Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

தேனி தொகுதி காலியாகுமா? ஓபிஎஸ் மகன் வழக்கில் இனி என்ன நடக்கும்? இந்திரா காந்தி வழக்கு தீர்ப்பு என்ன?

Subscribe to Oneindia Tamil

தேனி: தீர்ப்பினை எதிர்த்து ஓபிஎஸ் மகன் மேல்முறையீடு போனால். இந்திரா காந்தி வழக்கில் அன்று வழங்கப்பட்ட தீர்ப்பினை உச்ச நீதிமன்றம் இந்த வழக்கில் வழங்குமா அல்லது தள்ளுபடி செய்யுமா என்பது விரைவில் தெரியவரும். எனவே தேனி தொகுதியை காலி என தேர்தல் ஆணையம் அறிவிக்குமா இல்லையா என்பது உச்ச நீதிமன்ற தீர்ப்புக்கு பிறகே தெரியவரும்.

தேனி லோக்சபா தொகுதியில் ஓபிஎஸ் மகன் ரவீந்திரநாத் வெற்றி பெற்றது செல்லாது என்று சென்னை உயர்நீதிமன்றம் நேற்று தீர்ப்பு அளித்துள்ளது. வேட்புமனுவில் சொத்து விவரங்களை மறைத்த குற்றச்சாட்டின் பேரில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

 Theni Lok Sabha Constituency Vacant? What will happen next in the OPS son case?

2019ம் ஆண்டு நடந்த நாடாளுமன்ற தேர்தலில் தேனி தொகுதியில் அதிமுக சார்பில் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தின் மகன் ரவீந்திரநாத் போட்டியிட்டார். தி.மு.க. கூட்டணியில் காங்கிரஸ் சார்பில் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் போட்டியிட்டார். அமமுக சார்பில் தங்கதமிழ் செல்வன் போட்டியிட்டார். மொத்தம் 30 வேட்பாளர்கள் தேனி நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிட்டனர்.

இதில், சுமார் 76 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் ரவீந்திரநாத் வெற்றி பெற்றார். அதிமுக தேனியை தவிர தமிழ்நாட்டில் எங்குமே கடந்த 2019ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் வெற்றி பெறவில்லை. இந்நிலையில் ரவீந்திரநாத்தின் வெற்றியை எதிர்த்து அந்த தொகுதியின் வாக்காளர் மிலானி (திமுகவைச் சேர்ந்தவர்) என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் தேர்தல் வழக்கு தொடர்ந்தார்.

மிலானி தனது மனுவில், "ரவீந்திரநாத் தனது தேர்தல் வேட்பு மனுவில் சொத்துகள், வருவாய் விவரங்களையும் மறைத்தார் என்றும் வாக்காளர்களுக்கு பணம் பட்டுவாடா செய்து தேர்தலில் வெற்றி பெற்றுள்ளார் என்றும் குற்றம்சாட்டிய மிலானி, தேர்தலில் ஓ.பி.ரவீந்திரநாத் வெற்றி பெற்றது செல்லாது என அறிவிக்க வேண்டும்" என்று கூயிருந்தார் . இந்த வழக்கை நீதிபதி எஸ்.எஸ்.சுந்தர் விசாரித்து வந்தார்.

இந்த வழக்கில் வியாழக்கிழமை உயர்நீதிமன்றம் தீர்ப்பு அளித்தது. அந்த தீர்ப்பு குறித்து நீதிபதி சுந்தர் கூறுகையில், "வேட்புமனுவில் சொத்துகளையும், வருமானங்களையும் ரவீந்திரநாத் வேண்டுமென்றே மறைத்திருக்கிறார். படிவம் 26-ல் இதை குறிப்பிடவில்லை. இது மக்கள் பிரதிநிதித்துவ சட்டப்பிரிவு 89, 100 (1) (ஏ) உள்ளிட்ட உட்பிரிவுகளுக்கு எதிரானது. இவரது வேட்புமனுவை தேர்தல் அதிகாரி ஏற்றுக் கொண்டது தவறு. தேனி தொகுதியிலும் தேர்தல் சின்னத்தை பிரதிபலிக்கும் விதமாக பரிசு பொருட்கள், பெண்களுக்கு இரட்டை இலை சின்னம் பொறிக்கப்பட்டுள்ள பச்சை கலர் சேலையுடன், ரொக்கப்பணம் தன் சகோதரர் பிரதீப்குமார் மூலமாக வழங்கி இருக்கிறார். இதுதொடர்பான வீடியோ காட்சி சமூக வலைதளங்களில் வெளியாகியது.

இதுதவிர தேர்தல் செலவுக்காக தன் சொத்தை அடமானம் வைத்து ரூ.10 கோடி கடன் வாங்கி உள்ளார். ஆனால், இந்த தொகையை குறைத்து வேட்புமனுவில் காட்டி இருக்கிறார். விவசாயத்தில் கிடைக்கக் கூடிய வருமானத்தை மட்டும் வேட்புமனுவில் ரவீந்திரநாத் காட்டியிருக்கிறார். ஆனால் ரியல் எஸ்டேட், வட்டித் தொழில் மூலம் கிடைக்கும் வருமானத்தை குறிப்பிடாமல் ரவீந்திரநாத் மறைத்துள்ளார். இதுகுறித்து புகார் அளித்தும் தேர்தல் அதிகாரி முறையாக விசாரிக்கவில்லை. எனவே, ரவீந்திரநாத் வெற்றியை செல்லாது என்று அறிவிக்க வேண்டும் என்று மனுதாரர் வழக்கில் கூறியுள்ளார்.

மக்கள் பிரதிநிதித்துவ சட்டப்பிரிவு 100-ன்படி, வேட்பாளர், அவரது முகவர் தேர்தல் முறைகேடு செய்தாலோ, உண்மையை வேட்புமனுவில் மறைத்தாலோ, அதற்காக தேர்தல் வெற்றியை ரத்து செய்ய முடியும். பிரிதிவிராஜ் சிங் வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம் வேட்புமனுவில் விவரங்கள் மறைக்கப்பட்டது நிரூபணமானால், அந்த தேர்தல் வெற்றியை செல்லாது என்று நீதிமன்றம் அறிவிக்கலாம் என்று 2017-ம் ஆண்டே தீர்ப்பு அளித்துள்ளது. அதன்படி, தன் வருமானம், சொத்து விவரம் ஆகியவற்றை மறைத்துள்ளது நிரூபிக்கப்பட்டுள்ளதால், ரவீந்திரநாத் குமார் தேர்தல் வெற்றியை செல்லாது என்று அறிவிக்கிறேன்" என நீதிபதி சுந்தர் தீர்ப்பு அளித்தார். அதேநேரம் தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்வதற்காக 30 நாட்கள் தீர்ப்பு நிறுத்தி வைக்கப்படுவதாகவும் நீதிபதி தீர்ப்பு அளித்துள்ளார்.

4 வருடங்களுக்கு பிறகு ஓபிஎஸ் மகன் ரவீந்திரநாத் வெற்றி செல்லாது என்று அறிவிக்கப்பட்டுள்ளதை தங்கதமிழ்செல்வன் (திமுக), ஈவிகேஎஸ் இளங்கோவன் (காங்கிரஸ்) வரவேற்றுள்ளனர். இந்நிலையில் ஓபிஎஸ் மகன் ரவீந்திரநாத் பெற்ற வெற்றி செல்லாது என்று அறிவிக்கப்பட்டுள்ளதால் தேனி தொகுதி காலியாகுமா என்றால் இல்லை. அவர் மேல்முறையீடு செய்ய 30 நாட்கள் அவகாசம் அளித்துள்ளது சென்னை உயர்நீதிமன்றம்.

இப்போது 30 நாட்களில் ரவீந்திரநாத் மேல்முறையீடு செய்யவில்லை என்றால், தேனி தொகுதியில் இடைத்தேர்தல் அறிவிப்பு வெளியாகும் என தெரிவிக்கிறார் அரசு வழக்கறிஞர் அருண். கொரோனா பெருந்தொற்று காரணமாக 3 ஆண்டு காலம் வழக்கு நடைபெறவில்லை. ஆனால் கடந்த ஓராண்டு காலமாக துரிதமாக வழக்கு நடந்தது. தற்போது வழக்கில் திர்ப்பு வந்துள்ளது. ரவீந்திரநாத் மேல்முறையீடு செய்தால், என்னவாகும் என்று பல்வேறு வழக்குகளை சுட்டிக்காட்டுகிறார்கள் சட்ட வல்லுநர்கள். 1971ம் ஆண்டு ரேபரலி தொகுதியில் இந்திரா காந்தி பெற்ற வெற்றி செல்லாது என அலகாபாத் உயர்நீதிமன்றம் 1975 ஜூனில் உத்தரவிட்டது. இதற்கு எதிராக இந்திராகாந்தி உச்ச நீதிமன்றம் சென்றார். உயர்நீதிமன்ற உத்தரவுக்கு நிபந்தனைகளுடன் தடையை விதித்த உச்ச நீதிமன்றம், இந்திரா காந்தி பிரதமராக தொடரலாம் என்றும், அவரால் நாடாளுமன்றத்தில் வாக்களிக்க முடியாது என்றும் தெரிவித்தது.

அதற்கு மறு நாளே இந்திரா காந்தி அவசர நிலையை பிரகடனம் செய்தார். இதனை தொடர்ந்து இதுபோன்ற பல வழக்குகள் உச்ச நீதிமன்றம் சென்ற போது, ஒன்று தள்ளுபடி செய்யப்பட்டிருக்கிறது. அல்லது நிலுவையில் இருக்கிறது. சமீபத்தில் கேரளாவில் கிறிஸ்தவர் என்பதை மறைத்து போட்டியிட்டதால் தேவிகுளம் சிபிஎம் எம்எல்ஏ ராஜாவின் வெற்றி செல்லாது என அம்மாநில உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்தது. அவர் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்த போது,சில நிபந்தனைகளுடன் ஜூலை வரை இடைக்கால தடையை உச்ச நீதிமன்றம் விதித்தது.

மேல்முறையீடு தொடர்பாக முடிவு எடுக்கும் வரை, அவர் எம்எல்ஏவாக தொடரலாம் என்றும் உச்ச நீதிமன்றம் தொடரலாம் என்று அறிவித்தது எனவே இந்திரா காந்தி தீர்ப்பு படி ரவீந்திரநாத் வழக்கில் தீர்ப்பு வருமா அல்லது தள்ளுபடியாகுமா என்பது விரைவில் தெரியவரும்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+