அரை நிர்வாண கோலத்தில் நால்வர்.. நடுராத்திரியில்.. வீடு வீடாக.. தீவிர தேடுதல் வேட்டையில் தேனி போலீஸ்
Recommended Video
தேனி: 4 பேருமே அரை நிர்வாண கோலம்.. என்ன காரணம் என்றே தெரியவில்லை.. நடுராத்திரி வீடுகளில் கொள்ளை அடிக்கும்போது, இந்த அரை நிர்வாண கோலத்துடனேயே தெருவுக்குள் திரிகிறார்கள்... இவர்களை பிடிக்க தேனி போலீசார் அதி தீவிரம் காட்டி வருகிறார்கள்!
தமிகத்தில் அதிக அளவு கொள்ளை சம்பவங்கள் நடந்து வருவதால், பொதுமக்கள் கலக்கத்தில் உள்ளனர். தேனி மாவட்டம் உத்தமபாளையம் அருகே அம்மாபட்டி என்ற கிராமம் உள்ளது.

3 நாளைக்கு முன்பு, அங்கு என்எஸ்எஸ் ரோட்டில், ஈபி ஆபீசில் வேலை பார்க்கும் ராஜா என்பவர் வீட்டில் கொள்ளை முயற்சி நடந்துள்ளது. ராஜாவின் வீட்டு சுவரில் ஏறி குதித்து, பூட்டியிருந்த வீட்டை உடைக்க முயன்றுள்ளனர் கொள்ளையர்கள். இதை விஜயா என்பவர் பார்த்து கூச்சலிடவும், அங்கிருந்து கொள்ளையர்கள் தப்பிவிட்டனர்.
இதன்பிறகு, அடுத்த தெருவுக்கு இந்த கொள்ளையர்கள் சென்ற, ராமய்யா என்பவரின் வீட்டின் பூட்டை உடைக்க முயன்றனர். ஆனால் அக்கம்பக்கத்தினர் சத்தம் கேட்டதும் அங்கிருந்தும் இந்த கும்பல் எஸ்கேப் ஆகி உள்ளது. இவர்கள் யார்என்று தெரியவில்லை.
ராஜா வீட்டில் சிசிடிவி பொருத்தப்பட்டுள்ளது. அதில் ஆராய்ந்த போது, இந்த கொள்ளையர்கள் 4 பேர் என தெரியவந்துள்ளது. நான்கு பேருமே அரை நிர்வாணக் கோலத்தில் தெருவில் திரிகிறார்கள். அப்படியே வீட்டை நோட்டம் விட்டுக் கொண்டு, எந்த வீடு பூட்டி உள்ளதோ அந்த வீட்டின் பூட்டை உடைக்க முயல்கிறார்கள்.
இந்த சம்பவம் நடப்பதற்கு, 2 நாளைக்கு முன்புதான், தேனி பழனிச்செட்டிபட்டியிலும், கோபாலகிருஷ்ணன் என்பவர் வீட்டின் கதவு உடைக்கப்பட்டு, நகை, பணம் கொள்ளை போனது. அதுவும் இவர்கள் வேலைதானா என்று தெரியவில்லை. இந்த அரை நிர்வாண கொள்ளையர்கள் வடமாநிலத்தை சேர்ந்தவர்களா என்றும் தெரியவில்லை. இவர்களை தேனி போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.
-
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள், பார்களை தனியாரிடம் ஒப்படைக்க திட்டம்? விஜய் எடுக்க போகும் முடிவு? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்! -
தவெக அரசின் முதல் பிரம்மாண்ட முதலீடு: எல் அண்ட் டி உடன் ₹18,600 கோடி ஒப்பந்தம்.. 8,200 வேலைவாய்ப்பு!












Click it and Unblock the Notifications