பரமசிவன் கழுத்தில் நெளிந்த பாம்பு! சூலாயுதத்தின் மீது ஏறி நின்று.. மெய்சிலிர்த்த பக்தர்கள்! வீடியோ
தேனி: தேனி மாவட்டம் கூடலூர் தாமரைகுளம் ஈஸ்வரன் திருக்கோவிலில் சூலாயுதத்தின் மேல் ஏறி சிவனை பாம்பு வழிபட்டதாக சமூக வலைதளங்களில் வீடியோ ஒன்று அதிகமாக பகிரப்பட்டு வருகிறது. ஒவ்வொரு வாரமும் வெள்ளிக்கிழமை தோறும் அந்த பாம்பு சிவலிங்கத்தை தரிசனம் செய்வதாக கூறுகின்றனர் அப்பகுதி மக்கள்.
தமிழகத்தை பொறுத்தவரை அவ்வப்போது பக்தர்களை மெய்சிலிர்க்க வைக்கும் சம்பவங்கள் நடைபெறுவது வழக்கம். வேப்பமரத்தில் இருந்து பால் வருகிறது, சிவபெருமானை பாம்பு வழிபடுகிறது என்பது போன்ற செய்திகள் வெளியாவது வழக்கம் தான்.
ஒரு சிலர் இதற்கு மறுப்பு தெரிவித்தாலும், பெரும்பாலான பக்தர்கள் அது கடவுளின் செய்கை தான் என கூறி மெய் சிலிர்க்கின்றனர். உண்மையாக இருந்தாலும், பொய்யாக இருந்தாலும் பக்தர்களுக்கு அது கடவுளாகவே தெரிகிறது.

அந்த வகையில் தேனியில் ஒவ்வொரு வாரமும் வெள்ளிக்கிழமை சிவன் கோவிலில் நாகப்பாம்பு வந்து சிவனை தரிசனம் செய்வதாக கூறுகின்றனர். இந்த நிலையில் நேற்று கோவிலுக்கு வந்த நாகப்பாம்பு சிவனின் கழுத்தில் ஏறியதோடு சூலாயுதத்தின் மீது ஏறி நின்று சிவனை தரிசித்ததாக வீடியோ சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வருகிறது.
தேனி மாவட்டம் கூடலூர் அருள்மிகு தாமரைக்குளம் ஈஸ்வரன் கோவிலில் வாரம் தோறும் வெள்ளிக்கிழமை அன்று நாகராஜா (பாம்பு) சிவலிங்கத்தை தரிசனம் செய்துவிட்டு செல்வதாக அப்பகுதி பொதுமக்கள் கூறி வந்தனர். இந்த பாம்பு வாரம்தோறும் வெள்ளிக்கிழமை தினங்களில் சிவன் சிலை மீது ஏறி வழிபாடு நடத்துவதாக கோவில் பூசாரிகள் மற்றும் அப்பகுதியைச் சேர்ந்த ஒரு சில பக்தர்கள் கூறியதை யாரும் நம்பவில்லை.
இந்த நிலையில் நேற்று வெள்ளிக்கிழமை என்பதால் நிச்சயமாக அந்தப் பாம்பு மீண்டும் கோவிலுக்கு வரும் என்று பூசாரிகளும் ஒரு சில பக்தர்களும் காத்திருந்தனர். அவர்களின் நம்பிக்கைக்கு ஏற்ற மாதிரி நேற்று மாலை சரியாக 6 மணி அளவில் மீண்டும் அந்த கோவில் கருவறைக்குள் நுழைந்த அந்தப் பாம்பு சிவன் சிலை மீது ஏறி, சிவனின் சூலாயுதத்தில் நின்று சிவனை வழிபட்டது.
இதனை பூசாரிகளும் பக்தர்களும் தங்களது செல்போனில் படம் பிடித்ததுடன், ஓம் நமச்சிவாய ஓம் நமச்சிவாய என்று முழக்கங்களை எழுப்பி வழிபாடு செய்தனர். வழிபாடு நடத்தி முடித்த பின்னர் அந்தப் பாம்பு வழக்கம் போல கோவில் கருவறையை விட்டு வெளியே சென்று விட்டது. இது தொடர்பான வீடியோ காட்சிகள் தற்போது சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது.
தேனி மாவட்டம் கூடலூர் தாமரைக்குளம் ஈஸ்வரன் திருக்கோவிலில் சூலாயுதத்தின் மீது ஏறி சிவனை வழிபடும் பாம்பு.. pic.twitter.com/oSEqXXVdOe
— Rajkumar Rajendran (@rajlegent) June 7, 2025
இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறும் போது," ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் குறிப்பிட்ட நேரத்தில் அந்த நாகப்பாம்பு இந்த கோவிலுக்கு வருகிறது என பலமுறை சொல்லி இருக்கிறோம். ஆனால் நிறைய பேர் அது பொய் என சொல்லி இருக்கிறார்கள். ஆனால் இதுவரை நாங்கள் கடவுளின் செயல் என்பதால் வீடியோ எடுக்கவில்லை.
இந்த நிலையில் சிவபெருமானுக்கு வழிபாடு செய்ய வரும் பாம்பு குறித்த செய்தியை உலகுக்கு தெரிவிக்க வேண்டும் என்பதற்காகவே தற்போது அதனை நாங்கள் வீடியோ எடுத்து வெளியிட்டுள்ளோம். மேலும் பாம்பு தரிசனம் செய்வது குறித்து ஏராளமானோர் நேரில் வந்து பார்த்தனர். அதற்குப் பிறகுதான் பலர் அதை நம்பினர். இன்று மட்டுமல்ல அடுத்த வாரம் வெள்ளிக்கிழமை வந்தாலும் சரியான நேரத்தில் அந்த பாம்பு வந்து சிவபெருமானை வழிபடும்" என உறுதியாக சொல்கின்றனர்.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications