தேனி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

ஆள்மாறாட்டம் செய்து நீட் தேர்வு.. சென்னை மாணவர் உதித் சூர்யா மீது பரபரப்பு புகார்

Google Oneindia Tamil News

சென்னை: நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் செய்து தேனி மருத்துவக் கல்லூரியில் சென்னை மாணவர் ஆதித் சூர்யா சேர்ந்ததாக எழுந்த புகாரையடுத்து உயர்மட்ட விசாரணைக்கு அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர்.

சென்னையைச் சேர்ந்த மாணவர் உதித் சூர்யா கடந்த 2018-ஆம் ஆண்டு மும்பையில் நீட் தேர்வு எழுதினார்.அவர் வெற்றி பெற்றதையடுத்து தேனி அரசு மருத்துவக் கல்லூரியில் சேர்ந்தார்.

அவரது ஹால்டிக்கெட்டில் (நுழைவுச் சீட்டு) இருந்த புகைப்படமும் தற்போதுள்ள முகமும் மாறுபட்டு இருந்தது. இதனால் சந்தேகமடைந்த தேனி மருத்துவ கல்லூரி அதிகாரிகள் அவரிடம் விசாரணை நடத்தினர்.

தேர்வு முகமை

தேர்வு முகமை

அப்போது அவர்கள் முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்தார். இதனால் அவரது நுழைவுச்சீட்டு, புகைப்படம், மதிப்பெண் சான்றிதழ் ஆகியவற்றை டெல்லியில் உள்ள தேசிய தேர்வு முகமைக்கு அதிகாரிகள் அனுப்பி வைத்தனர்.

ஆள்மாறாட்டம்

ஆள்மாறாட்டம்

சுகாதாரத் துறை அதிகாரிகளுக்கும் இது குறித்து தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து கல்லூரி நிர்வாகம் கூறுகையில் சென்னையை சேர்ந்த மாணவர் ஒருவர் ஆள்மாறாட்டம் செய்து நீட் தேர்வு எழுதி இருப்பதாக எங்களுக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது.

மும்பை

மும்பை

அவரது தந்தை சென்னையில் டாக்டராக பணிபுரிந்து வருகிறார். இதுகுறித்து அந்த மாணவரின் பெற்றோரிடம் விசாரணை நடத்தியபோது தேர்வு எழுதியது தங்கள் மகன்தான் என குறிப்பிட்டிருந்தனர். தமிழகத்தில் ஏராளமான நீட் தேர்வு மையங்கள் உள்ள நிலையில் மும்பையில் எதற்காக தேர்வு எழுதினீர்கள் என கேட்டோம்.

4 நாட்கள் கல்லூரிக்கு வரவில்லை

4 நாட்கள் கல்லூரிக்கு வரவில்லை

அதற்கு அவர்கள் தமிழகத்தில் 2 முறை தேர்வு எழுதி தோல்வியடைந்ததாலேயே வேறு மாநிலத்தில் தேர்வு எழுத முடிவு செய்ததாக கூறியுள்ளனர். எனினும் அவர்கள் கூறுவதில் நம்பகத்தன்மை இல்லை. இந்த மாணவர் 4 நாட்களாக கல்லூரிகள் வரவில்லை என்று தெரிவித்தனர்.

மருத்துவக் கல்லூரி இயக்ககம்

மருத்துவக் கல்லூரி இயக்ககம்

இதுகுறித்து மருத்துவக் கல்லூரி இயக்ககத்தின் இயக்குநர் நாராயணபாபு செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில் சென்னையைச் சேர்ந்த உதித்சூர்யா என்ற மாணவர் முறைகேட்டில் ஈடுபட்டதாக புகார் வந்துள்ளது. 4பேராசிரியர்கள் கொண்ட குழு விசாரணை நடத்தும். விசாரணையில் மாணவர் மீது குற்றம் நிரூபிக்கப்பட்டால் நடவடிக்கை எடுக்கப்படும். மனஉளைச்சல் காரணமாக கல்லூரியில் இருந்து அந்த மாணவர் உதித் விலகி விட்டார் என்றார் நாராயணபாபு.

English summary
Theni Medical college officials suspects a medical college student who writes neet. Investigation going on.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X