தேனியில் அபூர்வ ஜோடி.. காதலன் போனதுமே பின்னாடியே சென்ற இளம்பெண்.. கரெக்ட்டா அதே நாளில் நடந்த சம்பவம்
தேனி: இளம்வயது தற்கொலைகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன.. என்ன செய்வது என்று தெரியமால் தவறான முடிவை எடுக்கும் இதுபோன்றவர்களுக்கு, ஆறுதலான வார்த்தையும் சிகிச்சைக்கு சரியான வழிகாட்டுதலும் தேவையாக உள்ளது.. எந்த தற்கொலையை தடுப்பதற்கும், அனைவருக்குமே பங்கு உள்ளது. எனினும் தற்கொலைகளின் எண்ணிக்கை பெருகி வருவதாக மனநல மருத்துவர்கள் கவலையுடன் கூறுகிறார்கள்.. பயம், முதிர்ச்சியின்மை, புரிதலின்மை போன்ற பல்வேறு காரணங்கள் இதுபோன்ற இளம் மரணங்களுக்கு காரணங்களாக சொல்லப்படுகின்றன. இந்நிலையில், இப்போது தேனியில் நடந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி வருகிறது.
தேனி மாவட்டம் குளச்சல் அருகே உள்ளது கணேசபுரம் என்ற பகுதி.. இங்கு வசித்து வரும் தம்பதி செல்லத்துரை - புஷ்பம். இவர்களுக்கு 4 மகள்களும், ஒரு மகனும் உள்ளனர்.

கடந்த 11 வருடங்களுக்கு முன்பே செல்லத்துரை இறந்து விட்டார்... பிறகு 4 பிள்ளைகளையும் பாடுபட்டு வளர்த்து வந்தார் புஷ்பம்.. இதில், புஷ்பத்தின் 3 மகள்களும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர்... வித்யா என்ற கடைசி மகளுக்கு 23 வயதாகிறது.. இவர் சற்று மனநலம் குன்றியவர்.. மாற்றுத்திறனாளியும்கூட..
இதனால் புஷ்பம் தன்னுடைய ஒரே மகன் மற்றும் வித்யாவுடன் வசித்து வந்துள்ளார்.. இவர்கள் வசித்து வரும் பகுதியிலேயே ஒரு தென்னை நார் கம்பெனி செயல்பட்டு வருகிறது.. எனவே, வித்யா இந்த கம்பெனியில் வேலை பார்த்து வந்தார். அப்போதுதான், அருண் என்பவர் வித்யாவுக்கு அறிமுகமானார்.. மார்த்தாண்டம் பகுதியை சேர்ந்தவர் அருண்..
அருண் - வித்யா காதல்
26 வயதாகும் அருண், அந்த கம்பெனியில் டிரைவராக பணியாற்றி வருபவர்.. அருணின் 3 வயதிலேயே அப்பா, அம்மா, தங்கை என 3 பேருமே ஒரு வாகன விபத்தில் இறந்துவிட்டனர்.. எனவே, அருணை அவரது பாட்டி வளர்த்து வந்தார்.. சமீபத்தில் அருணின் பாட்டியும் இறந்துவிட்டார்.. எனவே, உறவினர்கள் ஆதரவில் வளர்ந்து வருகிறார்.
ஒரே கம்பெனியில் பணியாற்றியதால், அருணும், வித்யாவும் நட்பாகி, காதலிக்க துவங்கினர்.. இந்த காதல் விவகாரம் அருண் குடும்பத்துக்கு தெரியவந்து கொந்தளித்தனர்.. கடுமையான எதிர்ப்பையும் காட்டினார்கள்..
மார்த்தாண்டம் அருண்
இதனால் கடும் விரக்தியும், அதிருப்தியும் அடைந்த அருண், கடந்த மாதம் 5-ம் தேதி தற்கொலை செய்து கொண்டார். ஆனால், 3 நாட்களாகவே இதுகுறித்து அங்குள்ளவர்களுக்கு தெரியவே இல்லை.. அருண் வீட்டின் கதவு திறக்காமல் பூட்டிய நிலையில் காணப்பட்டது.,. பிறகுதான் வீட்டிற்குள்ளிருந்து துர்நாற்றம் வீசியதை தொடர்ந்து, அப்பகுதி மக்கள் மார்த்தாண்டம் போலீசுக்கு தகவல் தந்து வரவழைத்தனர்..
போலீசார் விரைந்து வந்து, வீட்டின் கதவை உடைத்துப் பார்த்த போது அருண் ஃபேனில் தூக்கில் தொங்கி சடலமாக காணப்பட்டார். அவரது உடல் அழுகி துர்நாற்றம் வீசியது. அருணின் தற்கொலைக்கு பிறகு, வித்யா மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகினார்... எந்நேரமும் அழுதுகொண்டேயிருந்தார்.
நேற்று காலை வித்யா வீட்டில் சமையல் வேலைகளை முடித்து விட்டு பாத்ரூமுக்கு சென்றிருக்கிறார்.. ஆனால், நீண்ட நேரமாகியும் அவர் வெளியே வரவேயில்லை.. இதனால் சந்தேகமடைந்த உறவினர்கள் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தனர். அப்போது அங்கு கழிவறையில் துப்பட்டாவால் தூக்குப்போட்ட நிலையில் வித்யா தொங்கிக் கொண்டிருந்தார்..

பதறிய உறவினர்கள்
இதைப்பார்த்து அலறிய உறவினர்கள் வித்யாவை மீட்டு குளச்சல் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
இதுகுறித்து தகவல் அறிந்து வந்த குளச்சல் போலீசார், வித்யா உடலை மீட்டு போஸ்ட் மார்ட்டம் செய்வதற்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.. தற்போது இந்த தற்கொலை தொடர்பான விசாரணையையும் மேற்கொண்டு வருகிறார்கள்.
உயிருக்கு உயிராக நேசித்த ஜோடி
தாய் தந்தை, தங்கை, பாட்டியை இழந்து விரக்தியில் இருந்த அருணும், மாற்றுத்திறனாளியான வித்யாவும் உயிருக்கு உயிராக நேசித்து வந்துள்ளனர்.. இதனால் ஒருவரது இழப்பை இன்னொருவரால் தாங்க முடியாமல், 2 பேருமே இன்று உயிரிழந்துவிட்டனர்.. இதில் பெரும் சோகம் என்னவென்றால், கடந்த மாதம் 5ம் தேதிதான், அருண் தற்கொலை செய்துகொண்டார்.. அதே தேதியில் வித்யாவும் தற்கொலை செய்துகொண்டுள்ளார்..!!












Click it and Unblock the Notifications