தேனி மேகமலையை என்ன விலை கொடுத்தாவது தமிழக அரசு மீட்க வேண்டும்.. பின்னணியில் இப்படி ஒரு காரணம்
தேனி: மாஞ்சோலையை மீட்ட தமிழக அரசு, என்ன விலை கொடுத்தாவது மேகமலையை அரசு மீட்க வேண்டும் என்றும் வைகை ஆறு அழிந்ததற்கு மேகமலை எஸ்டேட்டுகள் தான் காரணம் என சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் குற்றம்சாட்டி உள்ளனர்.
சிங்கம்பட்டி காட்டில் சுமார் 8,400 ஏக்கர் நிலத்தை 1929ம் ஆண்டு பாம்பே பர்மா டிரேடிங் கார்ப்பரேஷன் (BBTC) நிறுவனத்திற்கு 99 வருடக் குத்தகைக்கு விட்டார் அன்றைய சிங்கம்பட்டி ராஜா. கொலை வழக்கில் சிக்கிய மகனை காப்பாற்ற 23,000 ஹெக்டேர் பரப்பு கொண்ட ஜமீன் காட்டில், 8,400 ஏக்கர் காட்டு நிலத்தை 99 வருடக் குத்தகைக்கு விட்டார்.

நிலத்தை குத்தகைக்கு எடுத்த பாம்பே பர்மா டிரேடிங் கார்ப்பரேஷன் நிறுவனம் காட்டை அழித்து, தேயிலைத் தோட்டங்களை உருவாக்கியது. சுமார் 95 ஆண்டுகள் சகாப்தம் தற்போது முடிவுக்கு வந்துள்ளது. இனி முழுமையாக மாஞ்சோலை எஸ்டேட் பசுமையான வனப்பகுதியாக மாறப்போகிறது. ஒரு பக்கம் தேயிலை தொழிலாளர்கள் பல வருடமாக வாழ்ந்த காட்டை விட்டு வெளியேறுவது வருத்தமான விஷயம் என்றாலும் அந்த பகுதியில் உள்ள வனவிலங்குகளும், காடுகளும் சுற்றுச்சூழல் ரீதியாக பெரிய மாற்றத்தை சந்திக்க போகின்றன.
சிங்கம்பட்டி ஜமீனுக்கு சொந்தமான மாஞ்சோலை காடுகளை எப்படி அரசு மீட்டதோ அதுபோல் மேகலையை மீட்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. மேகமலை எஸ்டேட் என்பது வருஷநாடு ஜமீனுக்கு சொந்தமானது. அதாவது கண்டமனூர் ஜமீனுக்கு ஒரு காலத்தில் சொந்தமானதாக இருந்தது. தேனி அரசு மருத்துவக்கல்லூரி அமைந்துள்ள கண்டமனூரில் உள்ள ஜாமீனுக்கு சொந்தமான இந்த மேகமலை மட்டும் எஸ்டேட்டுகளாக மாறாமல் இருந்திருந்தால் வைகை நதி பெரிய அழிவினை சந்தித்து இருக்காது என்கிறார்கள் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள்.
64 கிராமங்களை தன்கட்டுப்பாட்டில் வைத்திருந்த கண்டமனூர் ஜமீன் ஆடம்பரச் செலவு, வம்பு வழக்கில் அனைத்து சொத்துக்களையும் இழந்தார். ஒரு கட்டத்தில் ஆங்கிலேயர்களுக்கு கப்பம் கட்ட முடியாத நிலைக்கு கண்டமனூர் ஜமீன் தள்ளப்பட்ட நிலையில், ஆங்கிலேயர்கள் அந்த ஜாமீனின் மேகமலை எஸ்டேட்டை ஏலம் விட்டனர். இதனை ரஸ்டன்சிபாய் பட்டேல் அவரது சகோதரர்கள் 3 பேரும் சேர்ந்து ஏலம் பெற்றனர். வெறும் ஐந்தரை லட்ச ரூபாய்க்கு 1922ல் மேகமலை எஸ்டேட்டை வாங்கிவிட்டனர்.
அதன்பிறகு காடுகள் அனைத்தும் மேகலை பகுதியில் அழிக்கப்பட்டு தேயிலை எஸ்டேட்டுகள் உருவாக்கப்பட்டன. இன்றைக்கு மேகலை எஸ்டேட் 62 ஆயிரம் ஹெக்டேர் பரப்பளவில் இருக்கிறது. இந்த மேகமலை எஸ்டேட்டில் பெரும்பாலான நிலங்களை உட்பிரையர் (The Woodbriar) நிறுவனம் வைத்திருக்கிறது. இங்கு டாடா குழுமம் உள்பட பலவேறு தனியார் நிறுவனங்களுக்கு எஸ்டேட் உள்ளது. மேகமலையை பொறுத்தரை குறிப்பிட்ட அளவு நிலம் விற்கப்பட்டுள்ளது. சில குத்தகையில் உள்ளது. இப்படி சிக்கலான நிலை இருப்பதால் மாஞ்சோலையை போல் மேகமலையை முழுமையாக மீட்க முடியாத நிலை இருக்கிறது.
மேகமலையில் உள்ள காடுகள் அழிக்கப்படட் எஸ்டேட்டுகள் உருவாக்கப்பட்டதன் காரணமாகவே வைகை வறண்டு போனதாக குற்றச்சாட்டுகள் உள்ளது. மேகமலை மூலமாகவே வைகை ஆற்றுக்கு தண்ணீர் வருகிறது. ஆனால் வைகை ஆற்றுக்கு வரும் பல சிற்றோடைகள் எஸ்டேட்டுகளில் அடைபட்டு கடப்பதால் தண்ணீர் இல்லாமல் வைகை வறண்டு போகிறது என்கிறார்கள். கடந்த 200 ஆண்டுகளுக்கு முன்பு இருந்தே மேகமலை அழிவை சந்தித்து வந்துள்ளது.
சரியாக சொல்வது என்றால். 18 ஆம் நூற்றாண்டின் இறுதியில் ஆங்கிலேயர்கள் வைகையின் முக்கிய நீர்ப்பிடிப்பாக செயல்படும் மேகமலைப் பகுதியை காடுகளை அழிக்கத் தொடங்கி உள்ளார்கள். அவர்களால் தேயிலை, ஏலக்காய், மிளகு, இலவங்கப்பட்டை போன்ற பணப்பயிர்களின் வணிகத் தோட்டங்களுக்கான நிலத்தை விடுவிக்க கன்னிக்காடுகளின் பெரும் பகுதிகள் அழிக்கப்பட்டன. இதனால் வைகை ஆற்றில் தண்ணீர் வரத்து படிப்படியாக குறைந்தது. இதனால் ஆற்றை நம்பி வாழ்ந்து வந்த மக்கள் எண்ணற்ற இன்னல்களுக்கு ஆளாகினர். இதனால் 1876-77 பெரும் பஞ்சத்தின் போது சுமார் 200,000 மக்கள் இப்பகுதியில் இறந்தனர். '
பஞ்சத்தைத் தொடர்ந்து, பெரியாற்றில் இருந்து தண்ணீரைத் திருப்பி வைகைக்கு ஒரு சுரங்கப்பாதை மூலம் வழங்க பிரிட்டிஷ் அரசு முடிவு செய்தது. இதன்படி மேஜர் ஜான் பென்னிகுயிக் மற்றும் அவரது குழுவினரால் முல்லையாறு மற்றும் பெரியாறு ஆறுகள் சங்கமிக்கும் இடத்தில் ஒரு அணையைக் கட்டி, 1895 இல் திறக்கப்பட்டது. மனிதனால் இதுவரை நிகழ்த்தப்பட்ட பொறியியலின் மிகவும் அசாதாரணமான சாதனைகளில் ஒன்றாக முல்லை பெரியாறு அணை பார்க்கப்படுகிறது. முல்லை பெரியாறு அணை என்பது கிழக்கில் இருந்து மேற்கே செல்லும் ஆற்றை மீண்டும் கிழக்கு நோக்கி திருப்பும் முயற்சியாகும்.
இதன் காரணமாகவே இன்றைக்கு தேனி மாவட்டத்தின் தமிழ்நாட்டின் செழிப்பான மாவட்டமாக இருக்கிறது.முப்போகம் விளையும் பூமியாக இருக்கிறது. அதேநேரம் வைகை அணைக்கு நீர் வரத்து 80 சதவீதம் அளவுக்கு முல்லை பெரியாறு மூலமே கிடைக்கிறது. மற்றப்படி எப்போதாவது பெய்யும் கனமழை மற்றும் காட்டாற்று வெள்ளம் காரணமாக மூல வைகையில் தண்ணீர் வருகிறது. அந்த தண்ணீரும் ஒரு சில நாட்களில் நின்று விடுகிறது. வருசநாடு முதல் கண்டமனூர் வரை உள்ள மூல வைகை ஆற்றில அதிகப்படியாக மணல் அள்ளப்பட்டு விட்டதால் , தண்ணீர் வந்தாலும் வைகை சில நாளிலேயே மறைந்துவிடுகிறது. நிலத்தடி நீர் மட்டமும் பெரிய அளவில் சரிந்துவிட்டது.
வைகை ஆறு என்பது தேனி வருசநாடு முதல் ராமநாதபுரம் மாவட்டம் வரை சுமார 230 கிலோ மீட்டர் தூரம் பாய்ந்து ஐந்து மாவட்ட மக்களின் குடிநீர் மற்றும் 2லட்சம் ஹெக்டர் விவசாய நிலங்களின் நீர் ஆதாரமாக உள்ளது. எனவே மேகமலையில் தனியார்கள் எஸ்டேட்டுகள் வாங்க தடை விதித்து மொத்த எஸ்டேட்களையும் தமிழக வனத்துறை விலைக்கு வாங்கியாவது தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டுவர வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது.
கேரள வனத்துறை இதே மேகமலை வனப்பகுதியில் சுமார் 160 கோடி ரூபாய் வரை கொடுத்து எஸ்டேட்டை விலைக்கு வாங்கியுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது. அதுபோல் மேகமலையை மீட்டால் வைகை தனது இயல்பு நிலைக்கு திரும்பும் என்றும், தேனி, திண்டுக்கல். மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்டங்களுக்கு மிகப்பெரிய பலனாகவும் இந்த நடவடிக்கை இருக்கும் என்கிறார்கள் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள்.
-
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோவை வெளியிட்ட திரிஷா.. ஒரு வழியாக எல்லோரும் கேட்டது நடந்துடுச்சு.. குவியும் பாராட்டு -
ஓசூரில் சத்தமின்றி புரட்சி.. ரெடியாகும் தமிழ்நாட்டின் 6-வது பிரம்மாண்ட 'டைடல் பார்க்'.. தரமான வேகம் -
பாதாளத்தில் பாய்ந்த அமெரிக்கா! டிரம்ப் கொஞ்சம் கூட எதிர்பார்க்காத சம்பவம்.. மொத்தமா போச்சு! -
வாழ்க்கை துணை கிடைச்சிடுச்சு.. இவர்தான் ஜென்டில்மேன்! சர்ச்சைக்கு மத்தியில் திரிஷாவின் லேட்டஸ்ட் பதிவு -
தமிழ் புத்தாண்டு பலன்: குருவின் அருளால் மகர ராசிக்கு அடிக்கும் ஜாக்பாட்.. பிரகாசமாகப் போறீங்க -
இடி, மின்னலுடன் மழை கொட்டப்போகுது.. அடிக்கும் வெயிலுக்கு ஜில் அப்டேட் கொடுத்த வானிலை மையம்! -
ஸ்டாலின் களமிறக்கும் "மிசைல்" விஐபி! அதிமுக எதிர்பார்க்கல! விஸ்வநாதனுக்கு செக்? திமுக சர்ப்ரைஸ் மூவ் -
உங்கள் வீட்டு பீரோவில் 62 சவரன் தங்கம் இருக்கா? நகைக்கு இந்த ஒரு கணக்கு இல்லனா ஐடி நோட்டீஸ் வரலாம் -
பெங்களூர் மாணவியிடம் கிட்ட நெருங்கிய ஆசிரியர்! அந்த பயங்கர காட்சி.. உடனே செருப்பை கழட்டி! என்னாச்சு -
எடப்பாடி பழனிசாமி வைத்த பொறி.. சிக்கிய அண்ணாமலை.. சல்லி சல்லியாக உடைந்த பர்னிச்சர் -
செங்கோட்டையனுக்கு பதில் கோபியில் பிரபு! 127 வேட்பாளர்களை அறிவித்தார் எடப்பாடி பழனிசாமி












Click it and Unblock the Notifications