நிர்வாண வீடியோவை காட்டியே.. ஏழை பெண்ணை விபச்சாரத்தில் தள்ளி.. தேனி அதிமுக பிரமுகரின் அட்டகாசம்..கைது
பெண்ணை மிரட்டி விபச்சாரத்தில் தள்ளிய அதிமுக பிரமுகர் கைது செய்யப்பட்டார்
தேனி: ஒரு பெண்ணின் ஆபாச வீடியோவை எடுத்து வைத்து கொண்டு, அவரை மிரட்டி மிரட்டியே பாலியல் தொழிலில் ஈடுபட வைத்துள்ளார் அதிமுக பிரமுகர் ஒருவர்!! இதற்கு அவரது மனைவியும் உடந்தை.. இந்த சம்பவம் தேனியில் பரபரப்பை தந்துள்ளது.
தேனி மாவட்டம் தேவாரத்தை சேர்ந்தவர் ராஜீவ்.. இவருக்கு 35 வயதாகிறது.. அதிமுகவின் தேவாரம் மாணவரணி செயலாளராக உள்ளார்.. கல்யாணம் ஆகி பிரியதர்ஷினி என்ற மனைவியும், ஒரு ஆண்குழந்தையும் உள்ளது.
இந்நிலையில் ராஜீவுக்கு ப்ரியா என்ற பெண்ணுடன் உறவு ஏற்பட்டது.. அந்த பெண் ராஜீவ் வீட்டருகே வசித்து வருபவர்.. 31 வயதாகிறது.. அவரும் கல்யாணம் ஆனவர்.. கணவர் பெயர் சோலைமுத்து.. ஒன்றரை வயதில் குழந்தை உள்ளது.

இவர்களுக்கு இடையில் ஏற்பட்ட பழக்கமானது, விரைவில் நெருங்கி பழகும் அளவுக்கு வந்தது.. ஒன்றரை வருடமாக பழகி வருகின்றனர்.. ஒரு கட்டத்தில் பிரியாவின் ஆபாச போட்டோக்கள், வீடியோக்களை செல்போனில் அனுப்புமாறு ராஜீவ் கேட்டுள்ளார்.. பிரியாவும் ராஜீவை நம்பி தன்னுடைய தனிப்பட்ட போட்டோக்கள், வீடியோக்களை அடிக்கடி அனுப்பி வைத்துள்ளார்.
இவை அனைத்தும் தன் செல்போனுக்கு வந்ததும், ராஜீவும், அவரது மனைவி சண்முகபிரியாவும் சேர்ந்து பிரியாவை மிரட்ட ஆரம்பித்தனர். தாங்கள் சொல்லும் நபருடன் உறவு வைத்து கொள்ள வேண்டும் என்று கட்டாயப்படுத்தினர்.. அதற்கு பிரியா மறுத்தால், வீடியோவை காட்டி காட்டியே பாலியல் தொழிலில் ஈடுபடுத்தி வந்துள்ளனர்.. இதன்மூலம் ஏராளமான பணத்தையும் அத்தம்பதியினர் சம்பாதித்து வந்துள்ளனர்.
இதுபோல, பலரிடம் இவரது ஆபாச போட்டோவை காட்டப்பட்டு, உறவு வைத்து கொள்ள வற்புறுத்தப்பட்டுள்ளது. தன் குடும்பம் வறுமையில் இருந்ததாலும், இரு பெண் குழந்தைகளை காப்பாற்ற வேண்டும் என்பதற்காகவும் பிரியா அத்தம்பதியினர் சொல்படி கேட்டு வந்துள்ளார். ஆனால், நாளுக்கு நாள் ராஜீவ் தம்பதியினரின் தொல்லை அதிகமாகி கொண்டே போனது. அதனால், பிரியா தேவாரம் போலீஸ் ஸ்டேஷனில் இதை பற்றி புகார் செய்தார்.
புகாரின் பேரில் விசாரணை நடத்திய போலீசார், தம்பதி இருவரையும் ஸ்டேஷனுக்கு வரவழைத்து விசாரித்தனர்.. அப்போது பிரியாவை மிரட்டி பாலியல் தொழிலில் ஈடுபட வைத்ததை ஒப்புக்கொண்டனர். இதையடுத்து அவர்களை போலீசார் கைது செய்தனர்.. பிரியா தற்போது உடல், மன ரீதியாக பாதிக்கப்பட்டுள்ளதால், சிகிச்சைக்காக தேவாரம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.. ராஜீவ் தம்பதியினர் இப்போது ஜெயிலில்!
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications