நான் சொன்னதை கேட்கலை! அனுபவிக்கிறார்.. ஓபிஎஸ் பண்ணை வீட்டு கூட்டம்.. திடீரென நுழைந்த ஓ ராஜா
தேனி: அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ் கட்சிக்காக நிறைய விட்டுக் கொடுத்தார். தற்போது அனுபவிக்கிறார் என அவரது சகோதரரும் அண்மையில் அதிமுகவிலிருந்து நீக்கப்பட்டவருமான ஓ ராஜா வேதனை தெரிவித்தார்.
அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ்ஸின் தம்பி ஓ ராஜா தேனி மாவட்ட ஆவின் பால் கூட்டுறவு சங்கத் தலைவராக இருந்தார். இவர் அண்மையில் திருச்செந்தூரில் சசிகலாவை நேரில் சந்தித்து பேசினார். கட்சியை விட்டு நீக்கியவரை எப்படி சந்திக்கலாம்.
இது கட்சிக்கு களங்கம் ஏற்படுத்தும் செயல் என கூறி ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ் இணை ஒருங்கிணைப்பாளர் இபிஎஸ் ஆகியோர் கையெழுத்து ஓ ராஜாவை அதிமுகவிலிருந்து நீக்கிவிட்டனர்.

இரட்டை தலைமை
இதையடுத்து ஓ ராஜா செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது இரட்டை தலைமையால் கட்சி நாசமாகிறது. ஒரு தேர்தலிலும் வெற்றி பெறவில்லை. சசிகலா தலைமையேற்று நடத்தினால்தான் எல்லாம் சரிப்பட்டு வரும் என்றார். இதையடுத்து ஓ ராஜா , சசிகலாவின் ஆதரவாளராகவே செயல்பட்டு வருகிறார்.

ஒற்றைத் தலைமை
தற்போது அதிமுகவில் ஒற்றைத் தலைமை குறித்த பேச்சு எழுந்துள்ள நிலையில் தேனி மாவட்டத்தில் ஓபிஎஸ்ஸின் பண்ணை வீட்டில் நேற்று மாலை ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் மாவட்டச் செயலாளர் சையது கான் கலந்து கொண்டார். இந்த கூட்டத்தில் பொதுக் குழு கூட்டத்தில் என்ன செய்ய வேண்டும் என்பது குறித்து ஆலோசனை நடத்தியதாக தெரிகிறது.

59 உறுப்பினர்கள்
மேலும் இந்த கூட்டத்தில் 59 உறுப்பினர்கள் கலந்து கொண்டார்கள். தேனி மாவட்ட அதிமுக எடப்பாடி பழனிச்சாமிக்கு ஆதரவு என செய்திகள் வந்தது குறித்து கேட்ட போது 2 பேர் மட்டுமே அதிமுகவை சேர்ந்தவர்கள் என்றும் மற்றவர்கள் அதிமுகவிலிருந்து ஏற்கெனவே ஒழுங்கு நடவடிக்கைக்காக நீக்கப்பட்டவர்கள். அவர்களுடன் கைகோர்த்துக் கொண்டு இவர்களும் எடப்பாடிககு ஆதரவு தெரிவித்துள்ளார்கள் என சையது கான் தெரிவித்தார்.

பண்ணை வீட்டு வழியாக
இந்த கூட்டம் நடைபெற்றுக் கொண்டிருந்த போதே பண்ணை வீட்டு வழியாக சென்றுக் கொண்டிருந்த ஓ ராஜா, என்ன கூட்டமாக இருக்கிறதே என கருதி பண்ணை வீட்டுக்குள் சென்றார். அப்போது அவரிடம் அதிமுக நிர்வாகிகளான சையது கான் உள்ளிட்டோர் அதிமுகவில் நிலவி வரும் ஒற்றைத் தலைமை பிரச்சினை குறித்து பேசியதாக தெரிகிறது.
Recommended Video

விட்டுக் கொடுத்தார்
அதற்கு அவர் அண்ணன் நிறைய விட்டுக் கொடுத்தார். நான் ஆரம்பத்திலேயே சொன்னேன், கட்சிக்காக, தொண்டர்களுக்காக என விட்டுக் கொடுத்தார். ஆனால் இப்போது என்ன ஆயிற்று ஏமாந்து நிற்கிறார். சசிகலா கையில் கட்சி போனால்தான் ராணுவ கட்டுக்கோப்புடன் இருக்கும். எனவே இனி கட்சி அவர் கைக்கு செல்லும் என்றாராம். மேலும் தேனி மாவட்ட அதிமுகவினருக்கு அவர் ஆறுதல் கூறினார்.
-
இபிஎஸ் வர்றதுக்குள்ள இப்படியா.. எஸ்.பி.வேலுமணி முகத்துக்கு நேராக துரோகின்னு கத்திய அதிமுக நபர் இவரா? -
எல்லாத்தையும் நான் பாத்துக்குறேன்..நீங்க ஒத்துழைப்பு மட்டும் கொடுங்க! ர.ர.க்களுக்கு எடப்பாடி மெசேஜ்! -
தொண்டர்களுக்கு மதிப்பு கொடுங்க.. அதிமுக தலைவர்கள் திருத்தி கொள்ளணும்.. செல்லூர் ராஜூ ஒரே போடு! -
எடப்பாடி பழனிசாமிக்கு நிம்மதி.. IT விசாரணை கோரிய வழக்கை தள்ளுபடி செய்தது சென்னை உயர் நீதிமன்றம் -
விஜய்க்கு அரசு பாதுகாப்பு மேல நம்பிக்கை இல்லையா? தனி பாதுகாவலரோடு வருவது ஏன்? லாக் செய்த அதிமுக -
இதுவும் பெரிய திமிங்கலம் தான்.. அதிமுகவுக்கு அடுத்த ஆப்பு வைத்த விஜய்! சி.விஜயபாஸ்கரின் திடீர் மூவ்! -
SP Velumani: எல்லாத்துக்கும் ஒரு லிமிட் இருக்கு..சீண்டிய எடப்பாடி சீறிய வேலுமணி..வழியனுப்பகூட வரலையே -
இன்ஸ்டாவில் பொய் செல்லி.. ஆட்சிக்கு வந்துட்டாரு விஜய்! யாரும் கலங்க வேண்டாம்.. ஆறுதலாக பேசிய கேடிஆர் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம்












Click it and Unblock the Notifications