். கூட்டணிக் கட்சியான அதிமுகவிற்கு உதவி புரிய வேண்டுமென்று எங்களது தலைமை தெரிவித்ததை அடுத்து நாங்கள் அதிமுக சார்பாக போட்டியிடும் துணை முதல்வர் பன்னீர் செல்வத்திற்கு தேர்தல் பணிகள் செய்து வருகிறோம் இதனை பொறுக்க முடியாமல் தற்போது திமுகவினர் தொடர்ந்து எங்களோடு விரோதப்போக்கை கடைப்பிடித்து வருகின்றனர் என்று குற்றம்சாட்டினார்.












Click it and Unblock the Notifications