திமுக நிகழ்ச்சியில் ஒலித்த எம்.ஜி.ஆர். பாடல்! உதயநிதி ஸ்டாலின் ரியாக்ஷன்? தேனி டூர் ருசிகரம்!
தேனி: தேனி மாவட்டத்தில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்துகொண்ட திமுக நிகழ்ச்சியில் எம்.ஜி.ஆர். திரைப்பட பாடல் ஒலித்தது கட்சியினர் மத்தியில் சலசலப்பை ஏற்படுத்தியது.
திமுக இளைஞரணி மாநாடு: திமுக இளைஞரணி 2வது மாநாடு வரும் டிசம்பர் 17ஆம் தேதி சேலத்தில் நடைபெறுகிறது. இந்த மாநாட்டை ஒட்டி தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்டங்களுக்கும் சுற்றுப்பயணம் செய்து இளைஞரணி நிர்வாகிகளை சந்தித்து வரும் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், நேற்று தேனி மாவட்ட திமுக இளைஞரணி நிர்வாகிகளை சந்தித்தார்.

மாபெரும் சபைகளில் நீ நடந்தால்: தேனி வடக்கு -தெற்கு என இரண்டு மாவட்ட திமுக இளைஞரணி நிர்வாகிகள் பங்கேற்ற கூட்டம் வீரபாண்டி அருகே நடைபெற்றது. அதில் கலந்துகொள்வதற்காக சென்ற அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மேடையேறியதும், ''மாபெரும் சபைகளில் நீ நடந்தால் உனக்கு மாலைகள் விழ வேண்டும்.. மாற்றுக் குறையாத மன்னவன் இவனென்று போற்றிப் புகழ வேண்டும்'' என்ற எம்.ஜி.ஆர். பட பாடல் ஒலிபரப்பப்பட்டது.
உதயநிதி ஸ்டாலின் ரியாக்ஷன்: பொதுவாக உதயநிதி ஸ்டாலின் மேடையேறும் தருணங்களில் ''கருப்பு சிவப்பு படையின் வீரன்'' என்ற இறையன்பன் குத்தூஸின் பாடல் தான் ஒலிப்பரப்பப்படும். ஆனால் தேனியில் எம்.ஜி.ஆர். பாடல் ஒலிக்கவிடப்பட்டது கட்சியினர் மத்தியில் லேசாக சலசலப்பை ஏற்படுத்தியது. ஆனால் அமைச்சர் உதயநிதி ஸ்டாலினோ சிறிய புன்னகையுடன் பெரிதாக வேறு எந்த ரியாக்ஷனும் கொடுக்கவில்லை. இந்தப் பாடல் உதயநிதி ஸ்டாலினை புகழ்ந்தா அல்லது அவருக்கு அறிவுரை சொல்லவா என்ற விவாதமும் தேனி மாவட்ட திமுக நிர்வாகிகள் மத்தியில் நிலவியது.

ஆப்ரேட்டர் செய்த வேலை: தேனி மாவட்டத்தை பொறுத்தவரை இன்னுமே பல இடங்களில் எம்.ஜி.ஆர். ஏற்படுத்திய தாக்கம் குறையவில்லை என்றே சொல்லலாம். அந்த வகையில் திமுக இளைஞரணி நிர்வாகிகள் கூட்டத்திற்கு ஒலி -ஒளி அமைத்த ஆப்ரேட்டர் சாய்ஸில் தான் எம்.ஜி.ஆர். பாடல் ஒலிக்கவிடப்பட்டிருக்கிறது. இந்த பாடலை தான் ஒலிக்கவிட வேண்டும் என திமுக நிர்வாகிகள் யாரும் முன்கூட்டியே சொல்லாததால் அவராக அந்தப் பாடலை ஒலிக்க விட்டிருக்கிறார்.
-
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
"திமுககாரன்னா திமிர் இருக்கணும்".. காரணம் சொல்லி ‘ஜென் ஸி' மீட்டப்பில் பேசிய டிஆர்பி ராஜா -
இதாம்லே ட்விஸ்டு.. துண்டை போட்ட உடன்பிறப்புகள்! நழுவிய தவெக நிர்வாகிகள்! விஜய் காதுக்கு போன மேட்டர்! -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா -
பிளான் A எடப்பாடி.. பிளான் B திருமா.. திமுக பிளான்.. புட்டு புட்டு வைத்த காதர் மொகிதீன் -
எதிர்காலம் நம்பிக்கையளிக்கிறது.. எனர்ஜி கூடுகிறது! ஜென் ஸி கூட்டம் குறித்து மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சி -
பொதுச்செயலாளர் பதவியை விட்டு விலகுகிறார் திமுக துரைமுருகன்? ஸ்டாலினின் அடுத்த சாய்ஸ் அவர்? -
விஜய்க்கு விஷப் பரிட்சை..திமுகவுக்கு அக்னி பரிட்சை! இடைத் தேர்தலுக்கு ரெடியான கழகங்கள்! அதிமுக அமைதி -
Gen Z DMK Meetup.. விஜய் ஏற்படுத்திய ‘இன்ஸ்டா’ புயல்! இளைய தலைமுறையை நெருங்கும் திமுக! கைகொடுக்குமா? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்?












Click it and Unblock the Notifications